சிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார் !

சிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Sivakumarசிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார் !

அக்டோபர் -14-ந்தேதி காலை 9மணிக்கு
எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையபடுத்தி இன்பா என்ற இளைஞர் எழுதிய “சிவாஜி ஆளுமை பாகம் நான்கு” என்ற நூலை, நடிகர் சிவகுமார் அவர்கள் வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.மேலும்,முன்னாள் தமிழக அரசு செயலர் ராஜேந்திரன்,முனைவர் ராஜாராம். நடிகர் சித்ரா லட்சுமணன்,மக்கள் குரல் ராம்ஜி , கொடைக்கானல் காந்தி எத்திராஜ் கல்லூரி முதல்வர் கோதை ,வரலாற்று துறை தலைவர் கவுசல்யா குமாரி ,எழுத்தாளர் .ம .ஸ்வீட்லின், எழுத்தாளர் லதா சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய சிவக்குமார் சிவாஜியின் பட வசனங்களையும், ராமாயண, மாகபாரத மேற்கோள் பாடல்களையும் தன்குரலில் பேச அரங்கம் அதிர்ந்தது.

அவர் ஆற்றிய உரையிலிருந்து…

இந்த நிகழ்வு இங்கு நடப்பதற்கான முழுமுதல் காரணம் இன்பா. நான் சிவாஜியுடன் நிறைய படங்கள் நடித்திருந்தாலும், சிவாஜி பற்றி அனைத்து விஷயங்களும் புள்ளி விவரங்களுடன் தன் புத்தகத்தில் அவர் சொல்லியிருந்தார். சிவாஜி பற்றி முழுமையான ஒரு உரை நிகழ்த்த நினைத்த போது இன்பாவின் புத்தகம் தான் உறுதுணையாக இருந்தது. கடந்தாண்டு நடந்த உரையில் பதினைந்தாயிரம் பேர் முன்னிலையில் சிவாஜியின் 35 ஆண்டு கால சினிமாக்களை ஒரே மூச்சில் ஒரே டேக்கில் 75 நிமிடங்கள் பேசினேன்.

நான் பிறந்த காலங்களில் சினிமா பார்ப்பது என்பது பீடி, சிகரெட், தண்ணி மாதிரி பாவச்செயல். தீபாவளி பொங்கல் மாதிரி பண்டிகைகளில் அதுவும் பகல் காட்சி மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும். அந்த மாதிரி ஒரு பண்டிகை நாளில் 1956ல் “வணங்காமுடி” படம் பார்த்தேன். வசனம் எழுதியவர் ஏ கே வேலன் நடித்தவர் நம்ம வாத்தியார் சிவாஜி. உயிர் ,உடல் என எங்கும் நீக்கமற நடிப்பு ஊறிப்போனவர். சிற்பி இளவரசியை காதலிக்ககூடாது என சொல்ல இவர் காதலிப்பார் இவரை நாடு கடத்த, மன்னன் உத்தரவிட அதனை எதிர்த்து வசனம் பேசுவார். அரஙகமே அதிரும். அப்போதே சாவதற்குள் அந்த மனிதனை பார்த்துவிட்டு சாக வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2 வருடங்களில் 1958 ல் சிவாஜிக்கு நெருக்கமானவர் குடும்பத்தில் கோயம்புத்தூரில் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். காலம் ஓடியது, ஓவிய கல்லூரி சேர்ந்து ஓவியம் கற்றேன். 1965 ல் நடிப்புதுறைக்குள் வந்தேன். மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சிவாஜியின் மூத்த மருமகனாக நடித்தேன். அதே நேரத்தில் கந்தன் கருணை படத்தில் முருகனுக்கு 36 பேரைப்பார்த்து கடைசியாக நான் தேர்வாகி நடித்தேன். அதில் தூதுவனாக வீரபாகுவாக என் வாத்தியார் சிவாஜி நடித்தார். அவரும் அசோகனும் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது போய்ப் பார்த்தேன். அவர்கள் இருவரும் பேசிய வசனத்தை பார்த்து மிரண்டுவிட்டேன். சினிமாவில் எதுவும் தெரியாமல் ஒப்பேத்த முடியாது என முடிவு செய்து சொந்தமாக நாடக ட்ரூப் ஆரம்பித்தேன் அது முடியமால் மேஜர் சுந்தர் ராஜன் ட்ரூப்பில் இணைந்து இந்தியா முழுக்க ஆயிரம் நாடகங்கள் நடித்தேன். அப்போது தான் மனப்பாடம் செய்யும் கலையை கற்றேன். 67 வயதில் கம்பராமயணம் 15 ஆயிரம் படல்கள் கற்று அதனை சுருக்கி உரை நிகழ்த்தினேன். மகாபாரதம் 4 வருடங்கள் ஆராய்ச்சி செய்து கற்று 6500 மாணவர்கள் முன்னே உரை நிகழ்த்தினேன். இதற்கெல்லாம் ஆசனாக இருந்தவர் சிவாஜி. என்னால் இது முடிகிறதென்றால் உங்களால் இதையும் தாண்ட முடியும். என்னை மாதிரி நூறு மடங்கு சாதனைகளை நீங்கள் புரிய முடியும்.

எவராவது, நான் மனனம் செய்த சாதனையை முறியடித்து, கற்று தேர்ந்து சாதனை புரிந்தால் இன்னும் சந்தோஷப்படுவேன்.

இப்போது உரையின் முடிவுக்கு வந்துவிட்டோம்.

வாத்தியார் சிவாஜிக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டது. கலை உலகம் திரண்டு விழா எடுத்தது. அம்மையார் ஜெயலலிதா தலைமை தாங்கினார் அப்போது வாசித்த வாழ்த்து மடலை இப்போது படிக்கிறேன்.

பள்ளிப் படிப்பு இல்லை,
பரம்பரை பெருமை இல்லை,
இளமையில் வறுமையை இறுகத் தழுவியவன்,
ஆயினும் கலை உலக நாயகி கலைவாணியின் ஆசி பெற்று திரைஉலகில் அழியாது இடம்பிடித்து விட்டான்,
ஒருசாண் முகத்தில் ஒராயிரம் பாவனை காட்டி, சிம்மக்குரலில் தீந்தமிழ் பேசி, அவன் படைத்த பாத்திரங்கள் திரையில் அசைகின்ற ஓவியங்கள்,
கர்ணனாக, கட்டபொம்மனாக, சிவாஜியாக, செங்கூடடுவனாக, அரிச்சந்திரனாக , அசோகனாக, அப்பராய், ஐந்தாம் ஜார்ஜாக, வ ஊ சி யாக, வாஞ்சியாக அவன் ஏற்ற வேடங்கள் எங்களுக்கு பாடங்கள். நடக்கும் நடையில் நானூறு வகை காட்டினான். மொத்தத்தில் நவரசங்களில் நமக்கு நவராத்திரி காட்டிவிட்டான்.

கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என மானிட வரலாறு சொல்ல,

சிவாஜிக்கு முன் சிவாஜிக்கு பின் என தமிழக திரைவரலாறு சொல்லும்.

வாழ்க சிவாஜி நாமம்!
ஓங்குக சிவாஜி புகழ்! நன்றி.

பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி

பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Chandiniஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு.

நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே .. அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினி க்கு தனி இடம் உண்டு.

சித்து +2 வில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் பெரிய நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது.

இவரது நடிப்பை கண்டு வியந்த பாலாஜி சக்திவேல் , இவரை அணுகி ஒரு கதை சொல்ல , அந்த கதை சாந்தினிக்கு மிகவும் பிடித்த விட.. உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் .

அந்த படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. மேலும் மென்மையான உணர்வுகளை அழகான திரைப்படமாக்கும் ராதாமோகன் சாந்தினியின் நடிப்புத் திறனை கவனித்து

தனது புதியபடத்தில் நடிக்க அழைத்துள்ளார். எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாந்தினி கதாநாயகியாக நடிக்கிறார். சாந்தினியின் படங்கள் வரிசையில் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு புறம் பாலாஜி சக்திவேல் படம், மறுபுறம் ராதாமோகன் படம் என சாந்தினியின் வரிசையான படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. ஒரு நாயகியாக சினிமாவில் நீண்டகாலம் சாந்தினி நிலைத்து வருவதற்கு அவரது திறமை மட்டுமே பிரதான காரணம்.

மேற்கூரிய படங்கள் தனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாக இருக்கும் என்கிறார் சாந்தினி.

கலாம் பிறந்தநாளில் ரஜினி-விஜய்-அஜித் ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள்

கலாம் பிறந்தநாளில் ரஜினி-விஜய்-அஜித் ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vivek request to Rajini Vijay and Ajith fansசினிமா என்றில்லாமல் சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருபவர் நடிகர் விவேக்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வேண்டுகோள் படி ஒரு கோடி மரக்கன்றுகளைக் கடந்த சில வருடங்களாக நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தெரிவித்துள்ளதாவது…

அக்15 பாரத ரத்னா கலாம் ஐயா பிறந்த நாளை ஒட்டி அனைத்து தலைவர்/தளபதி/தல ( நாம் அன்புடன் வைத்த செல்லப் பெயர்கள்) ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அதை சமூகத் தளங்களில் பதிவு செய்து trend செய்ய வேண்டுகிறேன்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து நெட்டிசன்கள் #plantforkalam என்ற ஹாஸ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

டிரெண்டிங் மட்டுமில்லாமல் நிஜத்திலும் மரத்தை நட்டு பாதுகாத்து வந்தால் அனைவருக்கும் நல்லதே.

Actor Vivek request to Rajini Vijay and Ajith fans

விக்ரம் 58 படத்தில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

விக்ரம் 58 படத்தில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cricketer Irfan Pathan debut with Vikram in his 58th filmகமல் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்திருந்தார் விக்ரம். இந்த படம் படு தோல்வியை தழுவியது.

தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இது விக்ரமின் 58 படமாக உருவாகிவருகிறது.

விக்ரமுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

லலித் குமார் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இவருடன் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கிறதாம்.

இதில் விக்ரம் 10க்கும் மேற்பட்ட கெட்டப்பில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் இர்பான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.

Cricketer Irfan Pathan debut with Vikram in his 58th film

சினிமாவில் ஹர்பஜன் சிங்; சந்தானத்தின் ‘டிக்கிலோனா’வில் கூட்டணி

சினிமாவில் ஹர்பஜன் சிங்; சந்தானத்தின் ‘டிக்கிலோனா’வில் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cricketers Harbhajan Singh to make his Tamil debut with Santhanamஇந்திய கிரிக்கெட் அணியில் எப்போதும் ஹர்பஜன் சிங்குக்கு தனிப்பெயர் உண்டு. மேலும் இவர் தமிழக சினிமா ரசிகர்களிடையே படு பிரபலம்.

அதற்கு காரணம்… இவர் அப்போது ட்விட்டரில் தனது பதிவுகளை தமிழ் மொழியில் பதிவிடுவார்.

இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவதை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்… என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் கேஜேஆர் ஸ்டுடியோஸ், டிக்கிலோனா படக்குழு, சந்தானம் உள்ளிட்டோருக்கு நன்றி. தலைவர், தல, தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சந்தானம் மூன்று கேரக்டர்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இப்படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்குகிறார்.

Cricketers Harbhajan Singh to make his Tamil debut with Santhanam

அஜித் படத்தில் நடிக்க ஆர்ட்டிஸ்ட் தேவை.?; கடுப்பான போனி கபூர்

அஜித் படத்தில் நடிக்க ஆர்ட்டிஸ்ட் தேவை.?; கடுப்பான போனி கபூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

boney kapoorநேர் கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் அஜித்துடன் இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு தற்காலிகமாக தல 60 எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேவை என ஒரு விளம்பரம் வேகமாக பரவியது.

ஆனால் இதை படத்தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.

இப்படியொரு தவறான செய்தியை வெளியிட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows