ஞானவேல்ராஜா-சிவகார்த்திகேயன்-விக்னேஷ் சிவன் புதிய கூட்டணி

ஞானவேல்ராஜா-சிவகார்த்திகேயன்-விக்னேஷ் சிவன் புதிய கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Gnanavel Rajaவேலைக்காரன் படத்தை முடித்துவிட்டு பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகயேன்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தையும் அவரின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தின் மூலம் முதன்முறையாக ஏஆர். ரஹ்மானுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் இந்த படங்களை முடித்துவிட்டு ஸ்டூடீயோ கிரீன் தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்.

இனி வருடத்திற்கு இரண்டு படங்களை கொடுப்பேன் என சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்டிவி ஆபிஸ் முன்பு ரசிகர்கள் ஆர்பாட்டம்; சூர்யா அட்வைஸ்

சன்டிவி ஆபிஸ் முன்பு ரசிகர்கள் ஆர்பாட்டம்; சூர்யா அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya artசெல்வராகவன் படத்தை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இப்படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை அறிந்த சன் மியூசிக் தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து பேசியிருந்தனர்.

இதனையடுத்து அந்த தொகுப்பாளினிகளை ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், சூர்யாவை கிண்டலடிக்கும் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி அலுவலகம் முன்பு இன்று சூர்யா ரசிகர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் #AskSorrySuntv #BANFrankaSollata @SuriyaFansClub உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்டாக்கினர்.

இதனையறிந்த சூர்யா தன் ட்விட்டரில் பக்கத்தில் தன் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார். இதோ அந்த பதிவு…

Suriya Sivakumar‏Verified account @Suriya_offl
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. #AnbaanaFans

Suriya fans protest in front of Sun TV office to ban Franka sollata show

விஜய் 63 படத்தை இயக்கும் தீரன் பட இயக்குனர் வினோத்

விஜய் 63 படத்தை இயக்கும் தீரன் பட இயக்குனர் வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and vinothசதுரங்க வேட்டை என்ற மாபெரும் வெற்றி படத்தை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார் வினோத்.

கார்த்தி நடித்த இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இப்படம் கடந்த 2017ல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இப்படத்தை பார்த்த நடிகர் விஜய், இயக்குனரை அழைத்து பாராட்டினாராம். மேலும் தனக்கான ஒரு கதையை உருவாக்க சொல்லியிருந்தாராம்.

இதனையடுத்து விரைவில் விஜய் 63 படத்தை வினோத் இயக்குவார் என கூறப்படுகிறது.

மீண்டும் இணையும் கார்த்தி-ரகுல் பிரித்திசிங்; இசை ஹாரிஸ் ஜெயராஜ்

மீண்டும் இணையும் கார்த்தி-ரகுல் பிரித்திசிங்; இசை ஹாரிஸ் ஜெயராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Harris jayarajபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரிக்கும் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

இப்படத்தை அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்த ஜோடி ஏற்கெனவே தீரன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ரஜத் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவிருக்கிறார்.

இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் கார்த்தி படத்திற்கு இசையமைப்பது இதுவே முதன்முறையாகும்.

25 ஆண்டுகளுக்கு பிறகு கேணி படத்தில் இணைந்த யேசுதாஸ்-எஸ்.பி.பி.

25 ஆண்டுகளுக்கு பிறகு கேணி படத்தில் இணைந்த யேசுதாஸ்-எஸ்.பி.பி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yesudas and SPBப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேணி”.

தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்.

இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். வசனம், தாஸ் ராம்பாலா எழுதியிருக்கிறார்.

முழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு “கேணி” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு நௌஷாத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். “விக்ரம் வேதா”படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை அமைக்கிறார்.

“தளபதி” படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஜேசுதாஸ் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். ராஜாமுகமது எடிட்டிங் செய்துள்ளார். பாடல்களை பழனிபாரதி எழுதியுள்ளார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் எம்.ஏ. நிஷாத் கூறுகையில், “கேணி எனது முதல் தமிழ்ப்படம். இதற்கு முன் கேரளாவில் நான் இயக்கிய ஏழு படங்களுமே சமூக சிந்தனை கொண்ட படங்கள் தான்.

அந்த வகையில் கேணியும் முழுக்க முழுக்க இந்த சமூகத்திற்கான படமாகவே இருக்கும். எதிர்காலத்தில் மக்களுக்கு பிரதானமான பிரச்சனையாக மாறப்போகிற தண்ணீர் குறித்தான விழிப்புணர்வை நிச்சயமாக “கேணி” ஏற்படுத்தும். காற்றைப் போல, வானம் போல தண்ணீர் எல்லா உயிரினங்களுக்குமே பொதுவானது.

அதை உரிமை கொண்டாடவும், அணைகள் கட்டி ஆக்ரமிக்கவும் யாருக்கும் உரிமையில்லை என்பதை இப்படத்தின் வாயிலாக ஆணித்தரமாக பேசியிருக்கிறோம். அதே சமயம் கமர்சியல் சினிமாவிற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இத்திரைப்படத்தில் நிச்சயமாக இருக்கும்” என்றார்.

10 ஹீரோவை மறுத்த பிரியதர்ஷன் உதயநிதிக்கு ஓகே சொன்னார்..: சமுத்திரக்கனி

10 ஹீரோவை மறுத்த பிரியதர்ஷன் உதயநிதிக்கு ஓகே சொன்னார்..: சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanidhi stalinமூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ”நிமிர்”. பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நான் நாடகத்தில் இருந்து வந்தவன், காஞ்சிவரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தில் இருந்து வந்ததால் நடிப்பு கொஞ்சம் மிகையாகவும் இருந்தது, பிரியதர்ஷன் சார் தான் எப்படி யதார்த்தமாக நடிக்கணும்னு சொல்லி கொடுத்தார் என்றார் நடிகர் ஜார்ஜ்.

பிரியதர்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர். அவர் படத்தில் 2 நொடிகள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்திருப்பேன். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் இவ்வளவு சாதாரண மனிதராக இருக்கிறார் உதயநிதி. இந்த படத்தில் நான் தான் ஜூனியர், எல்லோருமே என்னை விட பெரிய சாதனையாளர்கள் என்றார் நாயகி பார்வதி.

தமிழில் நிமிர் எனது 3வது படம். இந்த படத்தில் எப்போதும் உன்மேல் ஞாபகம், நெஞ்சில் மாமழை என இரண்டு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். நான் பிரியதர்ஷன் படத்துக்கு இசையமைக்கிறேன் என சொன்னதை யாரும் நம்பவில்லை என்றார் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்.

பிரியதர்ஷன் சாருடன் நான் வேலை செய்யும் 4வது படம். விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் இருந்து நான் சினிமாவில் இருக்கிறேன்.

பிரியதர்ஷன் சாரின் ஒப்பம் படத்தை விட இன்னும் சிறப்பாக ஒளிப்பதிவு பண்ணனும்னு சார் சொன்னார்.

உதயநிதியின் தோற்றத்தை கொண்டு வர நிறைய உழைத்திருக்கிறோம். அனைவருக்கும் இந்த தோற்றம் பிடிக்கும் என்றார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்.

பிரியதர்ஷன் என்னுடைய ஃபேவரைட் இயக்குனர். அவர் இயக்கும் படத்தை தயாரித்தது என்னுடைய அதிர்ஷ்டம். சமுத்திகனி, எம்எஸ் பாஸ்கர், மகேந்திரன் சார் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கருணாகரன் மலையாளம் சினிமாவிலும் வந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

நாங்கள் மட்டும் தான் சென்னையில் ஆபீஸே இல்லாமல் ஒரு படத்தை முடித்திருக்கிறோம். அந்தளவுக்கு ரெட் ஜெயண்டும், ஃபோர் பிரேம்ஸும் எங்களுக்கு நிறைய உதவி செய்தனர். இனி சென்னையிலும் ஆபீஸ் போட்டு நிறைய படங்களை தயாரிப்போம் என்றார் தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா.

படப்பிடிப்புக்கு போகும்போது எங்களிடம் பாடல்களே இல்லை. பிரியதர்ஷன் சார் சொன்னதை அப்படியே செய்தேன். மகேந்திரன் சார் நான் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன் என்று சொன்னதும், நிமிர் படத்தில் அவருடன் இணைந்து நடித்ததும் எனக்கு பெருமை.

தெறி படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்க அழைத்தும் மறுத்து விட்ட மகேந்திரன் சார், பிரியதர்ஷன் படத்தில் நடித்தே தீருவேன் என நடிக்க வந்தார். சமுத்திரகனி சாருடன் 3 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டு புரண்டு சண்டை போட்டது மறக்க முடியாத அனுபவம்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் எனக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார். நான் நடித்த படங்களிலேயே மிகவும் அழகான காட்சியமைப்புகள் இந்த படத்தில் தான்.

கருணாகரனுக்கும் எனக்கும் தான் நடிப்பில் போட்டி. எம்எஸ் பாஸ்கர் இயக்குனர் போதும் என்றாலும் ஒன் மோர் கேட்பவர். யாரையெல்லாம் நடிக்க வைக்கலாம் என பிரியதர்ஷன் சாருக்கு உதவியாக இருந்தார் சமுத்திரகனி.

அவரே வசனமும் எழுதியிருக்கிறார். நான் நடித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை. ஒரு நாள் திடீரென என்னை அழைத்து நீ தான் நடிக்கிற என்றார். எனக்கே கொஞ்சம் ஷாக். படம் முடிந்த பிறகு முதல் காட்சி பார்த்து விட்டு, அடுத்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் இருந்தா கூட கூப்பிடுங்க, நடிக்க வரேன்னு அவரிடம் சொன்னேன் என்றார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.

சில சமயங்களில் படத்துக்கு பிறகு பிரியதர்ஷன் சாருடன் இது எனக்கு இரண்டாவது படம். மலையாளத்தில் ஒரிஜினல் படத்தை பார்த்திருந்தாலும், இந்த படத்தை பார்க்கும்போது புதுவிதமாக இருக்கும் என்றார் நடிகர் சண்முகராஜன்.

இந்த படத்துக்கு 10 நடிகர்கள் பெயரை பிரியதர்ஷன் சாரிடம் பரிந்துரைத்தேன். அவர்கள் எல்லோரையும் அவர் வேண்டாம் என்று மறுத்து விட்டார். ஒரு நாள் அவரே உதயநிதி எப்படி இருப்பார் என்று கேட்டார்.

அத்தோடு நானும் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். வசனமும் என்னை எழுத சொன்னார். ஆனால் வசனம் நான் எழுதவில்லை. அவர் தான் உண்மையில் எழுதியிருக்கிறார். பெருந்தன்மையாக என் பெயரை போட்டிருக்கிறார்.

பாலச்சந்தர் மறைவிற்கு பிறகு இன்னொரு குருநாதர் எனக்கு கிடைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ராஜசேகர் மாஸ்டர் என்னையும், உதயநிதியையும் ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டார் என்றார் சமுத்திரகனி.

இது தமிழில் என்னுடைய 7வது படம். 36 நாட்களில் படத்தை ஒரே கட்டமாக முடித்து விட்டோம், படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் இயக்குனர் பிரியதர்ஷன்.

ரெட் ஜெயண்ட் அர்ஜூன் துரை, நடிகர்கள் கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், நாயகி நமீதா பிரமோத், சண்டைப்பயிற்சியாளர் ராஜசேகர், சோனி மியூசிக் அசோக் பர்வாணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

More Articles
Follows