தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் பிரியதர்ஷினி.
இவர் இயக்கவுள்ள புதிய படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.
சக்தி என்று பெயரிடப்பட்ட இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ளதால், தமிழ் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
மலையாள பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை துல்கர் சல்மான் வெளியிட, தெலுங்கு போஸ்ட்ரை ராணா தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இது இணையங்களில் வைரலாகி வருகிறது.
சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் சூட்டிங் வருகிற 15ம் தேதி தொடங்கவுள்ளதாம்.
Sivakarthikeyan Dulquer Rana released First look of Varalaxmis Sakthi