மன்சூர் அலிகான் கேட்ட தொகுதியை தங்கச்சிக்கு கொடுத்துட்டேன்.. அதான் – சீமான்

மன்சூர் அலிகான் கேட்ட தொகுதியை தங்கச்சிக்கு கொடுத்துட்டேன்.. அதான் – சீமான்

வருகிற ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

ஓரிரு தினங்களுக்கு முன் தன் கட்சி சார்பில் நிற்கும் 234 தொகுதி வேட்பாளர்களையும் சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார் ‘நாம் தமிழர்’ கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இதற்கு முன்பு.. தேர்தலில் சீமான் தனக்கு தொகுதி ஒதுக்கவில்லை என அந்த கட்சியில் இருந்து விலகினார் மன்சூர் அலிகான்.

பின்னர் ‘தமிழ்த் தேசிய புலிகள் கட்சி’ என்ற தனிக்கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்.

தேர்தல் நெருங்கி விட்டதாலும் தன் புதிய கட்சியை பதிவு செய்ய இயலாத நிலை (கால அவகாசம்) உருவானதாலும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றார் மன்சூர் அலிகான்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் விலகல் குறித்து பிரபல ஊடகத்திற்கு சீமான் பேட்டியளித்தார்.

அதில் சீமான் கூறியதாவது…

“தேர்தலில் போட்டியிட பட்டுக்கோட்டை தொகுதியை கேட்டார் மன்சூர் அலிகான்.

ஆனால், அங்கு ஏற்கெனவே தங்கச்சியை நிற்க சொல்லிட்டேன். அவரைத் திரும்ப பெறுவது என்பது இயலாத நிலை.

எனவே சேப்பாக்கம் தொகுதியில் நிற்க சொல்லி அந்த தொகுதியையும் கொடுத்து விட்டேன்.

ஒரு நாள் களத்திற்கு சென்று வேலை பார்த்தார். பின்னர் திடீரென்று புதுக்கட்சி தொடங்குகிறேன் என சென்றுவிட்டார். அதுதான் என் வருத்தம்” என சீமான் தெரிவித்துள்ளார்.

Seeman explains why manssor ali khan left NTK

தல – தளபதி பற்றி பேசிய ‘பனங்காட்டுப்படை கட்சி’ ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் ஹரி நாடார்

தல – தளபதி பற்றி பேசிய ‘பனங்காட்டுப்படை கட்சி’ ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் ஹரி நாடார்

8 விரல்களில் பெரிய மோதிரம்… கைகளில் 1 கிலோ தங்கம்… கழுத்து முதல் வயிறு வரை 3 கிலோ தங்க செயின்கள்.. நாடார் என்ற ஜாதி பெயரில் பெரிய டாலர்… நீண்ட தலை முடி… இதுதான் ஹரி நாடார் என்பவரின் அடையாளம்.

ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இத்துடன் வெளிநாட்டு கம்பெனிகளுடன் இணைந்து ‘கேப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இவர் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

‘2கே அழகானது காதல்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்ழ் இவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

மேலும் ‘பனங்காட்டுப்படை கட்சி’யின் ஒருங்கிணைப்பாளரான இவர் அந்த கட்சியின் சார்பாக ஆலங்குளம் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

இவர் கட்சி சார்பாக (நாடார் ஓட்டுக்களை குறி வைத்து) 40 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் இவரின் சமீபத்திய பேட்டியில்…

“தல அஜித் & தளபதி விஜய் பற்றி பேசியிருந்தார்.

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காவிட்டாலும் கூட அஜித்தின் மனிதாபிமானம் பிடிக்கும். அவர்தான் என் ரோல் மாடல்.

அஜித் பிடித்தவராக இருந்தாலும் ‘சர்க்கார்’ படத்துக்கு பிரச்னை ஏற்பட்டபோது, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.

Hari Nadar talks about Thala Thalapathy

அசோக் செல்வன் & பிரியா பவானி சங்கரை ‘ஹாஸ்டல்’-க்கு கொண்டு போகும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்

அசோக் செல்வன் & பிரியா பவானி சங்கரை ‘ஹாஸ்டல்’-க்கு கொண்டு போகும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்

பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்தவருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக தயாரித்துள்ள புதிய படத்திற்கு ‘ஹாஸ்டல்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி (KPY Vijay TV), உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் ‘ஹாஸ்டல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக படக்குழு இறங்கியுள்ளது.

*தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்:*

தயாரிப்பு – R.ரவீந்திரன் (ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்)

இணை தயாரிப்பு – கல் ராமன்

இயக்கம் – சுமந்த் ராதாகிருஷ்ணன்

ஒளிப்பதிவு – பிரவீன் குமார்

இசை – போபோ சசி

படத்தொகுப்பு – ராகுல்

கலை – துரைராஜ்

நிர்வாக தயாரிப்பு – R.முரளி கிருஷ்ணன்

புரோடக்‌ஷன் மேனேஜர் – T.செல்வராஜ், S.N. அஷ்ரப்

மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Ashok Selvan and Priya bhavani shankar joins for a new film

Hostel (1)

‘அந்தகன்’ படத்தை இயக்கி தயாரிக்கும் தியாகராஜன்..; பிரசாந்துடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்

‘அந்தகன்’ படத்தை இயக்கி தயாரிக்கும் தியாகராஜன்..; பிரசாந்துடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்

கடந்த 2018ல் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அந்தாதுன்’.

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடித்திருந்தனர்.

சூப்பர் ஹிட்டான இப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

மலையாளத்தில் இந்த படம் ரீமேக் செய்யப்படுகிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இப்படத்தை இயக்க பிருத்விராஜ் நாயகனாக நடிக்கிறார். ராதிகா ஆப்தே கேரக்டரில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.

தெலுங்கு ரீமேக்கில் நிதின், தமன்னா நடிக்கின்றனர்.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கியுள்ள நிலையில் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இப்பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

‘அந்தகன்’ என்று இப்படத்திற்கு தமிழில் தலைப்பு வைத்துள்ளனர்.

டாப் ஸ்டார் பிரசாந்த் ஜோடியாக சிம்ரன் நடிக்க, முக்கிய கேரக்டரில் கார்த்திக் நடிக்கிறார்.

இசையமைப்பாளர் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குனர் ஜெ.ஜெ.பெஃட்ரிக் இயக்கவிருந்தார்.

ஆனால் தற்போது இப்படத்திலிருந்து விலகிவிட்டார் இயக்குனர்.

தற்போது ‘அந்தகன்’ பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கவிருக்கிறார்.

படத்தில் பணிபுரியவுள்ள மற்ற கலைஞர்கள் விவரம் இதோ…

பிரசாந்த்
சிம்ரன்
கார்த்திக்
யோகி பாபு
ஊர்வசி
கே.எஸ்.ரவிக்குமார்
மனோபாலா
வனிதா விஜயகுமார்
லீனா சாம்சன்
செம்மலர்
பூவையார்

மற்றும் பலர்

ஒளிப்பதிவு

ரவியாதவ் DFT

கலை: செந்தில் ராகவன்

உடைகள்
உத்ரா மேனன்

பத்திரிக்கை தொடர்பு
நிகில் முருகன்

Thiagarajan returns to direction with Prashanth’s Andhagan

கமல் போஸ்டர் மீது சாணி அடித்த ரஜினி ரசிகர் கமலுக்கு வில்லனா? லோகேஷ் மீது கடுப்பில் ரசிகர்கள்

கமல் போஸ்டர் மீது சாணி அடித்த ரஜினி ரசிகர் கமலுக்கு வில்லனா? லோகேஷ் மீது கடுப்பில் ரசிகர்கள்

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

2020 நவம்பர் 7ல் கமலின் பிறந்தநாள் அன்று டைட்டில் டீஸரை வெளியிட்டனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக பிரபுதேவா நடிப்பார் என தகவல் வெளியானது.

பின்னர் நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான லாரன்ஸ் தான் கமலுக்கு வில்லன் என சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

ஆனால் இந்த தகவல் உறுதியாகவில்லை.

இந்த தகவல் ஒருவேளை உறுதியாகிவிடுமோ என கமல் ரசிகர்கள் டென்சனில் உள்ளனர்.

அதற்கான காரணம்… *தர்பார் இசை விழாவில் கலந்து கொண்டார் லாரன்ஸ். அவர் பேசும் போது… தான் சின்ன வயதில் தீவிர ரஜினி ரசிகன் என்றும், கமல் பட போஸ்டரில் சாணி அடித்ததாக பேசினார்.

இதனால் கமல் ரசிகர்கள் கோபம் அடைந்து திட்டினர். எனவே கமலை சந்தித்து அப்போது விளக்கம் அளித்தார் ராகவா லாரன்ஸ்.*

அதனால் தான் இப்போது கமல் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவே கூடாது என கருத்து தெரிவிக்கின்றனர்.

Rajinikanth diehard fan to act with Kamal haasan

கேட்ட கேள்வி புரியலையாம்..; ஆனாலும் பெரியார் விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

கேட்ட கேள்வி புரியலையாம்..; ஆனாலும் பெரியார் விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படம் சமீபத்தில் வெளியானது. இதில் ஹீரோ எஸ்ஜே சூர்யா பெயர் ராமசாமி (என்ற) ராம்சே.

தற்போது இந்த பெயர் சர்ச்சையாகியுள்ளது.

ஒரு பிரபல செய்தியாளர் செல்வராகவனிடம் கேட்ட கேள்வியில்..

“நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ராமசாமி என்கிற பெயரை கொண்டவருக்கு எதிராகக் கடவுளை எதிர்கொள்ள வைத்துள்ளீர்கள்.?

அதற்கு செல்வராகவன் ஆமாம் என்கிறார்.

இதனால் பெரியாருக்கு எதிராக செல்வராகவன் செயல்பட்டதாக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து தன்னுடைய அந்த வீடியோ பேட்டிக்கு செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நண்பர்களே, அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்” என கூறியுள்ளார்.

Director Selvaraghavan’s latest statement about controversy in Nenjam Marapathillai

More Articles
Follows