மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக ‘2323 The Beginning ‘உருவாகிறது.

மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக ‘2323 The Beginning ‘உருவாகிறது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2323 the beginningமூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைப் பின்னணியுடன் இந்தத் தமிழ்ப் படம் உருவாகி வருகிறது. கதை ,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கி வருகிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு ‘தமிழனானேன்’ என்றொரு படத்தை எடுத்திருந்தார். அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தமிழனின் வீரக்கலையான வர்மக்கலையை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெறுவது என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார்.

இந்த’ 2323 ‘படத்தைப் பற்றி இயக்குநர் பேசும் போது,

“இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இப்படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும்.

இப்போது முதல் பாகத்தை உருவாக்கி வருகிறேன். இந்த 2020-ல் தொடங்கும் கதையை இப்போது உருவாக்கி வருகிறேன்.

வெப் சீரிஸ் தயாரிக்கும் உலக நாயகன் கமல்ஹாசன்

நம் கண்ணுக்குத் தெரியாத பூதாகரமான பிரச்சினையாக உருவாகி வருகிறது குடிநீர்ப் பஞ்சம். மக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதன் எதிர்கால விஸ்வரூபத்தை நினைத்தால் பீதி ஏற்படுத்தும்.
இது வருங்காலத்தில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். இப்படிப்பட்ட சூழலில் இந்தத் தண்ணீருக்காக நடக்கும் அரசியலையும் திரைமறைவு வணிகத் திட்டங்களையும் சுயநல வியாபாரங்களையும் நினைத்தாலே இப்போதே அச்சம் தருகிறது. அவற்றைத் தோண்டினால் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும்.

இந்தத் தண்ணீர்ப் பிரச்சினையை மையமாக வைத்துத்தான் இந்த முதல் பாகத்தை எடுத்து வருகிறேன் . ‘வெதர் கண்ட்ரோல்’ எனப்படும் காலநிலையைக் கையில் எடுத்து அதைக் கட்டுப்படுத்துகிறான் வில்லன்., மக்கள் வாழும் சூழ்நிலையையே கட்டுப் படுத்தும் அளவுக்கு அவன் வளர்கிறான் .அவனை எப்படிக் கதாநாயகன் முறியடிக்கிறான் என்பதுதான் கதை.
இதில் ஹீரோயிசத்துடன் தமிழனின் வீரக் கலையான குத்து வரிசையைப் பற்றி ஆழமாகவும் விரிவாகவும் சொல்லியிருக்கிறேன்.

நான் எப்பொழுது படம் எடுத்தாலும் தமிழரின் பெருமை களையும் வீரக்கலைகளையும் இடம்பெறச் செய்து அவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கம் உடையவன்.

இருபதே நாட்களில் இந்த படப்பிடிப்பை முடித்து விட்டோம். இப்போது மெருகேற்றும் பணிகளில், தொழில்நுட்ப.ப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

இப்படத்தில் நாயகனாக நான் நடித்து இருக்கிறேன். நாயகிகளாக சாத்விகா ,கிரிஸ்டல் என இருவர் நடித்திருக்கிறார்கள். சாத்விகா கன்னடத்தில் இரு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து இருக்கிறார். கிறிஸ்டல் பம்பாயில் பிறந்தவர். நியூயார்க்கில் வசிக்கிறார். அவர் ஹாலிவுட்டில் இரண்டு படங்களிலும் இந்தியில் இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார் .இவர்களுடன் ‘எமன்’ படப் புகழ் அருள் டி சங்கர் ,ராஜேந்திரன் கிருஷ்ணராஜ், ப்ரீத்தா, காசி,ஒரிசா பாலு ,டாக்டர் அபர்ணா, வினீஷ் ,ஆனந்த் ஆர். லிங்கா , சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு D.M.சந்துரு. இசை மகராஜ் தேவர், ஏ.ஆர்.தாமஸ், ஸ்ரீராம் ஆனந்த்.

வெற்றித் தமிழ் உருவாக்கம் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை மசனையன் மகேந்திர குமார் தயாரித்திருக்கிறார்.

மசாலா படத்தில் சலித்துப் போயிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தை தரும்,” என்று கூறுகிறார் இயக்குநர் சதிஷ் ராமகிருஷ்ணா.

வெப் சீரிஸ் தயாரிக்கும் உலக நாயகன் கமல்ஹாசன்

வெப் சீரிஸ் தயாரிக்கும் உலக நாயகன் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal Haasanவிஸ்வரூபம் படத்தை இயக்கி தயாரித்து நடிக்கும் போதே அதை முதலில் வெப் சீரிசாக தயாரிக்கத்தான் கமல் முடிவு செய்திருந்தார்.

ஆனால் அப்போது அது பற்றிய புரிதல் யாருக்கும் இல்லை என்பதால் அதனை கைவிட்டார்.

தற்போது வெப் சீரிஸ் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஒரே படத்தில் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் & உலகநாயகன்

இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது…

‛‛எடுத்து வரும் முதல் முயற்சிகளில் ஒன்றாக பனிஜே ஆசியா மற்றும் டர்மரிக் மீடியாவுடன் இணைந்து நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான உலகத்துக்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.

கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடன் நான். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மிகச்சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது அடுத்த அடி” என பதிவிட்டுள்ளார்.

அன்புச்செழியன் வீட்டில் 65 கோடியை கைப்பற்றியது வருமான வரித்துறை

அன்புச்செழியன் வீட்டில் 65 கோடியை கைப்பற்றியது வருமான வரித்துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

financier anbu chezhiyanகோபுரம் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை அன்புச்செழியன் நடத்தி வருகிறார்.

மேலும் மதுரை உட்பட தென்மாவட்ட சினிமா விநியோகஸ்தராகவும் உள்ளார்.

இந்நிலையில் இவரது வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.

மதுரை கீரைத்துறை, காமராஜர் ரோட்டில் உள்ள அவரது வீடுகள், தெற்கு மாசி வீதி அலுவலகத்திலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தலைமறைவான அன்புசெழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

விஜய் நடித்த பிகில் படத்தை ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரித்தது.

இதற்கு அன்புச்செழியன் நிதி வழங்கி இருக்கலாம் என்றும், இப்படத் தயாரிப்பில் முறைகேடு நடத்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகித்து வருகின்றனர்.

இன்று நடந்த சோதனையில் மதுரையிலிருந்து ரூ.15 கோடியும், சென்னையிலிருந்து ரூ.50 கோடி பணமும் ரொக்கமாக கைப்பற்றி உள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடிகர் விஜய் வீட்டிலும் 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவி வெற்றி; வழக்கு தொடர சின்மயி முடிவு

டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவி வெற்றி; வழக்கு தொடர சின்மயி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radha ravi chinmayiடப்பிங் யூனியன் தேர்தல் நடைபெற இருந்தது. ஒரு அணியில் ராதாரவியும் மற்றொரு அணியில் சின்மயியும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

ஆனால் சின்மயி மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், போட்டியின்றி ராதாரவி தலைவராக தேர்வாகியுள்ளார்.

இந்த நிலையில் ராதாரவியின் இந்த வெற்றி குறித்து சின்மயி கூறியதாவது:-

“எந்தத் தேர்தலாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி தானே நடக்க வேண்டும்.

ரஜினி வருவார்; அவருடன் நிற்பேன்; ‘ராங்கா’ பேசிய ராதாரவி பல்டி

என்னுடைய மனுவை எதற்காக நிராகரித்தார்கள் என்ற எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை. ஆனால் ராதாரவி வெற்றி பெற்றதாக அறிவித்து உள்ளனர்.

இது சூழ்ச்சியாகவே தெரிகிறது.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் பணிபுரியும் நூற்றுக்கணக்கானவர்களின் சம்பளத்தை பல வருடங்களாக 10% பிடித்தம் செய்து டப்பிங் யூனியனை நடத்தி வந்தார்கள்.

அந்தப் பணத்தில்தான் யூனியன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

மேலும் 47.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடம் மற்றும் கட்டிடத்தை ஒரு கோடிக்கும் மேலாக மதிப்பிட்டு உறுப்பினர்களின் பணத்தில் ஊழல் செய்துள்ளனர்.

எதிர்த்துப் பேசுபவர்களைக் மிரட்டுகின்றனர்.

தற்போது தேர்தலில் தோல்வி உறுதியானதும் குறுக்கு வழியில் வெற்றி பெற்றுவிட்டார். இதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வேன்.

இவ்வாறு சின்மயி கூறினார்.

‘தர்பார்’ நஷ்டஈடு பிரச்சினை; போலீஸ் பாதுகாப்பு கேட்கும் முருகதாஸ்

‘தர்பார்’ நஷ்டஈடு பிரச்சினை; போலீஸ் பாதுகாப்பு கேட்கும் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadoss Rajiniரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘தர்பார்’ படம் இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

லைகா தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

ஆனால், தர்பார் படம் சரியான வசூல் கொடுக்கவில்லை என்றும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஓரிரு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று முருகதாஸ் மற்றும் ரஜினி ஆகியோரை சந்திக்க முயற்சித்து வருகின்றனர்.

தர்பார் நஷ்டத்திற்கு பேராசையே காரணம் என பாரதிராஜா பேச்சு

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த சம்பவத்திற்கு முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர்களையும் ஒட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இழப்பீடு கோரி தன்னை மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு கொடுத்துள்ளார்.

நான் சிரித்தால் திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் ராணா

நான் சிரித்தால் திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் ராணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naan sirithal director rana‘நான் சிரித்தால்’ படத்தின் கர்டெய்ன் ரெய்ஸர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:-

நடிகை குஷ்பூ பேசும்போது,

நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை நான் படம் பார்க்கவில்லை. ஆதியைப் பார்க்கும்போது எனக்கு சுந்தர்.சி-யை பார்ப்பது போலவே இருக்கும். ஆனால், அவர்களுடைய விடாமுயற்சி, கடினஉழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்க்கும்போது நானும், ஆதியின் மனைவியும் பிரமித்துப் போகிறோம் என்றார்.

அங்கிள் ஆண்ட்டி வராதீங்க..; ‘நான் சிரித்தால்’ விழாவில் ஆதியின் ஆணவ பேச்சு

ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் பேசும்போது,

இப்படத்தில் எனக்குப் பிடித்த விஷயம், எந்த கவலைகளும் உள்ளுக்குள் கொண்டு போகாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை கூறியிருக்கிறார்கள். நானும் அதற்கு முயற்சி செய்ய வேண்டுமென்று நினைத்தேன் என்றார்.

சண்டை இயக்குநர் பிரதீப் பேசும்போது,

இப்படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஏனென்றால், மற்ற படங்களில் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் சிரித்துக் கொண்டே காட்சி அமைக்க வேண்டி இருந்தது என்றார்.

நடன இயக்குநர் ராஜ் பேசும்போது,

ஆதியுடன் எனக்கு இது மூன்றாவது படம். இந்த வாய்ப்புக் கொடுத்த ஆதிக்கும், இயக்குநர் சுந்தர்.சி-கும் நன்றி என்றார்.

நடன இயக்குநர் சந்தோஷ் பேசும்போது,

‘நட்பே துணை’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்கிள் பசங்க’ பாட்டிற்கு நடனம் அமைத்தேன். அதன் பிறகு இந்த படத்தின் ‘அஜ்ஜுக்கு’ பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறேன் என்றார்.

ஆடை வடிவமைப்பாளர் பிரீத்தி பேசும்போது,

‘நட்பே துணை’ படத்திற்குப் பிறகு ‘நான் சிரித்தால்’ படத்திற்கு ஆதிக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறேன். இப்படத்தின் மையக்கரு என்னை மிகவும் கவர்ந்தது என்றார்.

இயக்குநர் ks.ரவிக்குமார் பேசும்போது,

படப்பிடிப்பு நடக்கும்போது நான் ஆதியைத் தேடுவேன். ஆனால், அவர் ஓரமாக ஆடிக் கொண்டிருப்பார். அருகே சென்று பார்த்தால் தான் பாடலுக்கு இசையமைப்பது தெரியும். எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது செய்துக் கொண்டே இருப்பார் என்றார்.

ரவிமரியா பேசும்போது,

நான் எப்போதும் இயக்குநர் சுந்தர்.சி-யைத்தான் பின்பற்றுவேன். அவர் பணியின்போது தான் உண்டு தன் வேலை உண்டு என்று அவருடைய முழு கவனமும் பணியில் மட்டும்தான் இருக்கும். இப்படத்தில் முதல் பாதியில் வில்லனாக வருவேன். இறுதியில் காமெடியனாக மாறிவிடுவேன். இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்.

இயக்குநர் சுந்தர்.சி எப்படி மூன்று படங்களுக்கும் ஆதியை வைத்தே தயாரிக்கிறார் என்று நினைத்தேன். இப்படத்தில் நடிக்கும்போது தான் ஆதிக்கு பல திறமைகள் இருக்கிறது என்பது தெரிந்தது. இயக்குநர் ரவிக்குமார் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி பேசும்போது,

இப்படத்தில் நான் சிரித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ‘காந்தி’. எங்கெங்கெல்லாம் சிரிக்கக் கூடாதோ அங்கெல்லாம் சிரிப்பேன். இப்படம் எனக்கு சிறப்பான படம். அவ்னி மூவிஸ் நிறுவனம், சுந்தர்.சி கூட்டணியில் இது எனக்கு மூன்றாவது படம். ஆனால், எங்களது மூன்று படங்களுக்கும் மூன்று இயக்குநர்கள். என்னுடைய கனவுகளை இயக்குநர் சுந்தர்.சி நனவாக்கினார். இதற்கு முன் வெளியான இரண்டு படங்கள் வெற்றி பெற்றதற்கு இயக்குநர் சுந்தர்.சி எனக்கு கொடுத்த சுதந்திரம் தான் காரணம். அதே வகையில் இப்படமும் வெற்றிபெறும்.

ஆரம்ப காலகட்டத்தில் ராப் பாடகராகத்தான் வந்தேன். நான் சுதந்திர பாடகராக வந்தபோது யாரும் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இப்போது தென் தமிழகத்தில் ‘ஹிப் ஹாப்’ பெயர் தனி மனிதனின் பெயராக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.. சென்னையில் தெருவோரங்களில் ‘வாட்டர் பாட்டில்’ என்ற குழுவுடன் இணைந்தோம். அதன்பிறகு ரேடியோவில் ‘வாடிபுள்ள வாடி’ பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைப் பார்த்து இயக்குநர் சுந்தர்.சி என்னை அழைத்தார். பாடலுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்த அவரிடம் ஒரு படம் கொடுங்கள் என்று கேட்டேன். அப்படித்தான் எனது சினிமா பயணம் தொடங்கியது.

இயக்குநர் சுந்தர்.சி. பேசும்போது,

இப்படம் என்னுடைய தயாரிப்பில் ஆதி நாயகனாக நடிக்கும் மூன்றாவது படம். சிறு பையனாக வந்து தன்னுடைய நல்ல குணத்தால் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார். எனக்கும் அவருக்கும் அதிக வயது வித்தியாசம் இருந்தாலும் ஆதியை என்னுடையை சகோதரராகவே கருதுகிறேன். ‘மீசைய முறுக்கு’ நட்பை மையப்படுத்தும் படம், ‘நட்பே துணை’ விளையாட்டை மையப்படுத்தும் படம். ஆனால், ஆதியிடம் இருக்கும் நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்த விரும்பினேன். அதன் முயற்சிதான் ‘நான் சிரித்தால்’ திரைப்படம் என்றார்.

இயக்குநர் ராணா பேசும்போது,

எனது பெற்றோர்கள், ரஜினிகாந்த் மற்றும் என்னுடைய இயக்குநர் ஷங்கர் இவர்கள் மூவருக்கும் நன்றி. ரஜினிகாந்த் என்னுடையை ‘கெக்க பெக்க’ குறும்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார். அவரின் பாராட்டுத்தான் 20 நிமிட குறும்படம் 2.20 மணி நேரமாக மாறியது. இயக்குநர் ஷங்கர் செய்யும் பணியில் 5 சதவீதம் செய்தாலே நான் வெற்றிப் பெற்று விடுவேன்.

உலக நாடுகளில் அழுத்தத்தில் இருக்கக்கூடிய முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறது. நமக்கிருக்கும் அழுத்தம், தோல்வி, சோகம், கவலைகள், பிரச்னைகள் போன்றவற்றை தள்ளி வைத்து சிரித்தால் எப்படி இருக்கும்? என்பதே இப்படம். ஆகையால், அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பாருங்கள். இப்படம் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடுகிறார், இப்படத்தை வெளியிடும் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் T.முருகானந்தம்.

கதாநாயகி ஐஸ்வர்யா மேனன், சாரா, ஆஷிக், சுஜாதா, ‘படவா’ கோபி, கதிர், சத்யா, ‘எரும சாணி’ விஜய், இவர்களுடன் நடிகை குஷ்பூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் இறுதியாக, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ‘நான் சிரிச்சா வேற லெவல்’ என்ற பாடலை வெளியிட்டு பாடி, ஆடினார்.
உலக உரிமை : ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் T.முருகானந்தம்.

More Articles
Follows