விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது..? தந்தை எஸ்ஏசி. பேட்டி

விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது..? தந்தை எஸ்ஏசி. பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and SACரஜினி, கமல், விஷால் தங்கள் அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்து விட்டனர்.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கும் விஜய்யின் அரசியல் குறித்து இது வரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

அவர் நிச்சயம் வருவார் என்றே அவரது தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியதாவது…

ஒரு தந்தையாக என் மகனுக்கு அவர் ஓடுவதற்கான எல்லா விஷயங்களையும் தயார் செய்து கொடுத்து விட்டேன்.

ஆனால், அவர் ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் உள்ளது.” என கூறியுள்ளார்.

பார்த்திபன் மகள் கீர்த்தனாவை மணக்கும் பிரபல இயக்குனர்

பார்த்திபன் மகள் கீர்த்தனாவை மணக்கும் பிரபல இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akshay Akkineniநடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி நடைபெறவுள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்திருந்தோம்.

தற்போது அவர் யாரை திருமணம் செய்துக் கொள்ள போகிறார் என்ற தகவல்கள் வந்துள்ளன.

பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷய் அக்கினேனியை தான் திருமணம் செய்து கொள்ள போகிறாராம்.

தமிழில் சூப்பர் ஹிட்டான பீட்சா படத்தை அக்ஷய் ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபி சரவணன் நடிக்கும் திரு.வாக்காளர் பட பூஜை நடைபெற்றது

அபி சரவணன் நடிக்கும் திரு.வாக்காளர் பட பூஜை நடைபெற்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Abi Saravanan1986 law Batch Media Productions தயாரிக்கும் முதல் படமான திரு. வாக்காளர் பட பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது.

இப்படத்தின் இயக்குநர் தி.இரமேஷ் பிரபாகரன். இவர் வாசு, மகேந்திரன் ஆர்.வி.உதயகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

இவர் ஏற்கனவே கன்னடத்தில் கள்மஞ்சா என்ற வெற்றி படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அபி சரவணன் நடிக்கிறார். மேலும் 3 புதுமுகங்கள் நடிக்க உள்ளனர்.​

இப்படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், நாடார் சங்க தலைவர் த.பத்மநாபன், திருவள்ளுர் மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் திருவடி மற்றும் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், ராஜா ரவி, வி.சி.குகநாதன் ,லியாகத் அலிகான்,ஆர். சுந்தர்ராஜன், மனோஜ்குமார் ,E.ராம்தாஸ், நடிகர்கள் நட்டி எ நடராஜ், ஆரி,அபி சரவணன், வையாபுரி ,ராம்ஜி,

தயாரிப்பாளர்கள் m.m.தாஹா, P.T.செல்வ குமார்,பொன்னுமணி மஞ்சுநாத் ரவி,கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம், சண்டை பயிற்சியாளர்கள் தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில்…

சட்டத்தாலும் சத்தத்தாலும் மட்டுமே வருவதல்ல மாற்றம் அது வாக்கு வாங்கும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். வாக்களிக்கும் வாக்காளர்களுக்கும் பொருந்தும் ஒவ்வொரு வாக்காளரும் திரு. வாக்காளர் ஆகவேண்டும் என்பதற்கான முயற்சியே இப்படம் என கூறினார். இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் படத்திற்காக சிம்பு செம ஒர்க்அவுட்; வைரலாகும் வீடியோ

மணிரத்னம் படத்திற்காக சிம்பு செம ஒர்க்அவுட்; வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STRமணிரத்னம் இயக்கத்தில் லைக்கா தயாரிக்கும் புதிய படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பகத் பாசில் மற்றும் ஜோதிகா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு தன் உடல் எடையை சிம்பு குறைக்க பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் அதிகம் பகிர அது இணையங்களில் வைரலாகி வருகிறது.

கார்த்திக்-கவுதம் இணைந்து நடித்த ‘Mr.சந்திரமௌலி’ பட ரிலீஸ் தேதி

கார்த்திக்-கவுதம் இணைந்து நடித்த ‘Mr.சந்திரமௌலி’ பட ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MR Chandramouli postersகார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் ‘Mr.சந்திரமௌலி’.

இதில் நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்தி இணைந்து நடித்துள்ளனர்.

மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது.

இப்படத்தின் ஒரு முக்கியமான குத்துச்சண்டை காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.

இந்த படத்தை BOFTA media works India private limited சார்பில் ‘Creative Entertainers and Distributors’ தயாரிக்கின்றனர்.

இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சந்தோஷ் பிரதாப், சதிஷ், விஜி சந்திரசேகர் மற்றும் மனோபாலா ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சாம் CS இசையில் , ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவில், TS சுரேஷ் ஒளிப்பதிவில் , ஜாக்கியின் கலை இயக்கத்தில் ‘Mr.சந்திரமௌலி’ உருவாகிவருகிறது.

இந்நிலையில் ‘Mr.சந்திரமௌலி’ வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமலாபாலுக்கு பாலியல் தொல்லை; தொழிலதிபர் அழகேசன் கைது

அமலாபாலுக்கு பாலியல் தொல்லை; தொழிலதிபர் அழகேசன் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amala Paul alleges sexual harassment by stranger files police caseமுன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால்.

இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்று தற்போது தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு வெளிநாட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள நடன பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது அந்த நடன வகுப்பிற்கு வந்த ஒருவர் அழகேசன் என்ற தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாக பேசி அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாராம்.

எனவே சென்னை தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்,

இதனையடுத்து சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த அழகேசன் என்ற தொழிலதிபர் ஒரு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amala Paul alleges sexual harassment by stranger files police case

More Articles
Follows