மம்முட்டி படத்தில் ஆர்.கே.சுரேஷுக்கு இப்படியொரு கேரக்டர்..?

rk suresh and mammoottyதமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி தற்போது வில்லன், ஹீரோ என அசத்தி வருபவர் ஆர்.கே.சுரேஷ்.

தற்போது மலையாள சினிமாவிலும் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

குஞ்சாக்கோ போபன் நடித்த ‘சிகாரி சாம்பு’ என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.

அதில் இளைஞர் வயதான தாத்தா என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தினார்.

அதன் பின்னர் மஞ்சித் திவாகரன் என்பவர் இயக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03′ என்கிற படத்தில் நாயகர்களில் ஒருவராக போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மம்முட்டி நடிக்கவுள்ள மதுர ராஜா படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

இதில் மம்முட்டியின் வலது கையாக இவர் நடிக்கிறாராம்.

Overall Rating : Not available

Related News

Latest Post