தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று மார்ச் 8 செய்தியாளர்களை சந்தித்தார் பெப்சி தலைவர் ஆர்கே. செல்வமணி.
அப்போது அவர் பேசியதாவது… “கொரோனா கொடுமையான நோய். தற்போது வரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.
அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளே இதனை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.
இந்தியாவில் போதுமான அளவிற்கு வென்டிலேட்டர் வசதி இல்லை. இந்த நோய் வந்துவிட்டால் அதனை தடுக்க முடியாமல் போய் விடும்
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பெஃப்சி சார்பாக திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ நிதியுதவி கேட்டிருந்தோம்.
தற்போது வரை 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி பெப்சிக்கு கிடைத்துள்ளது.
இவையில்லாமல் 2400 அரிசி மூட்டைகள் நன்கொடையாக கிடைத்துள்ளன.
திரைப்பட தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த உதவி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது .
திரைப்பட கலைஞர்கள் இந்த நேரத்தில் அரசுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.
பெஃப்சி சார்பாக 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கவுள்ளோம்.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.