மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் இவ்வளவு பிரச்சினை.?

Natchathira vizhaநடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, சில தினங்களுக்கு முன் மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நடைபெற்றது.

கலைநிகழ்ச்சிகளுக்கு முன்பாக நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளும் நடைபெற்றன.

நட்சத்திரக் கலைவிழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் – நடிகைககள் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சிம்பு, தனுஷ், விக்ரம், த்ரிஷா, நயன்தாரா போன்றவர்கள் கலந்துக் கொள்ளவில்லை.

மேலும் சில மூத்த கலைஞர்களை அவமதிப்பு செய்துவிட்டதாக நடிகர் எஸ்வி. சேகர் குற்றம் சாட்டி நடிகர் சங்கத்தில் தன் அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இந்நிலையில் இந்த நிகழ்வில் ஏகப்பட்ட பிரச்சினைகள், குளறுபடிகள் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.

இந்த விழாவைக் காண 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என கூறப்பட்டதாம்.

ஆனால் குறைந்த அளவே பார்வையாளர்கள் இருந்தனர் என தெரியவந்துள்ளது.

மேலும், மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் மோசமான நிலையில் இருப்பதால் நட்சத்திர விழாவைப் புறக்கணியுங்கள் என்று சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

இவையில்லாமல் ‘மை ஈவண்ட்ஸ்’ என்ற ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் அலட்சிய போக்கால் பல குளறுபடியும் நடந்துள்ளதாம்.

அதாவது… மே காரணம் என்கிறார்கள் விஷால் தரப்பினர்.

பெரும்பாலும் பாஸ்போர்ட்டில் இருந்த நடிகர்களின் பெயரும், அவர்களின் உண்மையான பெயரும் பொருத்தமாக இருக்காது.

முன்கூட்டியே பாஸ்போர்ட் ஜெராக்ஸை சம்பந்தப்பட்ட கலைஞர்கள் தரவில்லையாம். இதனால் ஒரு சில நடிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது.

ரஜினி, கமல் போன்ற சீனியர் நடிகர்களுக்கு மட்டுமே பிசினஸ் கிளாஸில் டிக்கெட் போடப்பட்டதாம்.

மற்ற கலைஞர்களுக்கு எக்னாமிக் கிளாஸ்தானாம். ஆனாலும் ஒரு சில நடிகைகள் தங்களுக்கு பிசினஸ் கிளாஸ்தான் வேண்டும் என அடம்பிடித்தார்களாம்.

இவையில்லாமல் தங்கும் இடம், உணவு போன்றவற்றிலும் பிரச்சினையாம்.

இந்த விழாவை ஏற்பாடு செய்த நடிகர் சங்க நிர்வாகிகள் முன்கூட்டியே மலேசியா சென்று ஏற்பாடுகளை கவனித்திருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என பாதிக்கப்பட்டவர்கள் சொல்கின்றனர்.

Overall Rating : Not available

Latest Post