42 வருசமா பிரசாத் ஸ்டூடியோவுக்கு வாடகை கொடுக்காத இளையராஜா?; பிரச்சினை கோர்ட்க்கு போனது

42 வருசமா பிரசாத் ஸ்டூடியோவுக்கு வாடகை கொடுக்காத இளையராஜா?; பிரச்சினை கோர்ட்க்கு போனது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayaraaja1977 முதல் கடந்த 42 வருடங்களாக சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசைஞானி இளையராஜா.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ரெக்கார்ட்டிங் பணிகளை செய்து வருகிறார்.

அங்கு இசையமைப்பதற்கு ஒப்பந்தப் பத்திரமும் போட்டுள்ளார்.

ஆனால் இவர் வாடகை கொடுப்பத்தில் என கூறப்படுகிறது. அதாவது இளையராஜா இசையமைக்கும் படங்களின் தயாரிப்பாளர்களே இடத்திற்கான வாடகையையும் கொடுப்பதாக தெரிகிறது.

அண்மைக்காலமாக இளையராஜா அவ்வளவாக படங்களுக்கு இசையமைப்பதில்லை. எனவே வாடகை கொடுக்காத காரணத்தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

பிரசாத்தின் பேரன், சாய் பிரசாத் என்பவர் ஸ்டூடியோ நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பின்னர் இந்த மோதல் அதிகரித்துள்ளது.

இதனால் இளையராஜாவுக்கு இசையமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இளையராஜாவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா, சீமான், பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆனால் அங்கு சமரசம் ஏற்பட்டதாக தெரியவில்லை.

இதனையடுத்து பிரசாத் ஸ்டூடியோ மீது, இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பியுள்ளது.

ஓவரா பேசி சிக்கிய பாக்யராஜ்; பெண்கள் எதிர்ப்பு.. ஆண்கள் ஆதரவு

ஓவரா பேசி சிக்கிய பாக்யராஜ்; பெண்கள் எதிர்ப்பு.. ஆண்கள் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bhagyaraj‛கருத்துக்களை பதிவு செய்’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பாக்யராஜ் பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி பேசியிருந்தார்.

24 மணி நேரமும் செல்போனில் மூழ்கி இருக்கும் பெண்கள் மீதும் தவறுள்ளது. யாரை நம்புவது என தெரியாமல் அவர்கள் வழி தவறி போய்விடுகின்றனர்.

மேலும் ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என பாக்யராஜ் கூறியிருந்தார். இதனை பெண்கள் அமைப்புகள் எதிர்த்தன.

மேலும் பாக்யராஜ் மீது போலீசிலும் புகார் கொடுக்க தமிழக மகளிர் ஆணையமும் பாக்யராஜிற்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து பாக்யராஜும் தன் பக்க விளக்கத்தை கொடுத்தார்.

இந்த நிலையில் பாக்யராஜ் பேசியதில் தவறில்லை என ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

சிம்புவை அடுத்து லாரன்ஸ இயக்கும் வெங்கட் பிரபு

சிம்புவை அடுத்து லாரன்ஸ இயக்கும் வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence and Venkat Prabhuபல நட்சத்திரங்கள் இணைந்துள்ள பார்ட்டி படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது காஜல் அகர்வாலை வைத்து வெப் சீரிசை இயக்கி வருகிறார்.

இதன் பின்னர் சிம்பு நடிக்கவுள்ள மாநாடு படத்தை இயக்குவார் என நம்பலாம்.

இந்த படத்தை முடித்துவிட்டு ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

கடவுளின் அருளால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நச்சுன்னு நாலு பாட்டு..; டிசம்பர் 7ல் தர்பார் பாடல்கள் ரிலீஸ்

நச்சுன்னு நாலு பாட்டு..; டிசம்பர் 7ல் தர்பார் பாடல்கள் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar rajiniசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடித்துள்ளனர்.

அண்மையில் சும்மா கிழி… நான்தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு என்ற பாடல் வெளியாது. இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் வரும் 7ல், சென்னை, நேரு ஸ்டேடியத்தில், மாலை 5:00 மணிக்கு, பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் 4 பாடல்கள் + ஒரு தீம் மியூசிக் இடம்பெற்றுள்ளது.

சும்மா கிழி, கண்ணம்மா, ஷோ தி தர்பார், நீதி என 4 பாடல்கள் உள்ளது. இதில் 2 பாடல்கள் 3 நிமிடத்திற்கு குறைவாகவும் மற்ற இரு பாடல்கள் 4 நிமிடத்திற்கு குறைவாக உள்ளன.

‘தனுசு ராசி நேயர்களே’ படம் குறித்து டிகன்கனா சூர்யவன்ஷி!

‘தனுசு ராசி நேயர்களே’ படம் குறித்து டிகன்கனா சூர்யவன்ஷி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹிப்பி’ என்ற தெலுங்குப் படத்தில் முதன் முதலாக நடித்த டிகன்கனா சூர்யவன்ஷியின் அழகு தோற்றமும், எல்லைகளைக் கடந்த தன்னிச்சையான நடிப்பும் ரசிகர்களை அச்சரியத்தில் மூழ்கடித்தன. தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் டிகன்கனா சூர்யவன்ஷியின் தமிழ்ப்பட அறிமுகம் குறித்து சிவப்புக் கம்பளம் விரிக்காத குறையாக ஆவலோடு காத்திருக்க, இப்போது ஹரீஷ் கல்யாணுடன் அவர் இணைந்து நடித்த ‘தனுசு ராசி நேயர்களே’ படம் வெளியாவது குறித்து அகமகிழ்ந்திருக்கின்றனர். பகட்டான அழகுப் பதுமையான டிகன்கனா ஹரீஷ் கல்யாணுடன் வெண்திரையைப் பகிர்ந்துகொண் டிரைலர் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்து மழையில் அவரை நனையச் செய்யத் தொடங்கினர். எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடனும் பரபரப்புடனும் காணப்படும் டிகன்கனா சூர்யவன்ஷி படம் குறித்து என்ன சொல்கிறார்…?

“‘தனுசு ராசி நேயர்களே’ டிரைலர் வெளியான பிறகு தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் தொடர்ந்து என் மீது அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். விலை மதிக்க முடியாத இந்தப் பரிசு எனக்கு மிகுந்த வலிமையைத் தருகிறது. இதற்காக நான் தயாரிப்பாளர் கோபாலன் சார் அவர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக தமிழில் அவர்கள் தயாரித்த முதல் படத்திலேயே என்னையும் பங்கு பெறச் செய்தது, எனக்கு உண்மையில் மிகப் பெரிய விஷயம்.
‘தனுசு ராசி நேயர்களே’ தனக்கு முதல் படமாக இருந்தாலும் இயக்குநர் சஞ்சய் பாரதி, பரந்த மனதுடன் என்னைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார். தனது பணி குறி்தது மகத்தான தெளிவுடன் அவர் பணியாற்றிய விதம், முதிர்ந்த காட்சிகளாக படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த அவருக்கு நான் என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பணியாற்றியது ஒரு சுவையான அனுபவம். அற்புதமான குணங்களைக் கொண்ட அவர் ஓர்அருமையான சக நடிகர். மிக அமைதியாக, தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது பணியில் மட்டுமே மிகவும் கவனம் செலுத்துபவர். படப்பிடிப்புக்கிடையே எனக்கும் அவருக்கும் எந்தவொரு சிறு பிணக்கும் ஏற்படவில்லை. படப்பிடிப்பு மொத்தமும் மிக இனிமையாகக் கழிந்தது. ரெபா மோனிகா ஜானுடன் எனக்கு படத்தில் மிகச் சில காட்சிகள் மட்டுமே உண்டு. இனிமையான பெண்மணியான இவருடன் படப்பிடப்பின் இடையே கிடைக்கும் நேரத்தில் அரட்டை அடிப்பதுண்டு. மொத்தத்தல் இப்படத்தில் நடத்த நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்து, நன்கு கவனித்துக் கொண்டார்கள். 5 ஸ்டார் செந்தில் சார் தனுசு ராசி நேயர்களே படத்தை தேர்வு செய்து வாங்கி, மிகப் பெரிய அளவில் வெளியிடுவது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜிப்ரான் சாரின் இசை படத்துக்கு மேலும் மெருகூட்டுவதுடன், படத்தை மேலும் வண்ணமயமாக்கி இளைஞர்களை ஈர்க்கும் என்பது உறுதி” என்றார் டிகன்கனா சூர்யவன்ஷி.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்துக்காக கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் ஹரீன் கல்யாண், டிகன்கனா சூர்யவன்ஷி, ரெபா மோனிகா ஜான், ரேணுகா, முனீஷ்காந்த், டேனியல் ஆன் போப், பாண்டியராஜன் மற்றும் மயில்சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

கமல் ஓகே.; ரஜினி என்ன ஆளுமையா.? சீண்டும் சீமான்

கமல் ஓகே.; ரஜினி என்ன ஆளுமையா.? சீண்டும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naam Tamilar Katchi Seeman slams Rajinikanth againநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் பேட்டியில் தமிழகத்தின் விவாதப் பொருளான ஆளுமை குறித்து பேசியுள்ளார்.

அதில் கடுமையாக ரஜினியை விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளுமை இல்லை என்கிறார் ரஜினி. சினிமாவில் என்ன ஆளுமை செய்துள்ளார் ரஜினி.

படத்தில் நடிக்கிறார் அவ்வளவுதான். ஒரு பாடல் எழுதிருப்பாரா? இயக்கியிருப்பாரா? அவரே எல்லாம் செய்து ஒரு படத்தை ஓட வைக்க முடியுமா?

தற்போது முன்னணியில் உள்ள நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்களுடன் படம் செய்கிறார் அவ்வளவுதான்.

கமல் கூட சொல்லலாம். அவர் படம் தயாரித்துள்ளார். இயக்கியுள்ளார். பாடல் எழுதி பாடியுள்ளார்.

என ரஜினியின் ஆளுமை குறித்து விமர்சித்துள்ளார் சீமான்.

Naam Tamilar Katchi Seeman slams Rajinikanth again

More Articles
Follows