ரன்வீர் சிங்-கபீர் கான் இணையும் 83 படம் 2020ல் கோடையில் ரிலீஸ்

ரன்வீர் சிங்-கபீர் கான் இணையும் 83 படம் 2020ல் கோடையில் ரிலீஸ்

ranveer singh and kapil devரன்வீர் சிங் நடிப்பில் இயக்குனர் கபீர் கான் இயக்கத்தில் மது மந்தேனா, விஷ்ணு இந்துரி, கபீர் கான் ஆகியோர் தயாரிப்பில் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் வழங்கும் “83” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகமெங்கும் 10 ஏப்ரல் 2020 அன்று “83” திரைப்படம் வெளியாகும் எனத் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார்-அஞ்சலி-அதுல்யா இணையும் நாடோடிகள் 2 பட ரிலீஸ் தேதி

சசிகுமார்-அஞ்சலி-அதுல்யா இணையும் நாடோடிகள் 2 பட ரிலீஸ் தேதி

anjali and sasi kumar2009 ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள்–2 ” உருவாகி வருகிறது.

இதில் சசிகுமார் – அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு – ஏகாம்பரம்

கலை – ஜாக்கி

எடிட்டிங் – ரமேஷ்

பாடலாசிரியர் – யுகபாரதி

சண்டை பயிற்சி – திலீப் சுப்புராயன்

நடனம் – திணேஷ், ஜான்

தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்.

தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்

எழுதி இயக்குகிறார் – சமுத்திரகனி.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.

விஜய்சேதுபதி & சூரி கூட்டணிக்கு ஸ்கெட்ச் போட்ட டைரக்டர்

விஜய்சேதுபதி & சூரி கூட்டணிக்கு ஸ்கெட்ச் போட்ட டைரக்டர்

vijay sethupathi and sooriதமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு மற்றும் பழமையான நிறுவனங்களில் ஒன்று விஜயா புரொடக்சன்ஸ்.

இவர்கள் எம்ஜிஆர் சிவாஜி முதல் ரஜினி கமல் போன்ற முக்கிய நடிகர்களை வைத்து படம் தயாரித்து வெற்றிக் கொடி நாட்டியவர்கள்.

மேலும் அண்மையில் விஜய் மற்றும் அஜித் படங்களையும் தயாரித்துள்ளனர்.

தற்போது தன் அடுத்த படைப்புக்கு தயாராகிவிட்டது.

இந்த படத்தை விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்குகிறார்.

விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகர் & காமெடியன் சூரி இணைந்து நடிக்க உள்ளார்.

சுந்தர பாண்டியன், ரம்மி போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து சூரி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்..

இசையமைப்பாளர் டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

சேரன் சொன்னால் இந்த மாதிரி விஷயங்கள் எடுபடும் : சாய் ராஜ்குமார்

சேரன் சொன்னால் இந்த மாதிரி விஷயங்கள் எடுபடும் : சாய் ராஜ்குமார்

Cheran starrer Rajavukku Check will be Emotional Thriller says director Sai Rajkumarஇயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என சுறுசுறுவென தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.

இதில் ராஜாவுக்கு செக் படம் எமோஷனல் திரில்லராக புதுவிதமான சேரனை நமக்கு காட்டும் படமாகத் தயாராகியுள்ளது

இந்த படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். பெயர் புதிது போல் தோன்றினாலும், ஏற்கனவே ’ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கிய அதே ராஜ்குமார் தான் இவர்.

கொஞ்ச காலம் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுவிட்டு தற்போது சாய் ராஜ்குமார் ஆக மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இந்த படம் குறித்த சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் சாய் ராஜ்குமார்.

“ ‘ராஜாவுக்கு செக்’ படத்தின் கதையை உருவாக்கி முடித்ததுமே இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்தபோது முதல் ஆளாக என் மனதில் தோன்றியவர் சேரன் தான்..

காரணம் சில விஷயங்களை சிலர் சொன்னால்தான் அது சேரவேண்டிய இடத்திற்கு சரியாக சென்று சேரும். இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு முக்கிய பிரச்சனையை மத்திம வயதில் உள்ள அதேசமயம் மக்களுக்கு நன்கு அறிமுகமான சேரன் போன்ற ஒரு நடிகர் சொன்னால் மட்டுமே அது பொதுமக்களிடம் சரியான விதத்தில் சென்று சேரும் என உறுதியாக நம்பினோம்.

அந்தவகையில் இந்த படத்தில் சேரன் ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.. எமோஷனல் த்ரில்லாராக உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’ , இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத ஒரு ஜானரை சேர்ந்த படம் என தைரியமாகச் சொல்வேன்..

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் சேரன் தனது ’திருமணம்’ படத்தையும் ஒரே மூச்சில் உருவாக்கிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் சேரனுக்கு ஒரு கெட்டப் சேஞ்ச் மாற்ற வேண்டியிருந்த. அதைக் கணக்கிட்டு, அவர் திருமணம் படத்தில் நடித்து முடித்துவிட்டு வந்ததும், அவரது கெட்டப்பினை மாற்றி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம்..

தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவுபெற்று இன்னும் சில நாட்களில் முதல் காப்பி கைக்கு வந்துவிடும். சென்சார் சான்றிதழ் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேதி ஒதுக்கீடு ஆகிய விஷயங்களுக்குப் பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முறையாக அறிவிக்கப்படும்” என்கிறார் இயக்குநர் ராஜ்குமார்

‘ராஜாவுக்கு செக்’ வைக்கும் ராணிகளாக மலையாள திரையுலகைச் சேர்ந்த சரயூ மோகன், நந்தனா வர்மா மற்றும் ஒரு முக்கியவேடத்தில் சிருஷ்டி டாங்கே என மூன்று பேர் நடித்துள்ளனர்.

சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள விஜய் டிவி புகழ் இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார்.

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் இந்த படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.

இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல் படத்தின் எடிட்டிங்கிற்காக பேசப்பட பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.

தெலுங்கில் பிரபலமாக உள்ள வினோத் யஜமானியா இசையமைப்பாளர். இப் படத்தின் மூலம் தமிழுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

எமோஷனல் த்ரில்லர் என்றாலும் படத்தில் தேவையான அளவுக்கு ஆக்சன் காட்சிகளும் உண்டு. ஆக்சன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார். ஒட்டுமொத்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Cheran starrer Rajavukku Check will be Emotional Thriller says director Sai Rajkumar

Cheran starrer Rajavukku Check will be Emotional Thriller says director Sai Rajkumar

சினிமா பாடல் பட்ஜெட்டில் மகிழ்ச்சி-யின் 8 பாடல்களை தயாரித்த ரஞ்சித்

சினிமா பாடல் பட்ஜெட்டில் மகிழ்ச்சி-யின் 8 பாடல்களை தயாரித்த ரஞ்சித்

Director Pa Ranjith Produced Magizhchi album in huge budgetஇயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் இயங்கி வருகிறார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றி படமாகிய “பரியேறும் பெருமாள் ” படத்தை தயாரித்ததோடு தனது அடுத்த படத்தை “இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு” என்ற பெயரில் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தனது கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினர் இசையமைத்த பாடலை இயக்கியுள்ளார்.

நடன இயக்குனர் சாண்டி யின் நடனத்தில் கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு சினிமா படத்தின் பாடலுக்கு செலவாகும் பொருட்ச்செலவில் படமாக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி என்று துவங்கும் இந்த பாடலில் நடிகர் கலையரசன், லிங்கேஷ் , ஹரி, சாண்டி மற்றும் குழுவினர் பங்குபெற்றுள்ளனர்.

மகிழ்ச்சி ஆல்பத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் வெளியாகியிருக்கிறது.

Director Pa Ranjith Produced Magizhchi album in huge budget

காவல் துறை உங்கள் நண்பனுக்கு குரல் கொடுக்கும் ஹரிசரண்

காவல் துறை உங்கள் நண்பனுக்கு குரல் கொடுக்கும் ஹரிசரண்

Haricharan to trill a song for Kaval Thurai Ungal Nanbanஒரு திறமையான பாடகரால் மட்டுமே பாடலின் தன்மையை மேலோக்கி கொண்டு செல்ல முடியும்.

இதை பல முன்னோடிகள் செய்திருப்பதால் மக்களும் தங்கள் இசை ஞானத்தை வளர்த்து பாடகர்களையும் பாடலாசிரியர்களையும் பாராட்டும் அளவிற்க்கு வளர்ந்து விட்டனர்.

இந்த லிஸ்டில் பாடகர் ஹரிசரண்னின் குரலையும், பாடல்களையும் ரசிப்பதற்கென்று தனி பட்டாளம் உள்ளது.

தனது ரசிகர்களை பாடல்கள் மூலம் மகிழ்விக்கும் ஹரிச்சரண் தனது அடுத்த பாடலை “காவல் துறை உங்கள் நண்பன்” என்ற படத்திற்க்காக பாடியுள்ளார்.

“ராணி தேனீ” என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்பாடலை கதைக்குப் பொருத்தமாக இசையமைத்திருக்கிறாராகள் இசையமைப்பாளர்கள் ஆதித்யா- சூர்யா.

இந்த பாடலுக்கு வரிகள் எழுதியது ஞானக்குமரவேல்.

நடிகர் சுரேஷ் ரவி மற்றும் நடிகை ரவீனா ரவி நடித்திருக்கும் “காவல் துறை உங்கள் நண்பன்” , காவலருக்கும் -டெலிவரி executive உறவை பற்றி பேசும்.

காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படத்தை RDM இயக்க , பி.ஆர்.டாக்கிஸ் மற்றும் வைட் மூன் டாக்கிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Haricharan to trill a song for Kaval Thurai Ungal Nanban

More Articles
Follows