நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த்-பிரியங்கா திருமணம் நடைபெற்றது

நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த்-பிரியங்கா திருமணம் நடைபெற்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ramesh Kanna Son Jashwanth Kannan Priyanka Wedding news updatesநடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் RS ஜஸ்வந்த் கண்ணன் -K பிரியங்கா திருமணம் இன்று (02-12-2018, ஞாயிற்றுகிழமை) காலை சென்னை கோயம்பேடில் உள்ள ஸ்ரீ வராஹம் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.

சரியாக காலை 8.56க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

மணமகன் RS ஜஸ்வந்த் கண்ணன், தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண வரவேற்பில் விஜய், கவுண்டமணி உள்ளிட்ட நடிகர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Ramesh Kanna Son Jashwanth Kannan Priyanka Wedding news updates

அமேசான் பிரைம் வீடியோவில் டிசம்பர் 7 முதல் *வெள்ள ராஜா*

அமேசான் பிரைம் வீடியோவில் டிசம்பர் 7 முதல் *வெள்ள ராஜா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amazon Prime Video Announces its First Tamil Prime Exclusive Series Vella Rajaட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பாபி சிம்ஹா – பார்வதி நாயர் நடிக்கும் இத்தொடர், டிசம்பர் 7 அன்று, அமேஸான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமடி, பிரைம் ஒரிஜினல் நிகழ்ச்சிகள், விளம்பரமின்றிஇசை கேட்டலுக்கான அமேஸான் பிரைம் மியூசிக், தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளின் துரிதமான இலவச டெலிவரி, டாப் டீல்களுக்கான அணுகுவசதி, பிரைம் ரீடிங் உடன் அன்லிமிடெட் ரீடிங் ஆகியவை அனைத்தும் பிரதி மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்கும் மிகச்சிறந்த மதிப்பினை பிரைம் வழங்குகிறது.

டிசம்பர்1, 2018: பிரைம் உறுப்பினர்களுக்கான தனது முதல் பிரைம் பிரத்தியேகத் தொடராக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடனான கூட்டாண்மையில்உருவாக்கப்பட்டுள்ள வெள்ள ராஜா- ன் அறிமுகத்தினை அமேஸான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 7, 2018 அன்று 200 நாடுகள் மற்றும்பிராந்தியங்களில் ஒளிபரப்பபடவுள்ள வெள்ளை ராஜா பிரைம் உறுப்பினர்களுக்காக, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் கிடைக்கப்பெறும்.

அமேஸான் பிரைம் வீடியோ இந்தியா, உள்ளடக்கப்பிரிவின் இயக்குனர் மற்றும் தலைவர் திரு.விஜய் சுப்ரமணியம் அவர்கள், “எங்களது தமிழ் பிளாக்பஸ்டர்திரைப்படங்கள் தொகுப்புகளின் உள்ளடக்கத்திற்கு நாங்கள் தமிழக நேயர்களிடம் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளோம்.

இந்தியாவிலிருந்து கதைகளைஎடுக்கவும் மற்றும் உள்ளுர் விவரணைக்குப் பொருந்தும் அதே நேரத்தில் உலகளாவிய அம்சங்களையும் கொண்டுள்ள கதைகளை உருவாக்கவும்உறுதிப்பாடு மேற்கொண்டுள்ளோம்.

சிறந்த கதைகளை பல்வேறு மொழிகளிலும் கூறும் அமேஸான் பிரைம் வீடியோவின் உறுதிப்பாட்டினை இது மறுஉறுதி செய்கிறது. சர்வதேச ரீதியிலான, பிராந்திய மற்றும் உள்ளூர் தலைப்புகளை தொடர்ந்து இந்தியாவிலும் மற்றும் உலகளாவிய அளவிலும் அறிமுகம்செய்வதில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடவுள்ளோம்” என்று கூறினார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், S.R.பிரபு அவர்கள், “தமிழில், பிரம்மாண்டமான முறையில், ஒரு தைரியமான கதையை சொல்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும்மற்றும் ஆர்வமும் கொண்டுள்ளோம்.

எங்களது அனைத்து பணிகளிலும், தரமான பொழுதுபோக்கினை வழங்க நாங்கள் அயராது முயற்சிக்கிறோம்.

வழக்கம்போல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் ஆழமாக உருவாக்கியுள்ளோம் மற்றும் ஒரு சிக்கல், மர்மம் நிறைந்த போதை மருந்து உலகம் குறித்து, சிற்சில புன்னகை நேர்வுகளுடன் இந்த பிரைம் பிரத்தியேக தொடரை வடிவமைத்துள்ளோம்.

ஆர்வமூட்டும் கதை, நம்பத்தக்க இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மற்றும் உறுதியான நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டுள்ள இது, பிரைம் வீடியோ நேயர்களால் பெரிதும் விரும்பப்படும் என்றுநம்புகிறோம்.

மேலும் இந்த உள்ளுர் கதையை இந்தியாவிலுள்ள நேயர்களுக்கு ஏற்றவாறு மட்டுமின்றி, அமேஸான் பிரைம் வீடியோவில் இணைந்துள்ளஅனைத்து சர்வதேச நேயர்ளுக்கும் ஏற்றவாறு வடிவமைத்துள்ளோம்” என்று கூறினார்.

வெள்ளை ராஜா குறித்து

வடசென்னையின் மையத்தில் அமைந்துள்ளதொரு பிரபலமான லாட்ஜ், பாவா லாட்ஜாகும். இந்த லாட்ஜில் தங்கி, பணையக் கைதி சூழலில் இருக்கும்நபர்களைச் சுற்றி இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பிரலமானதொரு போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனான தேவா ஒரு கொக்கைன் (Cocaine) சோதனையைத் தொடர்ந்து அங்கு ஒளிந்திருக்கிறான்.

அவன் காவல்துறையின் மற்றும் தனது எதிரிகளின் தடைகளை மீறி தனது பொருட்களுடன் தப்பிக்கவேண்டும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸால் தயாரிக்கப்பட்டு, குகன் சென்னியப்பன் அவர்களால் இயக்கப்பட்டுள்ள இத்தொடரில், பாபி சிம்ஹா மற்றும் பார்வதிநாயர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Amazon Prime Video Announces its First Tamil Prime Exclusive Series Vella Raja

https://www.filmistreet.com/video/vella-raja-official-teaser/

பட்டுக்கோட்டையை படு நாசமாக்கிய கஜா; படமாக்கிய இடங்களை பார்த்து *சீமத்துரை* வேதனை

பட்டுக்கோட்டையை படு நாசமாக்கிய கஜா; படமாக்கிய இடங்களை பார்த்து *சீமத்துரை* வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seemathurai felt sad about Gaja cyclone affected areas where they done shoot’சீமத்துரை’ என்னும் பெயரை கேட்டாலே நமக்கு கிராமங்களும் அங்கே வெள்ளந்தியாக திரியும் இளைஞர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். கிராமங்களில் வாழும் ஒவ்வொரு இளவட்ட வாலிபர்களுமே சீமத்துரை தான்.

அப்படி எங்கள் பகுதியான பட்டுக்கோட்டையை சுற்றி நடந்த உண்மை சம்பவங்களை வைத்துதான் இந்த படத்தை எடுத்து இருக்கிறோம்.

காலம் மாறினாலும் பிரச்சினைகள் மட்டும் மாறாது என்பார்கள். அந்த மாதிரி இன்றைக்கும் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவானது தான் சீமத்துரை படம்.

கிராம மக்களுக்கு அருவா, கத்தி மட்டும் ஆயுதம் அல்ல. பாசமும் ஒரு ஆயுதம் தான். பாசத்துக்கும் கர்வத்துக்கும் இடையே நடக்கிற போராட்டத்தை வாழ்வியலோடு பதிவு செய்து இருக்கிறோம்.

சீமத்துரை என்னும் தலைப்புக்கேற்றாற்போல் காதல், கலாட்டா, கலவரம் என்று எல்லாம் கலந்த ஒரு படமாக சீமத்துரை இருக்கும்.

படத்தில் கீதன் கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் ஊர் ஊராக சென்று கருவாடு விற்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

’நான் மகான் அல்ல’ மகேந்திரன், ’கயல்’ வின்செண்ட் ஆகியோர் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர்.

ஆதேஷ் பாலா, மதயானை கூட்டம் காசி மாயன், மேடை கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் பேசும்போது, ‘ தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையை சுற்றி தான் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பட்டுக்கோட்டையை சுற்றி உயர்ந்து நின்ற தென்னை மரங்கள் படத்தில் முக்கியமாக பதிவு செய்தோம்.

ஆனால் அந்த தென்னை மரங்களை கஜா புயல் சுத்தமாக அழித்துவிட்டது.

நாங்கள் அழகாக படம் பிடித்த பகுதிகள் இன்று அலங்கோலமாக கிடப்பதை பார்க்கும்போது படக்குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்து மக்கள் எங்களை அவர்கள் குடும்பங்களில் ஒருவராக நடத்தினார்கள். அவர்கள் மீண்டு எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.’ என்றார்.

இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின், ஒளிப்பதிவு – D திருஞான சம்பந்தம், படத்தொகுப்பு – T வீர செந்தில்ராஜ், பாடல்கள் – அண்ணாமலை, நடனம் – சந்தோஷ் முருகன்,
தயாரிப்பு – புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா
இணை தயாரிப்பு – ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சந்தோஷ் தியாகராஜன்

Seemathurai felt sad about Gaja cyclone affected areas where they done shoot

பாடல்களே இல்லாத பிரசாந்தின் *ஜானி* டிசம்பர் 14ல் ரிலீஸ்

பாடல்களே இல்லாத பிரசாந்தின் *ஜானி* டிசம்பர் 14ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Top Star Prashanth starrer Johnny set to release on 14th Dec 2018டாப் ஸ்டார் பிரசாந்த் மற்றும் சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடித்துள்ள படம் ஜானி.

இதில் பிரபு மற்றும் ஆனந்த்ராஜ் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரித்துள்ளார்.

ஜீவா சங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெற்றிச்செல்வன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அண்மையில் இப்படத்தில் டீசர் வெளியாகி பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்தது.

கள்ள நோட்டை மையமாக வைத்து இந்த ஆக்‌ஷன் படத்தை உருவாக்கியுள்ளனர்.

வருகிற டிசம்பர் 14ல் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் பாடல்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Top Star Prashanth starrer Johnny set to release on 14th Dec 2018

*இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு* படத்துடன் மோதும் *சீமத்துரை*

*இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு* படத்துடன் மோதும் *சீமத்துரை*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ivanukku Engeyo Macham Irukku movie clash with Seemathuraiரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் ரிலீஸ் இந்த வாரம் இருந்ததால், மற்ற படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

தற்போது வருகிற டிசம்பர் 7ஆம் தேதி இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு மற்றும் சீமத்துரை ஆகிய 2 படங்கள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதுபற்றிய விவரம் இதோ….

சாய் புரொடக்சன் நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சரவணன் தயாரித்துள்ள படம் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு“.

இதில் விமல், ஆஷ்னா சாவேரி, ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடித்துள்ளனர்.

ஆங்கில நடிகை “மியா ராய்“ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தை முகேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

சீமத்துரை படத்தில் கீதன் நாயகனாகவும், வர்ஷா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார்.

’நான் மகான் அல்ல’ மகேந்திரன், ’கயல்’ வின்செண்ட் ஆகியோர் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர்.

ஆதேஷ் பாலா, மதயானை கூட்டம் காசி மாயன், மேடை கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின், ஒளிப்பதிவு – D திருஞான சம்பந்தம், படத்தொகுப்பு – T வீர செந்தில்ராஜ், பாடல்கள் – அண்ணாமலை, நடனம் – சந்தோஷ் முருகன், தயாரிப்பு புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா, இணை தயாரிப்பு ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம்

Ivanukku Engeyo Macham Irukku movie clash with Seemathurai

ஆலங்குடி கணேசனுக்கு 10 லட்சம் செலவில் வீடு கட்டும் லாரன்ஸ்

ஆலங்குடி கணேசனுக்கு 10 லட்சம் செலவில் வீடு கட்டும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழை குடிமகனாக வாழ்ந்தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் ஆலங்குடி கணேசன்.

அனாதையாக பிறந்தவர் யாரும் இல்லை. ஆனால் யாரும் அனாதையாக இறக்கக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையால் ஏறக்குறைய 500 அனாதை சடலங்களை அந்தந்த மத முறைப்படி ஈமக்கிரியை செய்து தகனம் மற்றும் அடக்கம் செய்தவர் இந்த கணேசன்.

இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் யாருக்காவது ஏதாவது ஒன்று என்றால் ஓடோடி வந்து உதவி செய்பவர் கணேசன்..

கேரள வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம் நிதி திரட்டி அனுப்பி வைத்தவர் இவர்.

இந்த இரக்கமுள்ளவரின் வீட்டையும் இரக்கமில்லாமல் கஜா காவு வாங்கி விட. அதையும் பொருட்படுத்தாமல் கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப் போய் விட்டார்.

இதை கேள்விப்பட்ட ராகவா லாரன்ஸ் அந்த வீட்டை நேரில் போய் பார்த்து உடனடியாக புதிய வீட்டை கட்டிக் கொடுக்க முடிவெடுத்து அதற்கான பூமி பூஜையை இன்று துவக்கி வைத்துள்ளார்.

சாதாரண வீடு மாதிரி இல்லாமல் எல்லா வசதிகளுடன் அவரை வாழ வைத்து பார்க்க வேண்டும்…வீட்டுக்கு அவர் போனால் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பாத்திரங்கள் கட்டில் பீரோ மின் விசிறி ஏ.சி.என்று வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.. வீடு கட்ட சுமார் 7.50 லட்ச ரூபாய்க்கு மேலே ஆகும் மற்ற செலவுகளுக்கு 2.50 லடசம் செலவு ஆகும் மொத்தம் பத்து லட்சம் ஆகலாம் என்றாலும் பரவாயில்லை…..

எனென்றால் அவரை என் அப்பா ஸ்தானத்தில் பார்க்கிறேன்” என்கிறார் ராகவா லாரன்ஸ்

More Articles
Follows