ஹாட்டான ’கிளைமாக்ஸ்’; ஊரடங்கிலும் படத்தை ரிலீஸ் செய்யும் ராம் கோபால் வர்மா

ஹாட்டான ’கிளைமாக்ஸ்’; ஊரடங்கிலும் படத்தை ரிலீஸ் செய்யும் ராம் கோபால் வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ram gopal varma climaxசர்ச்சையான இயக்குனர் என்று பெயரெடுத்தவர் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா.
இவரின் இயக்கத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மல்கோவா நடித்துள்ள படம் தான் ’கிளைமாக்ஸ்’.

சமீபத்தில் ’கிளைமாக்ஸ்’ பட டிரைலரை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.

இதில் முழுக்க முழுக்க ஹாட்டான காட்சிகள் மற்றும் திகில் காட்சிகளே இருந்தன.

இந்த நிலையில் கொரோனாவால் என் படத்தை நிறுத்த முடியாது என்று கூறி, வரும் இவர் வருகிற மே 29ஆம் தேதி காலை 11 மணிக்கு புதிய ஆப் மூலம் படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இசைத் துறையை விட்டு விலகும் பாகுபலி பட இசையமைப்பாளர்

இசைத் துறையை விட்டு விலகும் பாகுபலி பட இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MM Keeravaniதெலுங்கு சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் எம்.எம்.கீரவாணி.

இவர் ஏற்கனவே தமிழ் படங்களில் மரகதமணி என்கிற பெயரில் இசையமைத்துள்ளார்.

தெலுங்கு, இந்தி, தமிழ் உள்பட சுமார் 220 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் இவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றே சொல்லலாம்.

பாகுபலி படத்திற்கு இவர் தான் இசையமைத்திருந்தார்.

தற்போது ராஜமவுலி இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கும் இவர் தான் இசை.

இந்த நிலையில் ஒரு பேட்டியின்போது விரைவில் தான் இசைத்துறையை விட்டு ஓய்வுபெற போவதாக அறிவித்துள்ளார் கீரவாணி.

38 வயதில் திருமணம்; 42 வயதில் குழந்தை பெற்றெடுத்த தல-தளபதி பட நாயகி

38 வயதில் திருமணம்; 42 வயதில் குழந்தை பெற்றெடுத்த தல-தளபதி பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress sanghaviநடிகர் அஜித்குமார் அறிமுகமான ‘அமராவதி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சங்கவி.

நடிகர் விஜய்யுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்துடன் பாபா படத்திலும் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ‘கொளஞ்சி’ படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக நடித்திருந்தார்

இவர் தனது 38-வது வயதில் அதாவது கடந்த 2016-ல் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு 42-வது வயதாகிறது-

இந்த நிலையில் சங்கவி ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சங்கவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை அப்செட் ஆக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு

ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை அப்செட் ஆக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

JR NTRபாகுபலி என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கி வரும் படம் ஆர்ஆர்ஆர்.

இந்த படம் 1920 களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

அல்லுரி சிதாராம ராஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை தான் இந்த படம்.

ராம் சரண் ‘தியாகி அல்லுரி சித்தாராம ராஜு’வாகவும், என்டிஆர் ‘தியாகி கொமரம் பீமாகவும் நடித்து வருகின்றனர்.

இந்த இரு நாயகர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ஒலிவியா மொரிஸ், மற்றும் பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்துக்கு பாகுபலி புகழ் கீரவாணி இசையமைக்கிறார்.

இந்த நிலையில் ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான நாளை மே 20ஆம் தேதி அவர் ஏற்று நடிக்கும் கேரக்டரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்த படம் தொடர்பாக எந்த போஸ்டரும் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஆர்ஆர்ஆர் படத்தின் பணிகளைத் தொடரமுடியவில்லை. என படக்குழு தெரிவித்துள்ளது.

இது ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை கடும் அப்செட்டாக்கியுள்ளதாம்.

ராஷ்மிகா முதன் முறையாக பார்த்த படமே விஜய் படம் தானாம்

ராஷ்மிகா முதன் முறையாக பார்த்த படமே விஜய் படம் தானாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ghilliகொரோனா பொது முடக்கத்தால் அனைவரும் கடந்த 2 மாதங்களாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

சினிமா பிரபலங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வந்து மக்களை மகிழ்விக்க ஏதாவது வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சிலர் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் உரையாடியும் வருகின்றன்ர.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுடன் உரையாடினார்

அப்போது அவரிடம் ஒரு ரசிகர் நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம் எது? என கேட்டுள்ளார்.

கில்லி படம் என்று நினைக்கிறேன். என் அப்பாவுடன் சென்று பார்த்தேன். சரியான பதில் கிடைக்கனும் என்றால் அப்பாவிடம் தான் கேட்கனும்.

அப்போது அவருக்கு சினிமா ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் நடிகையான பிறகு அவர் படம் பார்ப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.

வண்டலூர் பூங்கா புலியை மீண்டும் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

வண்டலூர் பூங்கா புலியை மீண்டும் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan இந்தியாவில் உள்ள பிரபலமான விலங்குகள் பூங்காவில் ஒன்று சென்னை வண்டலூர் பூங்கா.

உயிரியல் பூங்காக்களில் அதிகளவு விலங்கு வகைகளை கொண்ட பூங்காவாக இது திகழ்ந்து வருகிறது.

இதில் விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக “விலங்கு தத்தெடுப்பு” திட்டம் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் விருப்பமானவர்கள் தங்களுக்கு பிடித்த விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்னும் வெள்ளை புலியை மேலும் 4 மாதங்களுக்கு மே 2020 முதல் தத்தெடுத்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே 2018-ம் ஆண்டு முதல் இந்த புலியை தத்தெடுத்துள்ளார். இந்த புலி வண்டலூர் பூங்காவில் உள்ள 14 வெள்ளைப்புலிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More Articles
Follows