ராம் இயக்கத்தில் திரைப்பட்டறை வழங்கும் *மாணவன்* நாடகம்

Ram directorial Thiraipattarai Maanavan dramaதிரைப்பட்டறை என்ற திரைத்துறை பயிற்சி கூடம் ஒன்று சென்னையில் இயங்கி வருகிறது.

இங்கு, கலைத்துறையில் பயில விரும்பும் நபர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதில் சுமார் 25 சிறுவர், சிறுமிகளும், 60க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஞாயிறு தினம் ‘மாணவன்’ என்ற தலைப்பில் ஒரு நாடகம் அரங்கேறியது.

அந்த நாடகம் பற்றி ஒரு பார்வை…

படிக்காத ஒரு ஏழை தந்தை தன் மகனை இஞ்சினியராக ஆக்க ஆசைப்பட்டு ஒரு தனியார் கல்லூரியில் சேர்க்கிறார்.

அந்த ஏழை மாணவன் அரசுப் பள்ளியில் படிந்து வந்தவர் என்பதால் ஆங்கிலத்தில் பேச தவிக்கிறான்.

இதனால் கல்லூரியில் சீனியர் மாணவர்களால் ரேகிங் செய்யப்படுகிறான். ஆங்கில அறிவு இல்லாதவன் என அவனை கிண்டல் செய்கிறார்கள்.

தேர்வு வருகிறது. முதல் செமஸ்டரில் பெயில் ஆகிறார். இதனால் சீனியரின் கேலிக்கும் உள்ளாகுகிறார்.

எனவே தற்கொலை செய்துக் கொள்ள ரயில் முன் பாய நினைக்கிறார். அப்போது அங்கு ப்ளாட்பாரத்தில் கர்ச்சிப் விற்கும் ஒரு சின்ன பையன் அவனை தடுத்து அவனுக்கு பல மொழிகளில் அட்வைஸ் செய்கிறார்.

மேலும் ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான் அது அறிவு அல்ல என அறிவுரை செய்து அனுப்பி வைக்கிறான்.

அதன்பின்னர் கடுமையான முயற்சி செய்து, நன்றாக படிக்கிறார் அந்த மாணவன். இறுதியில் தன் ஆங்கில திறமையை தன்னை கேலி செய்த மாணவர்கள் முன் நிரூபிக்கிறான் அந்த மாணவன்.
இதனால் அவரது தந்தை உட்பட அனைவரும் பாராட்டுகின்றனர்.

கேரக்டர்கள்…

ஏழை மாணவன், மாணவனின் தந்தை, ரேகிங் செய்யும் சீனியர், கைத்துண்டு விற்பவன் என ஒவ்வொரு அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சீனியர் மாணவர் நிஜமாகவே தன் ரேகிங் செய்து அடித்தும் விட்டார்.

மேலும் மிக்சர் தின்னும் ஒரு மாணவனும் காமெடி செய்து அசத்தினார்.

மாணவியாக வரும் ரேஷ்மாவும் அசத்தியுள்ளார்.

முக்கியமாக நாடகத்தின் காட்சிகளுக்கு ஏற்ப பின்னணி இசை பலம் சேர்த்துள்ளது.

இந்த நாடகத்தை இயக்கிய ராம் மற்றும் விஜி ஆகியோரை பார்வையாளர்கள் அனைவரும் பாராட்டி கௌரவித்தனர்.

Ram directorial Thiraipattarai Maanavan drama

நடிகர்கள்

ஏழை மாணவன் மாரிமுத்து : ராஜேஷ்
ஏழை அப்பா : ஆனந்த்
சீனியர் விக்கி:சரத்
சீனியர் ரேஷ்மா  :  சக்தி
மிச்சர் பாய் ;ஆனந்த்
கைக்குட்டை விற்பவன் :முருகன்
ப்ரொபசர் : நிவேதா
எழுத்து இயக்கம்: L.  ராம்
வசன உதவி : மதன் & விஜி

 

Overall Rating : Not available

Related News

Latest Post