சினிமா பிஆர்ஓ.க்கள் நடத்தும் முப்பெரும் விழாவில் ரஜினி-கமல்

சினிமா பிஆர்ஓ.க்கள் நடத்தும் முப்பெரும் விழாவில் ரஜினி-கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and kamal haasanதமிழ் சினிமாவின் முதல் பிஆர்ஓ என்றால் அது பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்கள்தான்.

அதுநாள் வரை அப்படி ஒரு நபரே இல்லாத திரையுலகில் எம்ஜிஆர்.தான் அவரை அறிமுகப்படுத்தினார்.

பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த போது கலைமாமணி விருது கொடுத்ததும், திரைப்படம் குறித்தான பிலிம் நியூஸ் ஆனந்தனின் ஆவணப்பணிகளுக்கு ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நிதியுதவி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த துறை 60 வருடங்களை கடந்துவிட்டது.

ஆனால் இதுமுறையாக அமைக்கப்பட்டு, அதற்கான சங்கம் உருவாகி 25 வருடங்களை கடந்துள்ளது.

தற்போது பிஆர்ஓ. யுனியன் (மக்கள் தொடர்பாளர்) சங்கத்தில் 60 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில், பிஆர்ஓ என்ற துறையை ஏற்படுத்திய எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவரது நூற்றாண்டு விழாவையும் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததன் விழாவையும் இதனை முறையாகப் பதிவு செய்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சேர்த்து வரும் ஜனவரி 3, 2018 அன்று முப்பெரும் விழாவாகக் கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்த விழாவை, அரசியல் கலப்பில்லாமல் முழுக்க முழுக்க திரைப்படத்துறை சார்ந்த விழாவாகக் கொண்டாட முடிவு செய்து பிரதமர், குடியரசுத்தலைவர், தமிழக முதலமைச்சர், கவர்னர் , எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்விழாவில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான கமல், ரஜினி ஆகியோர் கலந்துக் கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திரைப்படத்துறையின் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் இதில் கலந்துக் கொள்வார்கள் என கூறப்படுகிறது.

மேலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் பணியாற்றியிருக்கும் நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் உட்பட 76 பேரை நிகழ்ச்சிக்கு வரவழைத்து கெளரவப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இசையமைப்பாளர் சங்கர் – கணேஷ் குழுவினர் எம்.ஜி.ஆர் பாடல்களை இசைக்கவுள்ளார்கள். நடன அமைப்பாளர் கலா குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்க தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளர் விஜயமுரளி உள்ளிட்ட நிர்வாகிகள் பிரமாண்ட அளவில் செய்து வருகிறார்கள்.

இந்த முப்பெரும் விழா, எம்.ஜி.ஆரைக் நாயகனாக அறிமுகப்படுத்திய கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருப்பதும், கலைவாணரின் பேத்தி பாடகி ரம்யா, கடவுள் வாழ்த்து பாடவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விஷால்-சேரன் கடும் மோதல்; பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்

விஷால்-சேரன் கடும் மோதல்; பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and cheranதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

சிறிது நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், சங்கத்தின் செயல்பாடுகள் சரியில்லை என்றும், ஊழல் நடந்திருப்பதாகவும் சேரன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் குழு புகார் தெரிவித்தது.

இதன் காரணமாக விஷால் சங்கத்தின் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று சில உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

இதனையடுத்து விஷால் மற்றும் சேரன் தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் எல்லை மீறியதால் இந்த பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தேசிய கீதம் மட்டுமே ஒலிக்கப்பட்டது. அதன்பின்னர் நடந்த பிரச்சினையால் விஷால் வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிணங்களை அள்ளிவரும் குமரி மீனவர்கள்; ஜிவி.பிரகாஷ்-ஆரி உருக்கம்

பிணங்களை அள்ளிவரும் குமரி மீனவர்கள்; ஜிவி.பிரகாஷ்-ஆரி உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash and Aariகன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் நடிகர் ஆரி மற்றும் ஜி.வி பிரகாஷ் வேண்டுகோள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடிக்க சென்றவர்கள் மீன்களுக்கு பதிலாக பிணங்களை கொண்டுவருகிறார்கள் என வருந்தும் ஆரி மற்றும் ஜி.வி.பிரகாஷ்

அந்த மக்களை பற்றி அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூற வந்தோம்.

ஆனால் இங்கே இதுவரை மொத்தம் 60க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக கூறுகிறார்கள் சின்னதுறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரெம்யாஸ், ரஜுஸ்,ஜெயின், ஆண்டனி என நால்வர் உயிர் இழந்துள்ளனர் அந்த குடும்பத்தில் அனைத்து ஆண்களும் இறந்துவிட்டார்கள் அவர்களை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது.

இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீடு திரும்பவில்லை என்று கூறும் போது மனது படபடக்கிறது.

மீனைத்தேடி கடல் சென்றவர்கள் பிணங்களாக வருகிறார்கள்.

இவர்களின் வாழ்வாதாரமே இந்த மீன்பிடி தொழில்தான் ஆனால் முறையான தொழில் நுட்பம் இல்லாமல் கடலில் சென்றதால் இம்மாவட்டத்தின் பாதி குடும்பத்தில் ஆண்களை இழந்து பெண்கள் விதவைகளாக வாழ்கிறார்கள்.

மேலும் இரப்பர் தோட்டம், வாழை தோட்டம் போன்றவைகளோடு விவசாயமும் அழித்ததால் அவர்கள் வாழ வழியின்றி உயிர் வாழ்கிறார்கள்.

ஒரு வீட்டில் டீவி செல்போன் இருந்தால் அவர்களின் வாழ்க்கை வசதியாக இருக்கும் என்று அரசு நினைக்காமல் கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

மேலும் அரசு மீனவர்கள் மீன்பிடிக்க விஞ்ஞான முறையில் அவர்களுக்கான சாதனங்களை ஏற்படுத்தி தரவேண்டும்

அதேபோல் வெளிநாட்டில் உள்ளது போல் ஆளில்லா விமானம் மூலம் கடலில் மீனவ மக்களை கண்டுபிடித்தல் போன்றவற்றை அரசு உடனே செய்து உதவிட வேண்டும் என்றார்கள்

மேலும் அண்டை நாடுகளில் மீனவர்களுக்கான தொழில்நுட்பத்தை அந்தந்த அரசுகள் ஏற்படுத்தி தருவதைபோல் நம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஏற்படுத்தி நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உயிரையும் காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே இந்த இழப்பு நமக்கு உருவாக்கி உள்ளது” என்றனர் இந்த மனித நேய நடிகர்கள்.

கண்ணீரில் தவிக்கும் குமரி மீனவர்களுக்கு உதவிய அபி சரவணன்

கண்ணீரில் தவிக்கும் குமரி மீனவர்களுக்கு உதவிய அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Abi Saravanan helping Kanyakumar fishermenகுமரி மாவட்டத்தை குறிவைத்து தாக்கிய ஒகி புயலினால் மீனவ சமுதாயம் பெரிதளவில் இழப்பை உண்டாக்கியது. சின்னாபின்னமான வாழைமரங்கள் போல அனைத்துதரப்பு மக்களையும் குலை நடுக்க வைத்தது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் பலியாகிய மீனவர்களின் முகத்த நொடிகூட பார்க்க முடியாத அளவு மாறிவிட்டது.

மனபாரம்தாங்காமல் குமரி மாவட்டத்திற்கு பயணமானேன். வழியில் என்னால் இயன்ற தேவையான நிவராண பொருட்களை காரில் நிரப்பியவாறு சென்றேன்..

அதிகாலை குமரியின் மீனவ கிராமங்களில் நுழைந்த போது காதைமட்டுமல்ல இதயத்தை துளைத்த கதறல்கள். அப்பாவை தேடும் குழந்தையும் அண்ணணை தேடும் தங்கை கணவனை தேடிய மனைவிகளின் கதறல் கடவுளுக்கே கண்ணீரை தரும்.

அதேநேரம் சுசீந்தரம் பகுதியில் உள்ள ஒருகிராமத்தில் ஒரு பகுதியின் மக்கள் உணவு தணீரின்றி தவிப்பதாகவும் இதுவரை எந்த அரசியல்வாதிகளா அதிகாரிகளோ மீடியாக்களோ தொண்டு நிறுவனங்களோ காலை வைக்காத பகுதி என நண்பர் பிரபு மூலம் தகவல் கிடைக்க. உடனடயாக பயணமானோம்.

அந்த பகுதிக்கு செல்ல முடியாதவாறு சாலை துண்டாகியிருந்ததே காரணம். நடந்து சென்ற போது அந்த குழந்தைகளின் பசிக் கதறலை தாண்டி பெண்கள் மற்றும் பெரியவர்களின் பசியின் வலியை வார்த்தையால் கேட்க முடிந்தது.

அவர்களுக்கு தேவையான உடனடி உணவுகளை வழங்கியபோது, வழங்கிய நொடியிலே அவர்கள் உண்டபோது அவர்களின் வேதனையை உணர முடிந்தது.

பின் அவர்களிடம் விவரம் கேட்டறிந்த போது கண்துடைப்பாக நான்கு நாட்கள் முகாமில் வைக்கப்பட்டு திருப்பி கட்டாய படுத்தி அனுப்பபட்டதாகவும் தண்ணீரின்றி ஒரு நாளாக தவிப்பதாகவும் கதறினர்.

உடனே புதியதலைமுறை நிருபர் அன்பு அண்ணன் நாகராஜ் அவரகளை தொடர்புகொண்டு தகவலித்தபோது பத்து நிமிடத்தில் கேமராவோடு வந்து சேர்ந்தார். அனைவரிடமு் குறைகளை கோரிக்கைகளை பதிவு செய்தார்.

இந்த தெருவில் இருபத்தி எட்டு வீடுகளில் எட்டு வீடுகள் ஒகியால் இடிந்து தரைமட்டமானது. பன்னிரு வீடுகள் சேதமாகியுள்ளது.

அனைவரும் நடுத்தெருவில் குழந்ளைகளுடன் இரவு தூங்கியுள்ளர். வயது பெண்களின் அவஸ்தை சொல்ல முடியால் கண்ணீேராடு ஒதுங்கி நின்றனர். மூன்று குடும்பத்தினர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தரைமட்டமான வீடுகளில் எதையோ தேடியவர்களிடம் என்வென விசாரித்தபோது ஆதார்கார்டுஎனவும் அது இருந்தால் மட்டுமே முகாம் செல்ல முடியும் நிவாரணம் பெற முடியும் என கதறினர்.

காரில் உள்ள நிவாரண பொருட்களளை நண்பர் பிரபு மற்றும் மக்கள் உதவியுடன் தூக்கி சென்று அனைவருக்கம் பகிர்ந்தளித்தோம்.

மேலும் அவசர நிவாரண நிதி தலா மருத்துவ செலவுகளுக்காக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

Actor Abi Saravanan helping Kanyakumar fishermen

abi saravanan at kanyakumari

இணையத்தில் வைரலாகும் நீது சந்திராவின் டாப்-லெஸ் வீடியோ

இணையத்தில் வைரலாகும் நீது சந்திராவின் டாப்-லெஸ் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Neetu Chandras hot video goes viralஅழகுடன் கூடிய திறமை, கவர்ச்சி, ஆக்சன் என எந்தவிதமான ரோல்கள் என்றாலும் அசால்ட்டாக செய்யக் கூடியவர் நடிகை நீது சந்திரா.

யாவரும் நலம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமான இவர், தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் கவர்ச்சி உடையில் முதுகை காட்டியப்படியே பின்னாடியே வாங்க என்று அழைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Neetu Chandras hot video goes viral

ஓபிஎஸ் பாணியில் ஜெயலலிதா சமாதியில் சிவா தியானம்

ஓபிஎஸ் பாணியில் ஜெயலலிதா சமாதியில் சிவா தியானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamilpadam 2point0 news updatesசிஎஸ். அமுதன் இயக்கிய ‘தமிழ் படம்’ படத்தின் 2-ம் பாகத்திற்கு ‘தமிழ்படம் 2.O’ என பெயரிட்டு இருக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு நாளை (டிசம்பர் 11) சென்னையில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இன்று டிசம்பர் 10 இப்படத்தின் நாயகன் சிவா தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

சிவா பிறந்த நாளை முன்னிட்டு ‘தமிழ்படம் 2.O’ படக்குழு, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதில் ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் இருப்பது போன்ற புகைப்படம் தமிழகமெங்கும் பிரசித்தி பெற்றது.

அதே போன்று சிவா அமர்ந்திருப்பது போன்று இப்போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள்.

இந்த டிசைன் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இப்படத்தின் நாயகனாக சிவா, நாயகியாக ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அவர்களோடு சதீஷ், திஷா பாண்டே, சந்தான பாரதி, கலைராணி, மனோபாலா, R.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், OAK சுந்தர், அஜய் ரத்னம் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள்.

‘தமிழ்படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதனே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamilpadam 2point0 news updates

More Articles
Follows