பெண்களை மதிப்பதில் ரஜினி-அஜித்தை தட்டிக்க ஆளே இல்லை… நயன்தாரா

பெண்களை மதிப்பதில் ரஜினி-அஜித்தை தட்டிக்க ஆளே இல்லை… நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayantharaஹீரோவுக்காக மட்டும்தான் படம் பார்ப்பீங்களா? ஹீரோயினுக்காக பார்க்க மாட்டீங்களா? என்று கேட்காமல் தன் நடிப்பால் பார்க்க வைத்தவர் நயன்தாரா.

இவரது நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு வரிசைக் கட்டி நிற்கின்றன.

இந்நிலையில் இவரது சமீபத்திய டிவி பேட்டியில் அஜித்தை பற்றி கேட்டுள்ளனர்.

அவர் அதற்கு பதிலளிக்கும்போது ரஜினியை சேர்த்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது…

அஜித் போன்ற ஒருவரை நான் பார்த்த்தே இல்லை. சூட்டிங் செட்டில் அனைவரையும் அன்பாக விசாரிப்பார்.

அவரும் சரி ரஜினி சாரும் சரி. பெண்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்கள்.

நம் அருகே பெண்கள் வந்தால் இருவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்து பேசுவார்கள்.

அந்த விஷயத்தில் அவர்களை தட்டிக்க ஆளே இல்லை. அதனால் அவர்களுக்கு மிகப்பெரிய ஸ்டார் வேல்யூ உள்ளது’ என்று பேசினார்.

Rajini and Ajith are Topper in giving respect to ladies says Nayanthara

டிஆர்-தன்ஷிகா மோதல் குறித்து வெங்கட்பிரபு-கிருஷ்ணா விளக்கம்

டிஆர்-தன்ஷிகா மோதல் குறித்து வெங்கட்பிரபு-கிருஷ்ணா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tr dhanshikaதன் பெயரை குறிப்பிட்டு பேசவில்லை என்பதால் விழித்திரு’ பத்திரிகையாளர் சந்திப்பில் தன்ஷிகாவை தன் வார்த்தைகளால் கடுமையாக தாக்கினார் டி.ராஜேந்தர்.

அப்போது டிஆர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் அவரை அசிங்கப்படுத்தியதால் தன்ஷிகா அழத் தொடங்கினார் என்பதை பார்த்தோம்.

இந்த விவகாரம் திரையுலகில் பெரும் சர்ச்சையாக உருவாக்கியுள்ளது.

இதனால் சீனியர் நடிகரான டிஆருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அந்த சந்திப்பில் கலந்துக் கொண்ட வெங்கட்பிரபு, கிருஷ்ணா ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வெங்கட்பிரபு தெரிவித்திருப்பதாவது…

வயதில் பெரியவர்களுக்கு எப்போதும் மரியாதை தர வேண்டும் என்று தான் என்னை வளர்த்திருக்கிறார்கள். டி.ஆர் அவரது எண்ணங்களை ‘விழித்திரு’ விழாவில் பேசியிருந்தார்.

முதலில் நாங்கள் கிண்டல் என நினைத்த ஒன்று போகப் போக தீவிரமடைந்தது. எனக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.

தன்ஷிகா துறைக்குப் புதியவர். பொது மேடையில் எப்படி பேச வேண்டும் என்ற அனுபவமற்றவர். ஒழுங்காக வழிநடத்துவது எங்களைப் போன்ற துறையில் மூத்தவர்களின் பொறுப்பு என நினைக்கிறேன்.

வழிகாட்டுதலே கடவுளின் செயலும். யாரும் அவசரப்பட்டு உணர்ச்சிகளைக் கொட்டிவிட வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். காயப்படுத்துவதால் நமக்கு எதுவும் லாபமில்லை. இந்தக் கருத்தை நான் எப்போதும் போல மரியாதையுடன் வெளிப்படுத்துகிறேன்.

இவ்வாறு வெங்கட்பிரபு தெரிவித்திருக்கிறார்.

மேலும் கிருஷ்ணாவும் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது…

சுயமரியாதை இருப்பவனாக, ஒழுக்கமாக நடப்பவனாக, கடந்த சில வருடங்களாக ஒரு பெண் குழந்தையின் கல்விக்கு உதவுபவனாக நான் இருந்து வருகிறேன். மேடையில் எனது அமைதியை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

அனைவரும் சமம் என்பதை மதிப்பவன் நான். முதலில் ஒரு நகைச்சுவையாக ஆரம்பித்தது சட்டென தீவிர வசையாக மாறி அவமதிப்பாகிவிட்டது. எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம் குறித்து நாங்கள் யாரும் எதுவும் செய்திருக்க முடியாது.

என்னைப் பொறுத்தவரையில் டி.ஆர் போல ஒரு மூத்த நடிகர் பேசுவதை மறிப்பது சரியான மேடை நாகரீகம் ஆகாது. அந்த மேடையில் இருந்தவர்கள் அனைவரும் இதை ஒப்புக்கொள்வார்கள்.

ஆனால் அவர் மீண்டும் மீண்டும் தன்ஷிகாவை பற்றி சொன்ன அவமரியாதையான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாது. ஆண், பெண் என யாருக்கு நேர்ந்திருந்தாலும் அது அவமரியாதையே.

அந்த நேரத்தில் யாராவது அவருக்கு ஆட்சேபணை தெரிவித்திருந்தால், ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தேவையில்லாத குழப்பமான சூழலும், விவாதமும் வந்திருக்கும்.

துறையில் மூத்தவர்கள் இளையவர்களை மன்னித்து அவர்களுக்கு உதவ முன்வருவார்கள் என நம்புகிறேன். நாம்தான் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள முடியும்.

இவ்வாறு கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்

Venkat Prabhu and Krishna clarifies TR and Dhanshika issue at Vizhithiru Press Meet

vizhithiru-movie-press-meet

இன்று பிக்பாஸ் பைனலில் கலந்து கொள்ளும் ஓவியா; வின்னர் யார்?

இன்று பிக்பாஸ் பைனலில் கலந்து கொள்ளும் ஓவியா; வின்னர் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oviya bharani bigg boss showகடந்த 99 நாட்களாக நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 100வது நாளை எட்டியுள்ளது.

தற்போது இந்த போட்டியில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகிய நான்கு ஆண்கள் மட்டுமே உள்ளனர்.

இவர்களில் யார் வெற்றியாளர் என்பது இன்று (செப்டம்பர் 30) ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் தெரியவர உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேற்றப்பட்ட ஓவியா, பரணி, காயத்ரி ரகுராம், ஸ்ரீ, ஜூலி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட அனைவருமே இறுதிப் போட்டியின் போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இதில் ஓவியா இவரது முன்னாள் காதலர் ஆரவ்வை சந்திப்பார் என கூறப்படுகிறது.

மேலும், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்றையு நிகழ்ச்சியில் வெளியிட உள்ளனர்.

Oviya participating in Bigg Boss 100th day show Who will be the winner

kamal shankar indian 2

சிம்பு-அனிருத் கூட்டணியின் அடுத்த பாடல் விருந்து

சிம்பு-அனிருத் கூட்டணியின் அடுத்த பாடல் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anirudh sung song for Simbu in Santhanams Sakka Podu Podu Raja‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ஓடி ஓடி உழைக்கனும் ஆகிய படங்களை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் சக்கபோடு போடு ராஜா.

சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளர் ஆகிறார் என்பதை பார்தோம்.

இதில் ‘சர்வர் சுந்தரம்’ நாயகியான வைபவி ஷாந்தலியா ஹீரோயினாக நடிக்க, விவேக், ரோபோ சங்கர், சம்பத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இதில் அனிருத் பாடியுள்ள கலக்கு மச்சான் என்ற சிங்கிள் ட்ராக் பாடலை வருகிற அக்டோபர் 5ஆம் தேதி வெளியிட இருக்கிறார்களாம்.

Anirudh sung song for Simbu in Santhanams Sakka Podu Podu Raja

Sakka-Podu-Podu-Raja-Movie-Shooting-

ரூ. 180 கோடி புராஜெக்ட்டில் இணையும் கமல்-ஷங்கர்

ரூ. 180 கோடி புராஜெக்ட்டில் இணையும் கமல்-ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal shankar indian 2கமல்ஹாசன்-ஷங்கர்-ஏஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவான இந்தியன் திரைப்படம் கடந்த 1996ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி பரபரப்பாக பேசப்பட்டது.

கமல் ஏற்ற இரட்டை வேடங்களில் இந்தியன் தாத்தா படு பாப்புலரானார்.

இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் படத்தை ஷங்கர் இயக்கவிருக்கிறார்.

இது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இதன் பட்ஜெட் ரூ.180 கோடி என தெரிய வந்துள்ளது.

தமிழ் – தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

முதல் பாகத்தை ஏஎம். ரத்னம் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Shankar re unite for Indian 2 at budget of Rs 180 crores

kamal shankar

விக்ரம்-த்ரிஷா-கீர்த்தி இணையும் சாமி2 படத்தலைப்பு மாற்றம்

விக்ரம்-த்ரிஷா-கீர்த்தி இணையும் சாமி2 படத்தலைப்பு மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram keerthyஹரி-விக்ரம் கூட்டணியில் உருவான சாமி படம் மாபெரும் வெற்றிப் பெற்றதையடுத்து தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இதன் இரண்டாம் பாகத்தின் தலைப்பு சாமி 2 என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதன் தலைப்பை சாமி ஸ்கொயர் என மாற்றியுள்ளனர்.

இப்படத்தையும் ஹரி இயக்க, விக்ரம் ஜோடியாக த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.

பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் பிரபு, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

மிலன் கலை இயக்குநராகவும், கனல் கண்ணன் சண்டை பயிற்சிகளையும் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் இன்று சரஸ்வதி பூஜை முன்னிட்டு இதன் சூட்டிங்கை தொடங்கியுள்ளனர்.

இந்த பூஜை படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vikram Hari combo Saamy2 title has been changed to Saamy Square

saamy 2 pooja saamy square

More Articles
Follows