தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெள்ளித்திரையானாலும் சரி சின்னத்திரையானாலும் சரி தன் நடிப்பு முத்திரை பதித்து வருபவர் நடிகை ராதிகா.
அண்மைக்காலமாக சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு டிவி சீரியல்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்து வருகிறார்.
இவரது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘மார்க்கெட் ராஜா MBBS’ . இதில் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறியிருக்கிறார் ராதிகா.
பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ‘கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.





