தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் மனோபாலா.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோ பாலாவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 10 நாட்களாக அவரது இல்லத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவால் காலமானார்.
இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான மனோபாலா மறைவுக்கு பாரதிராஜா, ராதிகா மற்றும் பிற கோலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்”. என்று பாரதிராஜா பதிவிட்டுள்ளார்.
ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் மனோபாலா உடன் இருக்கும் பழைய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “நான் மிகவும் மனவேதனை அடைந்தேன், இன்று காலை தான் போன் செய்து அவர் எங்கு சென்று அவரைப் பார்க்க வேண்டும் என்று விசாரித்தேன். நம்பமுடியாத அதிர்ச்சி. நடிப்பு ரீதியாகவும் தனிப்பட்ட அளவிலும் அவருடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம், நாங்கள் இருவரும் கற்றுக்கொண்டோம், சிரித்தோம், சண்டையிட்டோம், ஒன்றாக சாப்பிட்டோம், பல விஷயங்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினோம், அவர் ஒரு திறமையான நபர், எல்லா சூழ்நிலைகளிலும் நன்றாகப் பழகினார். அவரை மிஸ் பண்ணுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் நேரில் வந்து மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
https://www.youtube.com/shorts/cfSNblfLEts
Radhika emotions about friendship with Manobala