தேசிய கீதம் பாடிய மன்சூர் அலிகான்; நொந்து போன ‘புறநகர்’ டீம்

தேசிய கீதம் பாடிய மன்சூர் அலிகான்; நொந்து போன ‘புறநகர்’ டீம்

Pura Nagar team upset while Mansoor Alikhan sung National anthemமின்னல் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் புறநகர்.

இந்த படத்தை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் கமல் கோவின்ராஜ்.

நாயகிகளாக சுகன்யா, அஸ்வின் சந்திரசேகர் நடிக்க இவர்களுடன் தேனி முருகன், கதிரவண்ணன் நடித்துள்ளனர். அனல் அண்ணாமலை வில்லனாக நடித்துள்ளார்.

இசையை இந்திரஜித் கவனிக்க, ஒளிப்பதிவை விஜய் திருமூலம் செய்துள்ளார்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த விழாவில் நிறைய சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.

இறுதியாக வி. சேகர், ஜாக்குவார் தங்கம் பேசினர். அதனையடுத்து மன்சூர் அலிகான் பேச அழைக்கப்பட்டார்.

அவர் 3 நிமிடம் மட்டுமே பேசினார். அப்போதும் கூட ஏன் ரஜினி பெயரை சொல்ல பயப்படுகிறீர்கள் என பேசிவிட்டு திடீரென ஜன கன மண என்று நம் தேசிய கீதத்தை பாட தொடங்கிவிட்டார்.

இதனால் அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர்.

இந்த பட தயாரிப்பாளர் மற்றும் நாயகன் பட விழாவில் பேசவில்லை.

மன்சூர் அலிகான் திடீரென இப்படி தேசிய கீதத்தை பாடி விழாவை நிறைவு செய்துவிட்டாரே இனி நாம் எப்படி பேசுவது? என நொந்தபடியே விழாவை முடித்தனர்.

Pura Nagar team upset while Mansoor Alikhan sung National anthem

அறிமுகம் இல்லாத நபரின் ஆட்டோவில் கதாநாயகியை ஏற்றிவிட்ட அபிசரவணன்; மாயநதி கலாட்டா!

அறிமுகம் இல்லாத நபரின் ஆட்டோவில் கதாநாயகியை ஏற்றிவிட்ட அபிசரவணன்; மாயநதி கலாட்டா!

Maya nadhi stillsடாக்டர் அசோக் தியாகராஜன் டைரக்ஷனில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாயநதி. பவதாரணி இசையமைத்துள்ள இந்தப்படம் வரும் ஜனவரி 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கு காதல் பற்றிய குழப்பங்கள் இருக்கும். அதைத்தாண்டி லட்சியத்தை நோக்கி பயணிக்க வேண்டிய கடமையும் இருக்கும். இந்த காலகட்டத்தை அவர்கள் எப்படி எதிர்கொண்டு கடந்து செல்லவேண்டும் என சொல்கிற ஒரு படமாக இது உருவாகி இருக்கிறது என்கிறார் படத்தின் நாயகன் அபி சரவணன். இந்த படம் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நம்மிடம் பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

“இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ள அசோக் தியாகராஜன் ஒரு மருத்துவர். ஆனாலும் சினிமா மீது உள்ள ஆர்வத்தாலும் இந்த படத்தின் மூலம் மாணவர்களுக்கு பயன்படும் ஒரு முக்கியமான கருத்தை எப்படியேனும் சொல்லியே ஆக வேண்டும் என்கிற உந்துதலாலும் தான் இந்த படத்தை எடுத்துள்ளார். இப்படி ஒரு படம் இவர் எடுக்க போகிறார் என இயக்குநர் சுப்பிரமணியம் சிவா மற்றும் என் மக்கள் தொடர்பாளர் KSK செல்வா மூலமாக தகவல் கிடைத்தது.

இயக்குனர் வைத்த ஆடிசனில் நான் ஓகே ஆனதுமே என்னிடம் இந்த படத்தில் ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். அதனால் உங்களுடைய எடையை கிட்டத்தட்ட 20 கிலோ குறைக்க வேண்டும் எனக் கூறினார் இயக்குனர். அவரிடம் இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டு அரிசி, பால் போன்ற உணவுகளை தொடமால் வெறும் சிக்கன் மட்டுமே சாப்பிட்டு இரண்டு மாதத்தில் 20 கிலோ எடையை குறைத்தேன்.

இந்த படத்தில் எனக்கு ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரம் என்பதால் மதுரைக்கு சென்று அங்கே என்னுடைய பால்ய கால நண்பரான ஆட்டோ மாரி என்பவரிடம் ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொண்டேன். ஆர்டிஓ அலுவலகத்தில் முறைப்படி ஆட்டோ ஓட்டுவதற்கு உரிமம் பெற்றேன். மதுரையிலேயே சுமார் 15 நாட்கள் ஆட்டோ ஓட்டிவிட்டு, இந்தக் கதையின் களமான மாயவரம் பகுதியிலும் சுமார் இருபது நாட்கள் ஆட்டோ ஓட்டினேன். அதிலேயே தினசரி ஆயிரம் ரூபாய் சம்பாதித்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி ஆட்டோ ஒட்டிய சமயங்களில் பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், அன்றாட பிரச்சினைகள் என்ன என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடிந்தது. மேலும் படப்பிடிப்பின் போதும் இது எனக்கு ரொம்பவே கைகொடுத்தது.

படத்தின் கதாநாயகி மட்டுமல்ல, படத்திற்காக பயன்படுத்தப்பட்ட கேமரா உள்ளிட்ட விலைமதிப்பில்லாத பொருள்களையும் என்னை நம்பி ஆட்டோவில் பயணிக்க அனுப்பி வைத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல சில காட்சிகளில் கேமராவை ஆட்டோவின் முன்பாக பொருத்தி விடுவார்கள். பின்னிருக்கையில் கதாநாயகி அமர்ந்திருக்கும் சில காட்சிகளை படமாக்கும்போது நான் இடைஞ்சலாக இருக்க கூடாது என்று ஆட்டோவின் கீழ்பகுதியில் அமர்ந்தபடியே ஆட்டோவை ஓட்டினேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆளே இல்லாமல் ஒரு ஆட்டோ வருவது போன்ற குழப்பங்கள் ஏற்பட்ட சுவாரசியமான நிகழ்வுகள் எல்லாம் நடந்தது. இதற்காக பயிற்சி பெற்ற ஆட்டோ ஓட்டுநரை அழைக்கலாம் என்று மற்றவர்கள் கூறியதை மறுத்துவிட்டு நானே அந்த வேலையை திறம்பட செய்து முடித்தேன்.

ஒரு காட்சியின் போது என்னுடன் ஆட்டோவில் பயணிக்கும் நாயகி வெண்பாவை, எனது ஆட்டோ ரிப்பேர் ஆனதால் எதிரில் வரும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்க வேண்டும். மிக நீண்ட தொலைவில் கேமராக்கள் வைத்து எடுக்கப்பட்ட காட்சி இது. என்னுடைய ஆட்டோவிலும் ஒரு கேமரா வைக்கப்பட்டிருந்தது. வெண்பாவை இறக்கிவிட்டு அடுத்ததாக எதிரில் ஒரு ஆட்டோ வந்ததும் அதில் அவரை ஏற்றி அனுப்பி வைத்தேன். காட்சி முடிந்தது என நினைத்தால் அடுத்த சில நொடிகளிலேயே உதவி இயக்குனர்கள் சிலர் கூச்சலிட்டபடி அந்த ஆட்டோவை தொடர்ந்து ஓடினார்கள். என்னவென்று விசாரித்தபோது தான் நாங்கள் படப்பிடிப்பிற்காக ஏற்பாடு செய்திருந்த இன்னொரு ஆட்டோ சரியான சமயத்திற்கு வர தவறியதும் அந்த நேரத்தில் எதேச்சையாக அந்தப் பக்கம் படப்பிடிப்பு நடக்கும் விபரம் தெரியாமல் இன்னொரு ஆட்டோ வந்ததும் அதில் தவறுதலாக கதாநாயகியை ஏற்றிவிட்டதும் பின்னர் தான் தெரிய வந்தது. இருந்தாலும் கதாநாயகி மீது இவ்வளவு கோபம் உனக்கு இருக்க கூடாது.. இப்படியா செய்வாய் என அன்று முழுவதும் என்னை படக்குழுவினர் அனைவரும் கிண்டலடித்ததும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

இந்த படத்தில் நாயகி வெண்பாவுக்கும் எனக்கும் ஒரு காதல் ஒட்டாமல் ஓடிக்கொண்டிருக்கும். படத்தில் அவரது கதாபாத்திரம் போலத்தான் நிஜத்திலும் அவர்.. நடிப்பு உண்டு, தன் வேலை உண்டு என இருப்பார். ஆனால் மிகத் திறமையான நடிகை.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீநிவாஸ் தேவாம்ஷம் பி.சி.ஸ்ரீராமின் சிஷ்யர்.. குறைந்த பட்ஜெட்டில் எப்படி தரமான படத்தை எடுக்க வேண்டும் என்கிற வித்தை தெரிந்தவர். ஒரு இடத்தில் கிரேன் வைத்து காட்சிகளை படமாக்க முடியாவிட்டால் கவலையே படமாட்டார். சரசரவென அருகில் இருக்கும் மரத்தில் ஏறி விடுவார். அதேபோல நானும் அப்புக்குட்டியும் இணைந்து குளத்தில் குளிக்கும் ஒரு காட்சியை படமாக்கியபோது குளத்தின் ஆழம் எல்லாம் என்னவென்று கவலைப்படாமல் மடமடவென ஒரு இறங்கி ஒரு தக்கையை வைத்து அதில் மிதந்தபடி காட்சிகளை படமாக்கினார்.

இந்த படத்தின் இயக்குனர் அசோக் தியாகராஜன் அடிப்படையில் ஒரு மருத்துவர். தினசரி 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துகொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஒரு வேலையை கொஞ்சம் நாள் ஒதுக்கி வைத்துவிட்டு இப்படி ஒரு முக்கியமான கருத்தை சொல்வதற்காகவே இந்த படத்தை எடுத்தாக வேண்டுமென வந்திருக்கிறார். மாயவரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றபோது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க ஒரு மிகப் பெரிய கூட்டம் கூடியிருக்கும். ஆனால் அது என்னை போன்ற நடிகர்களை பார்க்க வந்த கூட்டம் அல்ல. டாக்டர் அசோக் தியாகராஜனை தேடி வந்த கூட்டம். எப்போது இந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் நீங்கள் மருத்துவமனைக்கு வருகிறீர்கள் என அன்பாக விசாரிக்க வந்த கூட்டம். அந்த அளவிற்கு மிகப்பெரிய நற்பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார் அசோக் தியாகராஜன்.

காளி வெங்கட், ரோபோ சங்கர், சூரி இவர்களுடன் எல்லாம் நடித்துவிட்டேன். தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அது இந்தப் படத்தில் நிறைவேறி விட்டது. நானும் அப்புக்குட்டியும் சாப்பிடுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. ஆனால் காட்சியை படமாக்குவதற்கு முன்பே தோசையை சுட்டுப்போட சுட்டுப்போட அப்புக்குட்டி அனைத்தையும் காலி பண்ணிவிட்டார். பிறகு ஷாட் போகும்போது மாவு இல்லாததால் பக்கத்து வீட்டில் மாவு வாங்கி தோசை ஊற்றி காட்சிகளை படமாக்கினார்கள்.

இந்த படத்தை நாங்கள் இந்த பிப்ரவரி மாதத்திற்குள் ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. காரணம் இது பள்ளி மாணவர்களை, அவர்களுக்கு பள்ளிக் காலத்தில் ஏற்படும் ஒரு இனக்கவர்ச்சி, இனம்புரியாத காதலைப் பற்றி சொல்லும் படம். குறிப்பாக தேர்வு சமயங்களில் அவர்களுக்கு இதுபோன்ற குழப்பங்கள் நிறையவே இருக்கும். ஒருபக்கம் காதல் இன்னொரு பக்கம் படிப்பு என ஒரு ஊசலாட்டம் இருக்கும். இந்த படத்தில் அப்படி படிப்பை முழுமூச்சாக நினைக்கும் ஒரு நாயகி, அவளை ஊக்கப்படுத்தி வாழ்க்கையில் நல்ல நிலைக்கு கொண்டுவர துடிக்கும் ஒரு தகப்பன், அவள் வாழ்வில் எதிர்பாராமல் குறுக்கிடும் ஒரு ஆட்டோ ஓட்டுனர், அவனுடன் அவளுக்கு ஏற்படும் தவிர்க்க முடியாத ஒரு காதல், இதையெல்லாம் கடந்து அவளால் தனது படிப்பில் சாதிக்க முடிந்ததா, காதலை எப்படி எதிர்கொள்ள முடிந்தது, தாய் இல்லாமல் அவளை வளர்த்த தந்தை மகளின் இந்த காதலை எப்படி எதிர்கொள்கிறார் என பள்ளி மாணவர்கள் பலர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு மிக அழகான வழியில் ஒரு தீர்வை சொல்லி இருக்கிறோம்.

அதனால் இந்த படத்தை நிச்சயம் தேர்வு எழுதும் மாணவர்கள் பார்க்க வேண்டும். அவர்களை அவர்களது பெற்றோர்களே அழைத்து சென்று இந்த படத்தை காட்டவேண்டும். அப்படி மாணவர்களை பிரதானப்படுத்தி, மாணவர்களின் சீருடைக்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படுத்தாத விதமாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அசோக் தியாகராஜன். குறிப்பாக இந்த படத்தில் காதல் காட்சிகளே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு பள்ளி மாணவர்களை பற்றி மிக கண்ணியமாக உருவாகியிருக்கிறது இந்தப்படம். மற்ற படங்களுக்கு அவர்கள் வெளியிடும் தேதியை தீர்மானிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம். ஆனால் இந்த படம் வெளியாவதற்கு இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்தே, வரும் ஜனவரி 31 இந்த படத்தை ரிலீஸ் செய்கிறோம்” என்கிறார் அபிசரவணன்..

அபிசரவணனை பொருத்தவரை, அதிக அளவில் சமூக சேவை செய்து வருபவர்.. சமூக பிரச்சனைகளில் ஈடுபாடு காட்டி வருபவர். ஆனால் சமீபத்தில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அதில் பேசிய இயக்குனர் அமீர், சமூகப்பிரச்சினைகளில் ஹீரோக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காது என்று கூறியிருந்தார். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என அபிசரவணனிடம் கேட்டோம்.

“என்னை போன்ற இளம் நடிகர்கள் மீது கொண்ட அக்கறையினால் தான் இயக்குனர் அமீர் அவ்வாறு கூறி இருந்தார் என்பதை என்னால் உணர முடிகிறது.அமீர் அண்ணனின் அன்பு கட்டளையை ஏற்று இனி சமூக பிரச்சினைகளில் அதிகம் ஈடுபடாமல் இனி எனது கவனம் முழுக்க முழுக்க சினிமாவில் மட்டுமே இருக்கும் என்பதை கூறிக்கொள்கிறேன். அதே சமயம் எனது சமூக சேவை பணிகள் வழக்கம் போல தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும் என்பதையும் இந்த இடத்தில் நான் அழுத்தமாக பதிவு செய்கிறேன்” என அமீரின் ஆலோசனையை புறந்தள்ளாமல் பக்குவமாக பதில் கூறுகிறார் அபிசரவணன்.

“பிளான் பண்ணி பண்ணனும்” படத்திற்காக ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன் !

“பிளான் பண்ணி பண்ணனும்” படத்திற்காக ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன் !

Ramya Nambeesanரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தலைப்பு வெளியீட்டிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது. காமெடி நாயகர்கள் பலர் இணைந்திருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், திரையரங்கு குலுங்கும், காமெடி சரவெடிக்கு உறுதிகூறும்படி அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசை இளைஞர்களை உள்ளிழுக்கும் அதே நேரம் படத்திற்கும் பெரும் பலமாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் இப்படத்திற்காக ஒரு ஃபோக் பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் “பியார் பிரேமா காதல்” படத்தில் இணைந்து High on love பாடலை எழுதிய பாரதியாரின் கொள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி இப்பாடலையும் எழுதியுள்ளார். இப்பாடல் கண்ணைக்கவரும் வேகமான் நகரின் அழகிய இடங்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களை ஈர்க்கும் வகையில் காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் உடன் எம். எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்க துரை, மதுரை சுஜாதா என தமிழின் முக்கியமான கலைஞர்கள் இப்படத்தில் பங்குகொண்டுள்ளார்கள்.

ராஜேஷ் குமார் மற்றும் L. சிந்தன் இணைந்து Positive Print Studios சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். B.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷாம் RDX படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்கம் செய்துள்ளார். நடன அமைப்பை கல்யாண் அமைக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். AC கருணாமூர்த்தி கதை எழுத RK வசனம் எழுதியுள்ளார். 2020 மார்ச் மாதம் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

“ காவல்துறை உங்கள் நண்பன் “ பட விநியோக உரிமையை Creative Entertainers சார்பில் தனஞ்செயன் கைப்பற்றியுள்ளார் !

“ காவல்துறை உங்கள் நண்பன் “ பட விநியோக உரிமையை Creative Entertainers சார்பில் தனஞ்செயன் கைப்பற்றியுள்ளார் !

Kaval Thurai Ungal Nanbanதயாரிப்பிலும், விநியோகாத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்து பெருமையுடன் வலம் வரும் Creative Entertainers நிறுவனர் G தனஞ்செயன் அவர்கள் சுரேஷ் ரவி – ரவீனா நடிப்பில் உருவாகியிருக்கும் “காவல் துறை உங்கள் நண்பன்” படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார்.

தயாரிப்பாளர் G. தனஞ்செயன் கூறியதாவது…

நாங்கள் Creative Entertainers சார்பில் தரமான கதைகள் கொண்ட படங்களையே தயாரிப்பதையும், விநியோகிப்பதையும் முதல் நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறோம். ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறும் அதே நேரம் அவர்களுக்கு தரமான கதைகளை தரவேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறோம். இந்த நோக்கம் 2020 ஆம் வருடத்தில் பல நல்ல தரமான படங்களை விநியோகிக்கும் பயணத்தில் எங்களை கொண்டுவந்திருக்கிறது. இப்பயணத்தில் “காவல்துறை உங்கள் நண்பன்” படம் ஒரு அற்புதமான தேர்வாக எங்கள் முன்னால் வந்தது. இப்படத்தை பார்த்தபோது தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் படைப்பாக இப்படம் விளங்கும் என்று தோன்றியது. மிக வலுவான கதையும், திரைக்கதையும் கொண்ட இப்படம் இயக்குநர் RDM ன் இயக்கத்தில் எதார்த்தமான பாணியில் வெகு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை ஒரு நொடி அசைய விடாமல் கட்டிப்போடும் தன்மையில் அசத்தலாக படத்தை தந்துள்ளார் இயக்குநர் RDM. படத்தின் ஒவ்வொரு பாத்திரத்தையும் ஏற்றிருக்கும் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, RJ முன்னா, சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பிரமிப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள். இத்திரைப்படத்தை பிரமாண்டமாக வெளியிட, திரையரங்கு எண்ணிக்கை உட்பட விநியோக திட்டங்களை வகுத்து வருகிறோம். மிக விரைவில் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம் என்றார்.

ஆதித்யா, சூர்யா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்ய, வடிவேல் மற்றும் விமல் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். ராஜேஷ் கலை இயக்கம் செய்ய ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சி இயக்கம் செய்துள்ளார். வசனத்துடன் பாடல்களையும் எழுதியுள்ளார் ஞானகர்வேல்.

B. பாஸ்கரன், P. ராஜ பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.

அருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் !

அருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் !

Sinam Arun Vijayஉழைப்பிற்கான பலன் ஒரு நாள் கிடைத்தே தீரும். திறமை எப்போதும் கவனிக்கபடாமல் போகாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர் நடிகர் அருண் விஜய். சமீபமாக வெகு வித்தியாசமான படங்களில், மிகத்தேர்ந்த நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனங்களை அள்ளியிருக்கும் அருண் விஜய், 2020 ஆம் ஆண்டில் எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது

அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “மாஃபியா” படம் 2020 பிப்ரவரி 21 ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இன்னொரு பக்கம் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடிக்கும் “அக்னி சிறகுகள்” படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் காவல் அதிகாரியாக அவர் நடிக்கும் “சினம்” படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

இது குறித்து நடிகர் அருண் விஜய் கூறியதாவது…

இந்த 2020 ஆம் வருடம் நிறைய நேர்மறை அம்சங்களை வாழ்வில் கொண்டுவந்துள்ளது. ரசிகர்களின் அன்பும் ,பேராதரவும் மட்டுமல்லாமல் எனது வரப்போகும் படங்களின் மீது அவர்கள் காட்டும் பேரார்வம் என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துள்ளது. அவர்களின் அன்பு இன்னும் கடுமையாக உழைக்க எனக்கு பெரும் ஊக்கமாக அமைந்திருக்கிறது. “சினம்” திரைப்படம் திரில்லர் ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு பெரு விருந்தாக இருக்கும் அதே நேரம் உணர்வுப்பூர்வமாக கவரும்படி இருக்கும். கதை சொல்லும் விதத்திலும் கதாப்பாத்திரங்களை வடிவமைப்பதிலும் இயக்குநர் குமரவேலன் வித்தகராக இருக்கிறார். மேலும் படப்பிடிப்பில் அவரது தொலைநோக்கு தன்மை பெரும் சிக்கல்களையும் எளிதாக தீர்த்துவிடுகிறது. ரசிகர்களை மனதில் வைத்து மிக அருமையாக படத்தை இயக்கி வருகிறார். மிக விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம். டீஸர், இசை வெளியீடு, திரை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Movie Slides Pvt Ltd சார்பில் R.விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் “சினம்” படத்தை எழுதி இயக்குகிறார். அருண் விஜய் காவல் அதிகாரி பாத்திரத்தில் நாயகனாக நடிக்க பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். “சகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா”படப்புகழ் ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் கலை இயக்கம் செய்ய சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். மதன் கார்கி, பிரியன் ஏக்நாத் பாடல்கள் எழுத பவன் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் ” மன்சூரலிகான் “

வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் ” மன்சூரலிகான் “

mansoor ali khanதமிழ்சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சென்றாண்டு ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் அசத்தியவர் இந்தாண்டு நடிகர் சந்தானம், அதர்வா, விதார்த், விமல், ரெஜினா என நட்சத்திரங்களுடன் பத்திற்கும் மேலான படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். 2020- ஆம் ஆண்டில் பெரிய நட்சத்திரங்களோடு கூட்டணி வைத்து நடித்து வரும் அவர் ஒரு முக்கியமான பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் கதையின் நாயகனாக தோன்றி அசத்தவுள்ளார்.

நடிப்பிற்காக தன் உடலை வருத்தி வொர்க் அவுட் செய்வதை அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர்கள் தான் செய்வார்கள். அதை மன்சூர் அலிகானும் செய்து வருகிறார். கதையின் நாயகனாக தோன்றவிருக்கும் படத்திற்காக தன் உடலின் எடையை கணிசமாக குறைத்திருக்கிறார். 120 கிலோ எடை இருந்த அவர் தற்போது 96 கிலோவாக குறைத்துள்ளாராம். இந்த 2020-ஆம் ஆண்டு மன்சூர் அலிகானுக்கு திரையுலகில் மகத்தான ஆண்டாக துவங்கி இருக்கிறது என்கிறார்.

More Articles
Follows