சூப்பர் ஸ்டோரி இருக்கா.? சான்ஸ் ரெடி.; வாய்ப்பளிக்க காத்திருக்கிறார் தயாரிப்பாளர் சக்தி தேவராஜ்

சூப்பர் ஸ்டோரி இருக்கா.? சான்ஸ் ரெடி.; வாய்ப்பளிக்க காத்திருக்கிறார் தயாரிப்பாளர் சக்தி தேவராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கால் பதிக்கிறார் பிரபல தயாரிப்பாளர் சக்தி தேவராஜ். மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் இசைப்புயல் ஏ .ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஆரட்டு’ உட்பட பல படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சக்தி தேவராஜ், தமிழில் களமிறங்குகிறார்.

சென்னை சாலிகிராமத்தில், தனது ‘ஹிப்போ ப்ரைம் ‘ நிறுவனத்தின் கிளையை துவக்கி வைத்த தயாரிப்பாளர் சக்தி தேவராஜ், தனது நிறுவனம் தமிழில் டிஜிட்டல் மீடியா துறையிலும் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

”ஹிப்போ ப்ரைம் மீடியா’ என்ற பெயரில் தொடங்கி இருக்கும் இந்த நிறுவனத்தின் மூலமாக தரமான மற்றும் சுவாரஸ்யமான சினிமா நிகழ்ச்சிகளை மக்களிடையே கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

மலையாள தயாரிப்பாளரான சக்தி தேவராஜ், தமிழில் ஈடுபடுவது குறித்த கேள்விக்கு, தனது ஆரட்டு படம் மக்களிடையேயே பெருமளவு வரவேற்பு பெற்றது. கேரளாவில் மட்டுமல்லாமல் பிற மொழி ரசிகர்களும் படத்தை ரசித்தனர்.

சினிமா என்பது ஒரே மொழி தான். தமிழிலும் படத் தயாரிப்பில் ஈடுபடவுள்ளேன். புதியவர்களாக இருந்தாலும், திறமையானவர்கள் நல்ல கதைகளுடன் அணுகினால், தயாரிப்பதற்கு நான் தயார் என்கிறார்.

எங்களது கதை இலாகா குழு தேர்வு செய்கிற கதைகளைத் தமிழில் தயாரிப்பேன். பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றில்லாமல் புதியவர்களுக்கு வாய்ப்பு தர நினைத்திருக்கிறேன்” என்றார்.

தற்போது தமிழ் சினிமா துறை சிறப்பாக இயக்கி வருகிறது. திறமையானவர்கள் வெளியே அறியப்பட்டு வருகிறார்கள்.

நாங்கள் தயாரிக்கும் படங்களிலும் திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். தமிழ் திரையுலகில் நல்ல நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்கிறார்.

Producer Sakthi Devaraj launches hippo prime video in chennai

கலையுலக வாரிசு ஆதேஷ் பாலா கதையின் நாயகன் ஆனார்

கலையுலக வாரிசு ஆதேஷ் பாலா கதையின் நாயகன் ஆனார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையைச் சேர்ந்தவர் நடிகர் ஆதேஷ்பாலா. இவர் மார்ச் 2ல் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

இவரின் பெற்றோர்களும் கலையுலக நட்சத்திரங்களே.

நடிகர் சிவராமன் – சுப்புலெட்சுமி நட்சத்திர தம்பதிகளின் மகனாவார். இவரது தந்தையார் பிரபல காமெடி நடிகர் சிவராமன் ஆவார். தாயார் சுப்புலெட்சுமி விசு அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த சகலகலா சம்பந்தி, வேடிக்கை என் வாடிக்கை, பெண்மணி அவள் கண்மணி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் இயக்கத்தில் தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார்.

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் B.A., செக்ரட்டரிஷிப் படித்தவர்.

விக்ரம் நடித்த சாமி படம் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்தார்.

முண்டாசுப்பட்டி, கோவில், மண்ணின் மைந்தன், மலைக் கோட்டை, முண்டாசுப் பட்டி, இங்கிலீஷ் காரன், விந்தை, குருவி, வஜ்ரம், இந்திரலோகத்தில் நா. அழகப்பன், ஜன்னலோரம், பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ படத்திலும் சமீபத்தில் திரைக்கு வந்த ‘சாயம்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

பொண்டாட்டி மற்றும் நிக்குமா நிக்காதா போன்ற குறும்படங்களில் நாயகனாக நடித்திருந்தார். Take 1 shot 1 என்ற குறும்படத்தில் ஒரே ஷாட்டில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது சந்தோஷ் நவீன் இயக்கியுள்ள ‘இராஜமாபுரம்’ என்ற படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார்.

ஷாம் ஒளிப்பதிவு செய்ய ரகு சரவணகுமார் இசையமைக்கிறார். Article 21 நிறுவனம் சார்பாக சந்தோஷ்குமார் தயாரித்துள்ளார்.

இதன் பர்ஷ்ட் லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற DB MAMA ‘N’ PAPA FIESTA (SEASON 4) விழாவில் ராதிகா சரத்குமார், இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டார் ஆதேஷ் பாலா.

Aadhesh Bala turns hero in Rajamapuram

25 ஹீரோயின்களை கல்யாணம் செஞ்சிருக்கேன்.; மகன் சிபி முன்னிலையில் சத்யராஜ் ஓபன் டாக்

25 ஹீரோயின்களை கல்யாணம் செஞ்சிருக்கேன்.; மகன் சிபி முன்னிலையில் சத்யராஜ் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம்.

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று ராதே ஷ்யாம், UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

*பாடலாசிரியர் மதன் கார்கி பேசியதாவது…*

மூணு வருடங்களுக்கு முன்பு இயக்குநர் இந்த கதையை சொன்னார் முதல் பாதி கைரேகை பற்றி சொன்ன போது, எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் இரண்டாம் பாதி கேட்கையில் இந்தக்கதை மனதிற்குள் புகுந்துகொண்டது.

எப்போதும் காதலுக்கும் காலத்திற்கும் இடையில் ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது அதை தான் இயக்குநர் பிரமாண்டமாக திரையில் வரைந்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் பிரபாஸ் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தில் ஒரு காட்சியில் பூஜா மிக மிக சூப்பராக நடித்திருக்கிறார்.

அந்த காட்சியை எப்படி எழுதினார்கள் என வியப்பாக இருந்தது. ஜஸ்டின் மிக அழகான மெலடி பாடல்களை தந்துள்ளார். பிரபாஸ் ரொம்ப நாள் கழித்து ஆக்சனில் இருந்து ஒதுங்கி, நல்ல ரொமான்ஸ் படம் செய்துள்ளார். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

*ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியதாவது…*

படிக்கும் போது மணிரத்னம் சாரும் பிசி ஸ்ரீராம் சாரும் இல்லையெனில் நாம் கேமரா சாதனங்களுக்கு வெளிநாடுதான் போக வேண்டும் என பேசிக்கொள்வோம். அப்படி ஒரு விசனரியாக ராதா கிருஷ்ண குமார் இப்படத்தை மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார்.

ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என சொல்லிவிட்டார். நிறைய முன்னேற்பாடுகள் செய்து தான் எடுத்திருக்கிறோம். விஷுவல் பார்த்துவிட்டு எல்லோரும் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள்.

ஜெர்மனியில் பகலில் எடுக்க வேண்டிய காட்சியை எனக்காக நான் சொன்னேன் என, இரவில் எடுத்துள்ளோம். எனக்கு நிறைய சுதந்திரம் தந்தார்கள். இயக்குநரிடம் நிறைய கதைகள் இருக்கிறது.

பூஜா 4 வருடத்தில் நிறைய வளர்ந்து விட்டார். இந்த கதாப்பாத்திரத்தை மிக ஆழமாக புரிந்து செய்துள்ளார். ஜஸ்டின் லவ் ஸ்டோரிக்கு ஏற்ற மியூசிக் தந்துள்ளார். எல்லோரும் பாரட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

*தயாரிப்பாளர்/நடிகர் உதயநிதி பேசியதாவது…*

ராதே ஷியாம் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் பண்ண எப் ஐ ஆர் படத்தின் சக்சஸ் மீட்டிற்கே என்னால் வரமுடியவில்லை, என் படம் இன்று தான் ஆரம்பித்துள்ளது கட் அடித்துவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன்.

இந்த படம் 2 மாதம் முன்னாடியே பார்த்தேன் அப்போது 3 1/4 மணி நேரம் ஓடியது, படம் ஒவ்வொரு காட்சியும் டிரெய்லர் மாதிரியே பிரமாதமாக இருந்தது.

பிரபாஸ் உடைய ஃபேன் நான், பாகுபலிக்கு முன்னாடியே உங்களை பிடிக்கும். பூஜா இங்கு ‘அரபிக்குத்து…’ குத்தினார், இந்தப் படத்திலும் கலக்கியிருக்கிறார். சத்யராஜ் சார் ஒரு வித்தியாசமான ரோல் செய்துள்ளார். கடைசி காட்சியில் ஒரு அட்டகாசமான ஃபைட் இருக்கிறது. இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் பிரமாண்டமாக வெளியிடுகிறோம். பார்த்து ரசியுங்கள் நன்றி

*இசையமைப்பாளர் ஜஸ்டின் பேசியதாவது…*

இந்தப்படம் எனக்கு மிகவும் முக்கியமான படம், ஒரு இசையமைப்பாளராக நிறைய கனவு இருந்தது அதையெல்லாம் இப்படத்தில் செய்ய முடிந்தது. ஆர்கெஸ்ட்ரா புத்தபெஸ்டில் செய்துள்ளோம். நாம் பாடல் செய்த பிறகு விஷுவல் எப்படி இருக்கும் என்று பார்க்க தோன்றும் ஆனால் இதில் மனோஜ் சார் கலக்கியிருந்தார். பூஜா, பிரபாஸ் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. சத்யராஜ் பாகுபலியிருந்து வித்தியாசமான ரோல் செய்துள்ளார். படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி

*நடிகர் சிபி சத்யராஜ் பேசியதாவது…*

எனக்கு கைரேகை பார்க்க தெரியாது ஆனால் போஸ்டர் பார்த்தாலே பிரமாண்ட ஹிட்டாகும் என தெரிகிறது. பிரபாஸ் சார் நான் உங்களின் தீவிர ஃபேன், உங்களை பற்றி அப்பா நிறைய சொல்லியிருக்கிறார்.

இப்போது அதிகம் புழங்கும் பான் இந்தியா என்ற அடைமொழி பாகுபலியில் தான் ஆரம்பித்தது. பாகுபலிக்கு பிறகு நீங்கள் செய்யும் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்கிறது. படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன் நன்றி.

இயக்குநர் ராதா கிருஷ்ண குமார்
பிரபாஸ் உண்மையில் வெரி க்யூட் பாய், அவர் ரொமான்ஸான ஆள் அவரிடம் பழகியபோது இப்படத்திற்கு அவர் கச்சிதமாக பொருந்துவார் என தோன்றியது. சத்யராஜ் சாரிடம் இந்த கதை சொன்ன போது என்னைப்பற்றி உங்களுக்கு தெரியுமா எனக்கேட்டார்,

அவரது நம்பிக்கைகள் பற்றி தெரிந்து கொண்டேன் ஆனால் எனக்காக ஒத்துக்கொண்டு நடித்துள்ளார். இந்தப்படம் தயாரிப்பாளர்கள் இல்லாமல் இவ்வளவு பிரமாண்டமாக நடந்திருக்காது அவர்களுக்கு நன்றி. படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நன்றி. உங்கள் அனைவரையும் இந்தப்படம் கவரும் நன்றி.

*நடிகர் சத்யராஜ் பேசியதாவது…*

பிரபாஸை நாங்கள் டார்லிங் என சொல்வோம், பூஜா டார்லிங்கின் டார்லிங், கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள்.

பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன், ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன் அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும்.

நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன், அதை என்ன சொல்வது. நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும்.

இந்தப்படம் மிக அழுத்தமான காதல் கதை, பிரபாஸ் பறந்து சண்டை போடுவார் என்றால், இதில் கப்பலே பறக்கிறது. இங்கு ஜேம்ஸ் கேமரூன் தான் வந்திருக்க வேண்டும். அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது.

பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு முக்கியமான பொறுப்பு வந்துள்ளது. பான் இந்தியா என்று எல்லா ஸ்டேட்டிலிருந்து ஒரு நடிகரை போட்டு எடுக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் உண்மையில் பான் இண்டர்னேஷனல் படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

*நடிகை பூஜா ஹெக்டே பேசியதாவது…*

நாங்கள் கடந்த 5 வருடங்களாக உழைத்த உழைப்பு உங்களுக்காக உருவாக்கிய காதல் கதை உங்களிடம் வந்துள்ளது.

இந்த கடின காலத்தை தாண்டி, இந்த படத்தை எடுத்து வந்துள்ளோம், பிரமோத் மிக பிரமாண்டமாக படத்தை உருவாக்கியிருக்கிறார், ராதே பாத்திரம் எனக்கு மிக சிறப்பானதொரு பாத்திரம். சத்யராஜ் சாருடன் காட்சி இல்லாதது வருத்தம், பிரபாஸ் மிகச்சிறப்பான ஒத்துழைப்பு தந்தார், மனோஜ் உடன் பீஸ்ட் படமும் செய்கிறேன். இந்தப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

*நடிகர் பிரபாஸ் பேசியதாவது…*

சத்யராஜ் என் செல்ல கட்டப்பா, அவருடன் மிர்ச்சி படம் முதல் முறையாக பண்ணினேன் அது சூப்பர் டூப்பர் ஹிட், அதன் பிறகு பாகுபலி, இப்பொது இந்த படத்தில் ஒரு அருமையான பாத்திரம் செய்துள்ளார். இது அருமையான காதல் கதை. ஆக்சனும் இருக்கிறது.

காதல் கதைக்கு மியூசிக் முக்கியம் ஜஸ்டின் அற்புதமான இசையை தந்துள்ளார். இந்த படத்தின் நாயகன் மனோஜ் சார் தான் என்னை அத்தனை அழகாக காட்டியுள்ளார். எல்லோரும் விஷுவலை பாராட்டுகிறார்கள் அவர்களுக்கு நன்றி. எல்லாம் மனோஜ் சாருக்கு தான்.

இந்தப்படத்தில் பூஜா மிக அழகாக இருக்கிறார் கெமிஸ்ட் ரி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பிரமோத் என்னை வச்சு லவ் ஸ்டோரி எடுத்திருக்கிறார் நிறைய தைரியம் இருக்கனும், இயக்குநர் பாகுபலிக்கு முன்பே இந்த கதையை சொன்னார். எப்படி என்னை காதல் கதையில் யோசித்தார் என தெரியவில்லை. 5 வருடம் நீண்ட பயணம் ராதே ஷ்யாம் மிக நல்ல படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

1970 களில் ஐரோப்பாவில் நடக்கும் கதை. கைரேகை நிபுணராக வித்தியாசமான பாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார், அகில இந்திய பிரபல நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருக்கிறார், அதிநவீன விஷுவல் எஃபெக்ட்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ள அழகிய காட்சிகள்.

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேக்கு இடையேயான பற்ற வைக்கும் கெமிஸ்ட்ரி என பல்வேறு காரணங்களுக்காக இந்த காதல் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மார்ச் 11, 2022 அன்று திரைக்கு வரவுள்ள பன்மொழிப் படமான ராதே ஷ்யாமை, ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.

Sathyaraj open talk at Radhe Shyam Pre Release Event

ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் இணையும் ராஜேஷ் – ஜெயம் ரவி.; நாயகி கீர்த்தி.?

ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் இணையும் ராஜேஷ் – ஜெயம் ரவி.; நாயகி கீர்த்தி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி.

இந்த படத்தை தொடர்ந்து கல்யாண் இயக்கத்தில் உருவாகும் ‘அகிலன்’ படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

இதில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவி – ராஜேஷ் இணையவுள்ள அடுத்த படத்தினை ஸ்கிரீன் சீன் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.

இதில் நாயகியாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு.

இப்பட முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கூடுதல் தகவல்..:

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜேஷ்.

VSOP & ஆல் இன் ஆல் அழகுராஜா, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘வணக்கம் டா மாப்ள’ உள்ளிட்ட தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார்.

தற்போது ஒரு பெரிய வெற்றியை கொடுக்க காத்திருக்கிறார் ராஜேஷ்.

Jayam Ravi and Keerthy Suresh joins for a film

‘தீயவர் குலைகள் நடுங்க’ இணையும் அர்ஜூன் – ஐஷ்வர்யா கூட்டணி

‘தீயவர் குலைகள் நடுங்க’ இணையும் அர்ஜூன் – ஐஷ்வர்யா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆக்சன் கிங் அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஆக்‌ஷன், புதிய க்ரைம் திரில்லர் படத்திற்கு தீயவர் குலைகள் நடுங்க என தலைப்பிடப்பட்டுள்ளது.

GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலெட்சுமணன் இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை, கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது.

அதனை விசாரிக்கும் பின்ணனியில் அழுத்தமான க்ரைம் -த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரம் மைய கதாப்பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது.

எந்த வித கதாப்பாத்திரம் தந்தாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் அசத்தும், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்சன் கிங் அர்ஜூன் இன்வெஸ்டிகேடிவ் ஆபிஸராக நடிக்கிறார்.

ரசிகர்களுக்கு புது அனுபவம் தரும் திரில்லர் அனுபவமாக “தீயவர் குலைகள் நடுங்க” திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்ப்டத்தின் தொழில் நுட்ப குழுவில் பரத் ஆசீவகன் (இசை), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டர்), சரவணன் அபிமன்யு (ஒளிப்பதிவாளர்), அருண் சங்கர் துரை (கலை இயக்குனர்), கணேஷ் (ஸ்டண்ட் மாஸ்டர்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு )பணிகளை செய்துள்ளனர்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ராம்குமார் சிவாஜிகணேசன், GK.ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் இன்னும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, GS ARTS சார்பில் தயாரிப்பாளர் G.அருள் குமார் தயாரிக்கிறார்.

Arjun and Aishwarya Rajesh joins for Theeyavar Kulaigal Nadunga

வேற லெவலில் டைட்டில் வைத்து தெறிக்க விடும் மோசன் போஸ்டரை வெளியிட்ட ‘சரவணா ஸ்டோர்ஸ்’ ஓனர்

வேற லெவலில் டைட்டில் வைத்து தெறிக்க விடும் மோசன் போஸ்டரை வெளியிட்ட ‘சரவணா ஸ்டோர்ஸ்’ ஓனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்று ‘சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட்’.. இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை என்கிற அளவுக்கு இந்த கடை பிரபலம்.

இந்த கடை ஓனர் சரவணன் இந்த கடை விளம்பரங்களில் நடித்து வந்தார். சிலர் இவரை கிண்டல் செய்தனர். ஆனாலும் தமன்னா ஹன்சிகா ஆகிய பிரபல நடிகைகளுடன் விளம்பரங்களில் ஆடி பாடி நடித்தார்.

தற்போது ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சரவணன்.

இவருக்கு ஜோடியாக, பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். மறைந்த நடிகர் விவேக் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகரன் இந்தப் படத்துக்கு வசனம் எழுத, இந்தப் படத்துக்கு வைரமுத்து, கபிலன், பா.விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் இந்தப் படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளனர்.

இந்த நிலையின் இன்று படத்திற்கு தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் மற்றும் ஆக்‌ஷன் காட்சியாக மோஷன் போஸ்டர் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Legend Saravanan’s The Legend Movie first look and motion poster released

More Articles
Follows