தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜே.சதீஷ் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள “அண்டாவ காணோம்” படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதில் முக்கிய கேரக்டரில் ஸ்ரேயா ரெட்டி நடிக்க, அந்த அண்டா பாத்திரத்திற்கு விஜய்சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் கூறியதாவது…
‘அண்டாவ காணோம், நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம்.
குழந்தைகள் விடுமுறை காலத்தில் பார்க்க விரும்பும் படங்களை தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை. சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது.
இந்த சமூகத்துக்கு நான் செய்யும் சேவை நல்ல தரமான படங்கள் தருவதுதான். அதன் படியே தான் பணியாற்றி வருகிறேன்.
இருட்டு அறையில், இருட்டு மனங்களுக்காக, இருட்டு குணங்களால் தயாரிக்க படும் படங்கள், “அண்டாவ காணோம்” போன்ற தரமான படங்கள் தொடர்ந்து வெளிவரும் பட்சத்தில் இருட்டில் கரைந்து விடும்” என்று தனக்கே உரிய பாணியில் கூறுகிறார் ஜே எஸ் கே.
மேலும் தன் ட்விட்டரில் இப்படத்தை காண டிஸ்யூ பேப்பர் தேவையில்லை. மறைந்து ஒளிந்து பயப்பட்டு பட பார்க்க வேண்டாம். தைரியமாக முகத்தை காட்டிக் கொண்டு படத்தை பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்