விமர்சகர்களுக்கு பிடிச்சா ரசிகர்களுக்கு பிடிக்காது.. ஆனா ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ அப்படியில்ல – தனஞ்செயன்

விமர்சகர்களுக்கு பிடிச்சா ரசிகர்களுக்கு பிடிக்காது.. ஆனா ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ அப்படியில்ல – தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூது கவ்வும் திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் தான் “பன்றிக்கு நன்றி சொல்லி” திரைப்படம்.

Head Media works தயாரித்துள்ள, இப்படத்தை Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா, ABI & ABI Pictures சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து வழங்குகிறார்கள். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரை விருந்தினர்கள் பங்குகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

*இந்நிகழ்வில் இயக்குநர் பாலா அரன் பேசியதாவது…*

இப்படம் டார்க் ஜானரில் ஒரு புது முயற்சியாக செய்துள்ளோம். மூடர்கூடம், சூது கவ்வும் படங்கள் தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இப்படம் எடுக்கப்பட்ட முழு அனுபவமும் மிக சவாலானதாக இருந்தது. இந்தப்படம் இந்த மேடைக்கு வர கேபிள் சங்கர், நலன் குமாரசாமி, ஞானவேல் ராஜா ஆகியோர் தான் காரணம். அந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்.

*தயாரிப்பாளர் ஒளிப்பதுவாளர் விக்னேஷ் செல்வராஜ் ….*

நானும், பாலாவும் கல்லூரி தோழர்கள் படிக்கும் போது நானும் அவனும் இணைந்து இந்த படத்தை, பெரிய பட்ஜெட்டில் பெரிய நடிகர்கள் வைத்து செய்ய வேண்டும் என்று நினைத்தோம். பின் பல போராட்டங்களுக்கு பிறகு நாமே செய்யலாம் என இறங்கி செய்தோம். இந்தப்படம் நாங்கள் இந்த மேடைக்கு வரும் என நினைக்கவில்லை, ஆனால் இப்போது இது பெரிய அளவில் ரிலீஸாவது மகிழ்ச்சி. இப்படத்தை இந்த அளவு பெரிய அளவில் வெளியிட காரணமாக இருந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

*படத்தொகுப்பாளர் ராம் சதீஷ் பேசியதாவது…*

இப்படத்தை எடிட் செய்வது மிக சவாலானதாக இருந்தது. ஆனால் எனக்கு நிறைய சுதந்திரம் தந்தார்கள். எடிட் செய்யும் போதே, இந்தப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் பாலா முழு சுதந்திரம் தந்து எடிட் செய்ய சொன்னார். இப்படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் நன்றி.

*இணை தயாரிப்பாளர் விஜயன் பேசியதாவது…*

இந்தப்படம் செய்யலாம் என நண்பர்கள் சொன்னார்கள். நண்பர்களாக செய்ததால் இந்தப்படம் கஷ்டமாக தெரியவில்லை. இந்த அனுபவம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது. இப்படம் இந்த மேடைக்கு வர உதவிய அனைவருக்கும் நன்றி.

*நடிகர் நிஷாந்த் பேசியதாவது…*

இந்தப்படத்தில் வர விஜயன் தான் காரணம், அவனால் தான் இந்தப்படம் எனக்கு கிடைத்தது. இயக்குநர் பாலா ஒரு இயக்குநராக இல்லாமல் அனைத்து துறைகளிலும் வேலை செய்திருக்கிறார். இங்கு இருக்கும் அனைவருமே எல்லார் வேலையையும் கலந்து, இணைந்தே செய்தோம். இப்படத்திற்காக இவ்வளவு பெரிய மேடையை பார்ப்போம் என யாரும் நினைக்கவில்லை. இதற்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

*நக்கலைட்ஸ் செல்லா பேசியதாவது…*

பாலாவுக்கும் விக்னேஷ்க்கும் கடின உழைப்பு தான் அடையாளம், அவர்கள் மிக தீவிரமான உழைப்பில் மிக அழகாக திட்டமிட்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

*இயக்குநர் கல்யாண் பேசியதாவது..*

இந்தப்படம் டிரெய்லர் நன்றாக இருந்தது, இந்தப்படம் சேர வேண்டிய இடத்தை சேர்ந்ததால் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும், நலன் குமாரசாமி ஒரு படத்தை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

*இயக்குநர் ARK சரவணன் பேசியதாவது…*

இந்தப்படத்தை முன்னதாகவே பார்த்துவிட்டேன். படம் அட்டகாசமாக இருக்கும், இப்படம் எடுக்க நலன் தான் காரணம் என இயக்குநர் சொன்னார். என் படம் எடுக்கவும் அவர் தான் முன்னுதாரணமாக இருந்தார். இந்தப்படம் புதிய முகங்களின், கடுமையான உழைப்பில் உருவாகியுள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் அனைவரும் பாருங்கள் நன்றி.

*இயக்குநர் கேபிள் சங்கர் பேசியதாவது*

தம்பி நிஷாந்த் மூலம் தான் இந்தப்படத்தை பார்த்தேன்.படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை என்று சொன்னார்கள். பின் நான் இப்படத்தை CV குமாரிடம் அறிமுகப்படுத்தினேன். இப்போது இப்படம் பெரிய அளவில் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி. ஒரு நல்ல படம் எடுத்தால் எப்படியாவது அதற்குரிய இடத்தை அப்படம் பெற்றுவிடும், என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். இப்படம் சூது கவ்வும் படத்தை போல் அனைவரையும் கவரும் நன்றி.

*இயக்குநர் நலன் குமாரசாமி பேசியதாவது…*

2 வருஷம் முன்னாடி டிரெய்லர் மட்டும் காட்டினார்கள் அப்போது பெரிதாக அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை, இந்தப்படத்தை ரிலீஸ் செய்யும் ஞானவேல் சாருக்கு நன்றி. நாங்கள் குறும்படத்தில் செய்ததை முழு நீளப்ப்படமாக செய்யும் டெக்னாலஜி இப்போது வந்திருக்கிறது. ஆனால் இம்மாதிரி புதிய முயற்சியில் வெளியாகும் படங்கள் சரியான அறிமுகத்தை பெற வேண்டும் அம்மாதிரியான அறிமுகத்தை இப்படம் பெற்றது மகிழ்ச்சி.

*தயாரிப்பாளர் CVகுமார் பேசியதாவது…*

அட்டகத்தி எனக்கு மிகப்பெரிய பயணமாக இருந்தது. அதுமாதிரி தான் இந்தப்படமும், இக்குழுவினருக்கு அமைந்துள்ளது. கேபிள் சங்கர் மூலம் தான் இந்தப்படம் பார்த்தேன். முதலில் நான் ரிலீஸ் செய்ய முயற்சித்தேன். அப்போதைய காலகட்டத்தில் அது முடியவில்லை பின்னர் ஞானவேல் ராஜா சாரிடம் படம் பார்க்க சொன்னேன். அவர் பார்த்து அவருக்கு பிடித்து, ரிலீஸ் செய்வது மகிழ்ச்சி. இப்படத்தின் பட்ஜெட் கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது இந்த அளவு சின்ன பட்ஜெட்டில் எப்படி எடுத்தார்கள் என ஆச்சர்யமாக இருந்தது. இம்மாதிரி படங்கள் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

*தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா, பேசியதாவது…*

8 வருஷம் முன்னால் நடந்த அட்டகத்தி வெளியீடு போலவே, இந்த வெளியீடு அமைந்திருக்கிறது. அனைத்து இயக்குநர்களும் இங்கு வந்து இந்தப்படத்தை வாழ்த்தியுள்ளார்கள். இந்தப்படத்தில் அட்டாகசமாக உழைத்துள்ள அனைவரும், அட்டகத்தி படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது வளர்ந்திருப்பதை போல் மிகப்பெரிய அளவில் வளர்வார்கள்.

இந்தப்படக்குழுவினர் இணைந்து இன்னொரு படம் செய்ய வேண்டும், அதை இந்தப்படம் போல் மூன்று மடங்கு பட்ஜெட்டில் நான் தயாரிக்கிறேன் என்பதை இந்த மேடையில் நான் சொல்லிக்கொள்கிறேன்.

இந்தப்படம் முதலில் பார்க்கபோகும்போது வேறொருவர் வாங்கிவிட்டார்கள் என்றார்கள் பின்னர் எங்கெங்கோ சுற்றி என்னிடம் வந்தது, இந்தப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. இந்த வகைப்படங்கள் எடுக்கும் அனைவருக்குமே உதாரணமாக இருப்பவர் நலன் தான். அவருடன் ஆர்யா நாயகனாக நடிக்க, அடுத்த மாதம் ஒரு படத்தை துவக்கவுள்ளோம். அது ரசிகர்களுக்கு பிரமாண்டமான புதிய அனுபவமாக இருக்கும் நன்றி.

*ABI & ABI Pictures சார்பில் நந்தினி அபினேஷ் பேசியதாவது..*

இந்தப்படத்தை எங்கள் நிறுவனத்தின் சார்பில் வெளிடுவது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

*தயாரிப்பாளர் அம்மா சிவா பேசியதாவது…*

படத்தில் இருந்து நல்ல காட்சியை போட்டு காட்டினார்கள் அதுவே மிக சுவாரஸ்யமாக இருந்தது. இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள், இந்த திரைப்படகுழு பெரிய அளவில் ஜெயிப்பார்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய அளவில் வெற்றிப்படங்களை தந்து வரும் ஞானவேல் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

*தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..*

ஒரு மாதத்திற்கு முன் இப்படத்தை பார்த்து நிறைய ஆச்சர்யப்பட்டேன். இது ஒரு அசத்தலான படம், ஓடிடிக்காக பார்த்த அனைவரும் இப்படத்தை பாராட்டினார்கள். 2 மணி நேரம் எப்படி போகிறதென்பதே தெரியாமல் விறுவிறுப்பாக இருக்கும்.

சில படங்கள் விமர்சகர்களுக்கு பிடிச்சா ரசிகர்களுக்கு பிடிக்காது.. ரசிகர்களுக்கு பிடிச்சா விமர்சகர்களுக்கு பிடிக்காது. ஆனா இந்தப்படம் விமர்சர்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். இனிவரும் தலைமுறைக்கு பேர் சொல்லும் படமாக “பன்றிக்கு நன்றி சொல்லி” படம் இருக்கும்.

இம்மாதிரி படங்கள் மக்கள் மத்தியில் சென்று சேர வேண்டும். ஊடகங்கள் இப்படத்தை பெரிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி.

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள்
எழுத்து இயக்கம் – பாலா அரன்
ஒளிப்பதிவு – விக்னேஷ் செல்வராஜ்
இசை – சுரேன் விகாஷ்
படத்தொகுப்பு – ராம் சதீஷ்
கலை – சந்தோஷ்
ஒலிக்கலவை – சிவகுமார்
நடனம் – பாபு எரிக்
SFX – சேது
மக்கள் தொடர்பு – நிகில்

Producer Dhananjayan speech at Pandrikku Nandri Solli audio launch

இந்த வயசுல இது தேவையா.? மாணவர்களுக்கு நடிகர் சௌந்தரராஜா அட்வைஸ்

இந்த வயசுல இது தேவையா.? மாணவர்களுக்கு நடிகர் சௌந்தரராஜா அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக இருதய தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் மற்றும் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் இதர கல்வி நிறுவனங்கள் இணைந்து மாரத்தான் போட்டியை நடத்தினார்கள்.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும், சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா கலந்துக் கொண்டு மாரத்தான் போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இப்போட்டியில், அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 700 பேர் கலந்துக் கொண்டனர். இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை நடிகர் சௌந்தரராஜா வழங்கினார்.

அதன்பின் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசிய சௌந்தரராஜா, மறைந்த நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக் இறந்தாலும், அவர் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் நட்டு வைத்த மரக்கன்றுகள் இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அவரது இடத்தினை தக்க வைக்க யாராலும் முடியாது.

மண்ணுக்கும் மக்களுக்கும் உபயோகமாக வாழ்வதே வாழ்க்கை. படிக்கும் காலத்தில் மாணவ, மாணவிகள் காதலிக்க வேண்டாம். அந்த வயதில் உங்கள் வாழ்க்கையினை நீங்கள் தீர்மானிக்க முடியாது. படிப்பை முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்றார்.

மேலும் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Actor Soundar Raja’s advice to young students

‘வா டீல்’ போடுவோம்…; தீபாவளிக்கு ரஜினி-சிம்பு உடன் மோதும் அருண்விஜய்

‘வா டீல்’ போடுவோம்…; தீபாவளிக்கு ரஜினி-சிம்பு உடன் மோதும் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு 2021 தீபாவளிக்கு ரஜினியின் ”அண்ணாத்த’ & சிம்புவின் ‘மாநாடு’ படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

தற்போது இந்த களத்தில் வா டீல் என களம் இறங்கியுள்ளார் நடிகர் அருண் விஜய்.

ரத்தினசிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘வா டீல்’.

ஹேம்நாத் மோகன் தயாரிப்பில் உருவாகியுள்ளது .

இந்தப் படத்துக்குப் பிறகு ரத்தினசிவா இயக்கிய ‘றெக்க’ மற்றும் ‘சீறு’ ஆகிய படங்கள் வெளியாகிவிட்டன.

‘வா டீல்’ படத்தின் மீதான பைனான்ஸ் சிக்கலால் வெளியாகாமல் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பட ரிலீஸ் தள்ளிப் போனது.

தற்போது 2021 தீபாவளி வெளியீடு என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் விநியோக உரிமையை ஜே.எஸ்.கே நிறுவனம் சார்பாக ஜெ. சதீஷ்குமார் கைப்பற்றியுள்ளார்.

Arun Vijay’s VaaDeal to hit screens for Deepavali

தர லோக்கல் குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட ‘பிக்பாஸ்’ தர்ஷன்

தர லோக்கல் குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட ‘பிக்பாஸ்’ தர்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் ‘பிக் பாஸ்’ சீசன் 3 புகழ் தர்ஷன் இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமன்றி லஹரி மியூசிக் தயாரிக்கும் மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த ஆல்பத்திற்கு இசை அமைக்கிறார் கணேஷ் சந்திரசேகரன்.

இவர் ஏற்கனவே மறைந்த நடிகர் விவேக் நாயகனாக நடித்த ‘எழுமின்’ என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

எழுமின் படத்திலேயே தனுஷ் அனிருத் போன்ற முன்னணி பிரபலங்களை பாட வைத்தவர் கணேஷ் சந்திரசேகரன்.

அதேபோல் இந்த ஆல்பத்திலேயும் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பாடி உள்ளனர்.

அதன் விவரங்கள் அடுத்த கட்டமாக வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.

நடனம் ஸ்ரீதர் மாஸ்டர், ஒளிப்பதிவு மாயோன் கவனிக்க ஆல்பத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் க.லோகேஸ்வரன்.

இவர் மாநாடு இயக்குனர் வெங்கட்பிரபு வின் முன்னாள் உதவி இயக்குனர் ஆவார்.

இந்த ஆல்பத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதால் விரைவில் ஆல்பம் வெளியாகும் என இந்த குழு அறிவித்துள்ளது.

THARSHAN’S THARA LOCAL KUTHU MUSIC ALBUM FOR LAHARI

90s KiDs டார்ச்சர் தாங்க முடியல போல.. இதோ வந்துட்டுல்ல 80s KiDS-க்கு செம பாட்டு.. என்ஜாய்

90s KiDs டார்ச்சர் தாங்க முடியல போல.. இதோ வந்துட்டுல்ல 80s KiDS-க்கு செம பாட்டு.. என்ஜாய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சோஷியல் மீடியா பக்கம் போனாலே… 90s KiDs டார்ச்சர் தான் இருக்கும்… 90s KiDs டார்ச்சர் மீம்ஸ் வைரலாகிட்டே இருக்கும்.

என்னமோ இவர்களுக்கு மட்டும் தான் இன்னும் திருமணமாகாத மாதிரியே பேசுவாங்க… 80s KiDs பலருக்கு கூட இன்னமும் திருமணமாகாமல் இருப்பதை இவர்கள் அறிவதில்லை.

இந்த நிலையில் 80s KiDs ஆதரவாக ஆறுதலாக ஒரு பாடல் வந்திருக்கு.

“அடியே நான் 80s Kid.. தேவையில்ல ஆர்கூட்டு…” என்று அந்த பாடல் தொடங்குகிறது. இந்த பாடலை ரஞ்சித் என்பவர் எழுதியிருக்கிறார்.

‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் தான் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது.

பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு குணா இசையமைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன், கவிஞர் ஜெகன் கவிராஜ் எழுதி இப்படத்தில் இடம் பெற்றுள்ள “என் ஜீரக பிரியாணி” என்ற பாடல் வெளியாகி வைரலானது.

அந்த பழைய செய்தியின் லிங்க் இதோ..

என்னங்க ஜெகன் உங்க திட்டம்.; பிரியாணி காதலர்களை சிங்கராக மாற்றிய பாடலாசிரியர்

Special song for 80’s kids in Ennanga sir unga sattam

தன் அம்மாவையே வீட்டு வாசலில் காக்க வைத்த நடிகர் விஜய்.? – எஸ்ஏசி (வீடியோ) விளக்கம்

தன் அம்மாவையே வீட்டு வாசலில் காக்க வைத்த நடிகர் விஜய்.? – எஸ்ஏசி (வீடியோ) விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த விழாவில் எஸ்ஏசி பேசும்போது…

“விஜய்யின் பெயர் காரணம் குறித்து ஒரு விழாவில் பேசியிருந்தேன். ஆனால் இரண்டு தினங்களில் அதை மாற்றி மாற்றி பேசுகிறார்கள். ஊடகங்கள் உண்மையாக இருக்க வேண்டும்

எனக்கும் விஜய்க்கும் பிரச்னை இருக்கிறது. எந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லையா? சில நாட்களில் அது சரியாகிவிடும்.

அதுபோல தான் நானும் விஜய்யும். இன்று சண்டை போட்டுக்கொள்வோம். நாளை சேருவோம்´´ என பேசினார்.

இந்த நிலையில் இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்…

விஜய் வீட்டு வாசலில் நானும் என் மனைவியும் காரில் இருந்ததாகவும் விஜய் தன் அம்மாவை மட்டும் வீட்டு உள்ளே அழைத்து சென்றதாகவும் நாங்கள் இருவரும் திரும்பி வந்துவிட்டதாகவும் ஒரு வாரப்பத்திரிகையில் தவறான செய்தி வந்துள்ளது.

விஜய்க்கும் அவரது அம்மாவுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. இருவரும் எப்போதும் பேசிக் கொள்கின்றனர்.”

என அந்த வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார் எஸ்ஏ. சந்திரசேகர்.

Director SAC talks about his family issues

More Articles
Follows