தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னதாக எஸ்.ஜே.சூர்யாவிடம் இணை இயக்குனராக பணியாற்றி ராய் லட்சுமி நடித்த ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் மூலம் அறிமுகமான வினோ வெங்கடேஷ்.
வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா ‘வுல்ஃப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அஞ்சு குரியன், அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, ஸ்ரீகோபிகா மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்திற்கு அம்பரீஷன் இசையமைக்க, அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு என தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும், இப்படம் தமிழ் ,கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
Prabhudeva’s film ‘Wolf’ shoot wrapped up