சிவகார்த்திகேயன் – அதிதி ஷங்கர் கூட்டணியில் இணைந்த விஜய்யின் ரீல் அம்மா

சிவகார்த்திகேயன் – அதிதி ஷங்கர் கூட்டணியில் இணைந்த விஜய்யின் ரீல் அம்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதன் பின்னர் மேலும் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதனையடுத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்திலும் நடிக்கின்றார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை நேற்று வெளியிட்டனர்

அதிதி தற்போது கார்த்தி ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தி டாக்கீஸ் சார்பாக அருண் விஷ்வா இந்த படத்தை தயாரிக்கிறார். வித்துயூ ஐயனா ஒளிப்பதிவு செய்கிறார்.

பரத் ஷங்கர் இசையமைக்க பிலோமீன் ராஜ் எடிட்டிங் செய்கிறார்.

இந்தப் படத்தில் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது 1980 நடிகை சரிதாவும் இணைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சூர்யா – விஜய் இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தில் விஜய்யின் அம்மாவாக சரிதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular actress joins Sivakarthikeyan’s Maaveeran

கத்தி பேசுறது.. கத்திய காட்டி பேசுறது விருமனுக்கு புடிக்காது.; அனல் பறக்கும் ட்ரைலரை வெளியிட்ட ஷங்கர்

கத்தி பேசுறது.. கத்திய காட்டி பேசுறது விருமனுக்கு புடிக்காது.; அனல் பறக்கும் ட்ரைலரை வெளியிட்ட ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொம்பன்’ படத்திற்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து ‘விருமன்’ படத்தின் மூலம் முத்தையா – கார்த்தி கூட்டணி இணைந்துள்ளனர். இதில் தயாரிப்பாளராக நடிகர் சூர்யாவும் இணைந்துள்ளார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தில் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை வட்டாரங்களில் நடைப்பெற்றது.

ஏற்கெனவே “கஞ்ச பூ கண்ணால…” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.

இதில் படத்தின் ட்ரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.

இதில் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளும் அதிரடி பஞ்சு வசனங்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.

‘நாலு திசைக்கு வெளிச்சம் கொடுக்குற சூரியன் மாதிரிதான்யா நீ இருக்கணும்’..

‘கத்தி பேசுறது கத்தியைக் காட்டி பேசுறது விருமனுக்கு பிடிக்காது’,

என் பிள்ளையா பாசத்த காட்டி அடிச்சிடலாம். பயமுறுத்தி கிட்ட கூட நெருங்க முடியாது’ போன்ற வசனங்கள் உள்ளன.

Viruman Trailer launched by Director Shankar at Madurai

 

தென் மாவட்ட வாழ்வியலை சொல்ல விக்ராந்துக்கு ஜோடியான ‘டிக்கிலோனா’ நாயகி

தென் மாவட்ட வாழ்வியலை சொல்ல விக்ராந்துக்கு ஜோடியான ‘டிக்கிலோனா’ நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A.S. என்டர்டெயின்மென்ட் சார்பில் S. அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த படத்தை இயக்குனர் வி.பி நாகேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘தொட்டுவிடும் தூரம்’ என்கிற படத்தை இயக்கியவர்

விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

டிக்கிலோனா புகழ் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் (ஜெய் பீம்) தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்சன் கலந்து அதே சமயம் குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாக இருக்கிறது.

மாசாணி ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்.
கலையை தியாகராஜனும், சண்டைப் பயிற்சியை ராஜசேகரும் கவனிக்கின்றனர்.

சென்னையில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

*தொழில்நுட்பக் குழு*

தயாரிப்பு ; S. அலெக்சாண்டர்

இயக்கம் ; வி.பி நாகேஸ்வரன்

ஒளிப்பதிவு ; மாசாணி

படத்தொகுப்பு ;

கலை ; தியாகராஜன்

சண்டை பயிற்சி ; ராஜசேகர்

நிர்வாக தயாரிப்பாளர் ; A.V. பழனிச்சாமி

டிசைன்ஸ் ; சசி & சசி

மக்கள் தொடர்பு ; A. ஜான்

விக்ராந்த்

Vikranth and Shirin Kanchwala in new movie

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் திடீர் விலகல்.; நெட்டிசன்கள் அதிர்ச்சி

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் திடீர் விலகல்.; நெட்டிசன்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ்.

இந்த படம் தமிழ் சினிமாவில் புதிய சாதனைகளை படைத்துள்ளது.

தற்போது மீண்டும் விஜய்யை இயக்கவிருக்கிறார் லோகேஷ்.

அப்படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

இதுவும் லோகேஷின் வழக்கமான கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் எனத் தெரிகிறது. இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது.

இதனிடையே ட்விட்டர் & இன்ஸ்ட்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார் லோகேஷ்.

இது தொடர்பான அவரது பதிவில்…

“நான் அனைத்து சமூக ஊடக தளங்களில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக்கொள்ள நினைக்கிறேன்.

விரைவில் எனது அடுத்த படத்தின் அறிவிப்புடன் திரும்பி வருவேன். அதுவரை அனைவரையும் பார்த்துக்கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Director Lokesh Kanagaraj took break from social medias

‘மாநாடு’ தயாரிப்பாளருடன் மீண்டும் ‘வினோதய சித்தம்’ கூட்டணி.; ஆனா இது வேற ட்விஸ்ட்

‘மாநாடு’ தயாரிப்பாளருடன் மீண்டும் ‘வினோதய சித்தம்’ கூட்டணி.; ஆனா இது வேற ட்விஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநாடு’ என்கிற மிகப்பெரிய வெற்றி பெற்ற கமர்ஷியல் படத்தை மட்டுமல்ல, ‘கங்காரு’, ‘மிகமிக அவசரம்’ என எளிய மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சொல்லும் கருத்தாழம் கொண்ட படைப்புகளையும் தயாரித்து வெளியிட்ட வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படம் ‘ராஜா கிளி’ இந்தப் படத்தின் பூஜை இன்று மிக எளிய முறையில் நடைபெற்றது.

‘சாட்டை’, ‘அப்பா’, சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘வினோதய சித்தம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது.

ஒரே ஒரு சிறிய மாற்றமாக இந்தப் படத்தை தம்பி ராமையா இயக்குகிறார். சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர்.

நடிப்பும் அதேசமயம் தமிழ் வசனங்களை அழகாக உச்சரிக்க தெரிந்த நடிகையும் இந்தப் படத்திற்கு தேவை என்பதால் ஆடிஷனில் கலந்துகொண்ட பல பெண்களில் இருந்து மிகப் பொருத்தமான தேர்வாக இந்தப் படத்திற்குள் சுவேடா ஷ்ரிம்ப்டன் நுழைந்துள்ளார்.

மேலும் முக்கிய வேடங்களில் பி எம்.எஸ்.பாஸ்கர், பழ. கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.G, இயக்குநர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’ முதல், சமீபத்தில் வெளியான ‘யானை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய கோபிநாத் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்..

‘மாநாடு’ என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் கலை இயக்குநராக பணியாற்றியுள்ள உமேஷ் ஜே. குமார் கலை வடிவமைப்பு செய்கிறார்.

இசையமைப்பாளர் தமனிடம் சீடராக பணியாற்றிய தினேஷ் இசையமைக்கிறார்.

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘ஒத்த செருப்பு’ ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய படத்தொகுப்பை ஆர். சுதர்சன் மேற்கொள்கிறார்.

தம்பி ராமையாவின் மகன் உமாபதி இந்த படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

இந்த படம் குறித்து இயக்குநர் தம்பி ராமையா கூறும்போது…

“இந்தப் படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தில் நான் இயக்குவதற்கு காரணமே, சுரேஷ் காமட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல ஒரு மிகச்சிறந்த இயக்குநரும் கூட.

சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் கதை அறிவு கொண்ட தயாரிப்பாளர்களாக இருக்கும் வெகு சிலரில் சுரேஷ் காமாட்சியும் ஒருவர்.

கிட்டத்தட்ட 12 இயக்குநர்களிடம் இந்தக் கதையை கூறிவிட்டு, அதன் பின்னர் இந்த படத்தை தயாரிக்கிறார் சுரேஷ் காமாட்சி.

பெருந்திணைக் காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படம் ஒரு வாழ்வியல் கதை என்பதால், ஒரு மனிதனின் சுயசரிதை என்பதால் இதை நானே இயக்குவது தான் சரியாக இருக்கும் என மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ளேன்.

இந்த கதையில் நிகழ்வதெல்லாம் சாத்தியமா என்றால், இது நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி தான் உருவாகுகிறது.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு மனிதனின் வாழ்க்கையை பார்த்துவிட்டு வெளியே வந்த உணர்வு ஏற்படும்.

எல்லா தரப்பு வயதினருக்குமான கதாபாத்திரங்கள் இந்த படத்தில் சுழன்று கொண்டே இருக்கும். படம் பார்ப்பவர்கள் இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் தங்களை தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ள முடியும்” என்கிறார்.

“இந்தப் படம் 50 சதவீதம் கதை, 50 சதவீதம் நடிப்பு என சரிவிகித கலவையாக உருவாகியுள்ளது.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் அப்படியே பவுண்டட் ஸ்கிரிப்ட் ஆக உருவாகியுள்ள இந்தக் கதையை யாராவது படமாக்கத் தூக்கிக் கொண்டு ஓடினால், இதைப் படித்தவுடன் அதைவிட அதிகமான வேகத்தில் கொண்டு வந்து எடுத்து இடத்திலேயே வைத்து விடுவார்கள்.. அந்த அளவுக்கு கதையையும், நடிப்பையும் மட்டுமே பிரதானமாகக் கொண்டு இந்தக் கதை உருவாகியுள்ளது.”

*தொழில்நுட்பக் குழுவினர்*

தயாரிப்பு ; சுரேஷ் காமாட்சி
இயக்கம் ; தம்பி ராமையா
இசை ; தினேஷ்
ஒளிப்பதிவு ; கோபிநாத்
படத்தொகுப்பு;
R. சுதர்ஷன்
கலை ; உமேஷ் ஜே குமார்
சண்டை பயிற்சி ; ஸ்டண்ட் சில்வா
நடனம் ; சாண்டி
ஆடை வடிவமைப்பு ; நவதேவி
தயாரிப்பு மேற்பார்வை ; ஜெகதீஷ் ஜெகன், பிரவின்.G, Ksk செல்வா மற்றும் மாலிக்
மக்கள் தொடர்பு ; A.ஜான்

சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி

‘Vinodaya Siddham’ team to collaborate with Maanaadu producer again

சிக்கலில் மாட்டியது விஜய்யின் ‘வாரிசு’.; தெலுங்கு பட உலகில் கிளம்பியது எதிர்ப்பு.!

சிக்கலில் மாட்டியது விஜய்யின் ‘வாரிசு’.; தெலுங்கு பட உலகில் கிளம்பியது எதிர்ப்பு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘வாரிசு’.

ஒரே நேரத்தில் தமிழ் மட்டும் தெலுங்கில் இந்த படம் உருவாகி வருகிறது. இது விஜய் நடிக்கும் நேரடி தெலுங்கு படம் என்றும் கூறலாம்.

இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

முதல் முறையாக விஜய் படத்திற்கு தமன் இசை அமைத்து வருகிறார்.

காதலுக்கு மரியாதை பூவே உனக்காக ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் குடும்ப படம் இது.

இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றுள்ளார் நடிகர் விஜய்.

ஆனால் அங்கு படத்தின் படப்பிடிப்பை நடத்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக தெலுங்கு ஹீரோக்களின் சம்பளம் உயர்ந்து வருவதால் அதை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் போர் கொடி தூக்கி உள்ளனர்.

இதற்கு முடிவு வந்த பிறகு படப்பிடிப்புகளை துவங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் ஆகஸ்ட் 1 முதல் தெலுங்கு தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நிறுத்தியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் தான் விஜய்யின் ‘வாரிசு’ நேரடியாக தெலுங்கிலும் உருவாவதால், அதன் ஷூட்டிங்கையும் நிறுத்தவேண்டும் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

‘வாரிசு’ படத் தயாரிப்பாளர் தில் ராஜூ இது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில்… ‘வாரிசு’ தெலுங்கு படம் அல்ல. அது அசல் தமிழ் படம். தமிழில் எடுக்கப்பட்டு பின்னர் ‘வரசுடு’ (Vaarasudu) என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத தயாரிப்பாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Vijay’s ‘Varisu’ in trouble.; Protest started in the Telugu film world

More Articles
Follows