கமலுக்கு முன்பே சரவணா ஸ்டோர் ஓனருடன் இணைவாரா நயன்தாரா?

Nayanthara teams up with Saravana Stores Owner for new projectசென்னை தி.நகருக்கே அடையாளம் சேர்க்கும் வகையில் பிரம்மாண்டமான உருவாகியுள்ள நிறுவனம் சரவணா ஸ்டோர்.

சென்னையில் மட்டும் இதன் கிளைகள் பல பகுதிகளில் உள்ளன.

இதன் உரிமையாளரான சரவணன் இந்த கடையின் விளம்பரங்களில் சமீபகாலமாக நடித்து வருகிறார்.

ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் இவர் விளம்பரங்களில் நடித்ததை பலரும் விமர்சனம் செய்தனர்.

அண்மையில் கூட இவரும் நடன இயக்குனர் ராஜீ சுந்தரம் பங்குபெற்ற விளம்பர வீடியோக்களை டிவிக்களில் பார்த்து இருப்பீர்கள்.

இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த வந்துள்ளார் சரவணன்.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த போது, ‘விரைவில் சினிமாவில் நடிக்கவுள்ளதாகவும், அதில் தன் ஜோடியாக நயன்தாரா இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படத்தை அவரே தயாரிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

பல முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா நடித்துவிட்டாலும், இன்னும் கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்கவில்லை.

இது உறுதியாகும்பட்சத்தில் கமலுக்கு முன்பே சரவணா ஸ்டோர் ஓனருடன் நயன்தாரா இணைந்துவிடுவார் போலவே.

Nayanthara teams up with Saravana Stores Owner for new project

Overall Rating : Not available

Latest Post