நந்தா-சானியா தாரா இணைந்துள்ள *புழுதி* விரைவில் ரிலீஸ்

நந்தா-சானியா தாரா இணைந்துள்ள *புழுதி* விரைவில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nandha and Sanyathara staring Puzhudhi movie release date updateகேரளாவைச் சேர்ந்த சானியா தாரா நலம்தானா என்ற படத்தின் மூலம் அறிமுகமானானர்.

இதனையடுத்து ஒருவர் மீது இருவர் சாய்ந்து, பனிவிழும் மலர்வனம், அது வேற இது வேற, ஜீவா, அங்காளி பங்காளி போன்ற படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது அவர் புழுதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதில் நயாகனாக நந்தா நடித்துள்ளார். ஏ.ஏழுமலை இயக்கியுள்ளார்.

ராஜேஷ் இசையமைக்க, உமர் எழிலன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

செவன் ஹில்ஸ் சினிமா தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Nandha and Sanyathara staring Puzhudhi movie release date update

puzhudhi aka puzhuthi

8 வழிச்சாலை அமைத்தால் 8 பேரை கொல்வேன் என பேசிய மன்சூர்அலிகான் கைது

8 வழிச்சாலை அமைத்தால் 8 பேரை கொல்வேன் என பேசிய மன்சூர்அலிகான் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mansoor Ali Khan Arrested For Threatening remarks on Salem Chennai Expresswayசேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர்அலிகான் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு சென்றார்.

அங்கு பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார். பின்னர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது…

நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன்.

கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி.

எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது.

மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன்.

எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என்றார்.

சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக மன்சூர் அலிகான் மீது சேலம் தீவட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்த சேலம் போலீஸார், மன்சூர் அலிகானை அவரது விருகம்பாக்கம் இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.

Mansoor Ali Khan Arrested For Threatening remarks on Salem-Chennai Expressway

தத்தளிக்கும் தமிழ்நாடே இனி தளபதியை நாடு; விஜய் ரசிகர்கள் போஸ்டர்

தத்தளிக்கும் தமிழ்நாடே இனி தளபதியை நாடு; விஜய் ரசிகர்கள் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy Vijay fans started celebration for his birth dayவருகிற ஜீன் 22-ந்தேதி நடிகர் விஜய் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனையொட்டி கடந்த 100 நாட்களாகவே ட்விட்டரில் அவரின் பிறந்தநாள் ஹேஷ் டேக்குகளை டிரெண்ட்டிங் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

மேலும் அவரின் பிறந்தநாள் அன்று பல உதவி திட்டங்களை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இவையில்லாமல் நிறைய தியேட்டர்களில் விஜய்யின் ஹிட்டான படங்கள் திரையிடப்பட உள்ளது.

இந்நிலையில் மதுரை ரசிகர்கள் விதவிதமான போஸ்டர்கள் அடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதில் சில போஸ்டர்களில்… “தமிழர்களின் போராட்டம் தொடர்கதை. எங்கள் தளபதி அதை மாற்றிடுவார்”, வருங்கால முதல்வரே, விவசாயிகளின் தோழரே… தத்தளிக்கும் தமிழ்நாடே இனி தளபதியை நாடு… என்ற வாசகங்கள் கொண்ட பல போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

Thalapathy Vijay fans started celebration for their heros birth day

vijay fans poster

சென்சார் அதிகாரிகளின் கெடுபிடியால் அறிவுக் கொழுந்துக என தலைப்பிட்ட படக்குழு

சென்சார் அதிகாரிகளின் கெடுபிடியால் அறிவுக் கொழுந்துக என தலைப்பிட்ட படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arivu Kozhunthunga movie title changed because of Censor Officersஆணியே புடுங்க வேணாம் என்ற படத்தலைப்பு, அறிவுக் கொழுந்துக செந்தில்பரிதி, சென்சார் அதிகாரிகள், தமிழ் சினிமா படைப்பாளிகள்

தமிழ் சினிமாவில் படைப்பாளிகளுக்கு போதிய சுதந்திரம் இல்லை என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாகவே பேசப்பட்டு வருகிறது.

சென்சார் செய்யும் அதிகாரிகளின் கெடுபிடிகளே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

தற்போது சென்சார் அதிகாரிகளின் ஓவர் பிரச்சினையால் படத்தின் தலைப்பை மாற்றியுள்ளார் ஒரு இயக்குனர்.

ஆணியே புடுங்க வேணாம் என்று தலைப்பிடப்பட்டு இருந்த ஒரு படத்திற்கு தற்போது அறிவு கொழுந்துக என்று பெயரிட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் படத்தை சென்சாருக்கு அனுப்பிய பிறகே இந்த தலைப்பை மாற்றி வைத்ததாக தெரிவித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பிரஸ் மீட்டின் போது இந்த தகவலை படக்குழுவினர் தெரிவித்தனர்.

செந்தில் பரிதி இயக்கியுள்ள இப்படத்தை இ. ஆனந்த் என்பவர் தயாரித்துள்ளார்.

வெங்கட் கௌதம் ஒளிப்பதிவு செய்ய, கவின் இசையமைத்துள்ளார்.

அடுத்த ஜீலை மாதம் 13ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

விருது விழாவை தவிர்த்த குஷ்பூ-நயன்தாரா-விஜய்சேதுபதி-கார்த்திக்கு நடிகர் சங்கம் நன்றி

விருது விழாவை தவிர்த்த குஷ்பூ-நயன்தாரா-விஜய்சேதுபதி-கார்த்திக்கு நடிகர் சங்கம் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar Sangam thanks statement for Actors who avoided Film fare award functionகடந்த காலங்களில் திரை உலகில் திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகளும் நடந்துள்ளது.

அந்த நிகழ்ச்சிகளில் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால், சமீப காலங்களில் அது வியாபார நோக்கத்தில் நடத்தபடுவதால் அந்த பயனை நடிகர் நடிகைகளும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சங்க சிறப்பு கூட்டத்தில் இது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்பட்டது .

அன்று எடுத்த முடிவில் இனிமேல் இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள் பொருளாதாரமாக பயன்படும் வகையிலோ அல்லது தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்கொடையாக தருபவர்கள் நிகழ்வில் மட்டும் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

இதற்கு பின் நடந்த விழாக்களான கலர்ஸ் டிவி, விஜய் டிவி, கலாட்டா டாட் காம் விருது விழாக்களில் இந்த நடைமுறையில் பணம் பெறப்பெற்று அறக்கட்டளையின் செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஹைதராபாதில் பிலிம் பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த நடைமுறையை அந்த விழா நடத்துபவர்களிடம் எடுத்து கூறியும் இன்றுவரை ஒத்துழைப்பு தராததினால் , இதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகளிடம் வேண்டுகோள் வைத்தோம் .

எங்கள் வேண்டுகோளை ஏற்று கொண்டு அந்த விருது விழாவினை தவிர்த்த செல்வி. நயன்தாரா, திருமதி.குஷ்புசுந்தர், திரு.விஜய்சேதுபதி, திரு கார்த்தி மற்றும் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

தங்களின் ஒத்துழைப்பால் பல ஏழை கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவமுடியும். இனி வரும் காலங்களில் மற்ற திரை கலைஞர்களும் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

Nadigar Sangam thanks statement for Actors who avoided Film fare award function

ஆந்திரா மெஸ்-ஸை கன்னா பின்னான்னு கழுவி ஊற்ற ஜெய் சவால்

ஆந்திரா மெஸ்-ஸை கன்னா பின்னான்னு கழுவி ஊற்ற ஜெய் சவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andhra Mess director Jai expects Negative comments for his movieசினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில் கதை சொல்லப்பட்டிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்”.

நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி.

இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், பிரபல விளம்பரப் பட இயக்குநர் ஜெய்.

“ஷோ போட் ஸ்டுடியோஸ்” சார்பில் நிர்மல் கே.பாலா தயாரித்திருக்கும் இப்படத்தின் கதாநாயகனாக “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “ரிச்சி” போன்ற படங்களில் நடித்த ராஜ் பரத், கதாநாயகிகளாக தேஜஸ்வினி, பூஜா தேவரியா நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் புகழ்பெற்ற ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் பற்றி சமீபத்தில் பேசிய இயக்குநர் ஜெய், தமிழ் சினிமா சூழலில் இருக்கிற வியாபார சிக்கல்களை கொஞ்சம் கடுமையாகவே சாடியுள்ளார்.

“ஒரே படத்தைப் பற்றி இரண்டாவது முறையாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இருந்தாலும் பேசித்தான் ஆக வேண்டும். இந்தப் படத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறோம்.

ஒரு முதல்பட இயக்குநரான நான் சொன்ன இந்தக் கதையை நம்பி, நான் நினைத்த மாதிரி எடுத்து முடிக்கிற வரை எனக்கு பலமாக இருந்த தயாரிப்பாளர் நிர்மல் கே.பாலாவிற்கு முதலில் என் நன்றிகள்.

அதேபோல் இத்தனை இடர்களிலும் என்னோடு நிற்கிற என் படக்குழுவினர் அத்தனை பேருக்கும் எனது நன்றிகள்.

தமிழ் சினிமா சூழல் என்பது வியாபாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதை தாண்டி படங்கள் எடுப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது.

நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது.

இந்தப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரைக்கு வருகிறது. இப்படத்திற்கான விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், யார் எப்படி கிழித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். எது எப்படியாக இருந்தாலும் அத்தனைக்கும் நான் மட்டும் தான் பொறுப்பு” என்று பேசியுள்ளார்.

ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது…

“இயக்குநர் ஜெய், விமர்சனங்களில் எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக் கொள்வதாக சொன்னார். ஆனால், அதற்கெல்லாம் “ஆந்திரா மெஸ்” வேலை வைக்காது.

நிச்சயம் இந்தப் படத்தை எல்லோரும் தூக்கி நிறுத்துவார்கள்.

பத்திரிக்கையாளர்களோடு 25 வருட பழக்கம் எனக்குண்டு. அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டவர்கள் தான் இன்று முன்னணி இயக்குநர்களாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

நிச்சயம் அந்த வரிசையில் ஜெய்யையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்று பேசினார்.

Andhra Mess director Jai expects Negative comments for his movie

andhra mess team

More Articles
Follows