‘இளையராஜா 75’ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருவது உறுதி

‘இளையராஜா 75’ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருவது உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayarajaதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அவ்விழாவிற்கு விழா குழுவினர்கள், தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ், பொருளாளர் SR பிரபு, ‘இளையராஜா 75’ குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் மனோபாலா ஆகியோர் திரு. ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ‘இளையராஜா 75’ விழாவிற்கு அழைப்பு விடுத்தனர். அவரும் நிச்சயம் வருகிறேன் என்று உறுதியளித்துள்ளார். திரு. கமலஹாசன் அவர்களும் வருவதாகக் கூறியிருக்கிறார்.

இசைக்கலைஞராக “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்

இசைக்கலைஞராக “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiசந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கின்றார்.

பேரான்மை, புறம் போக்கு படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் இப்படத்திற்காக வடிவமைக்கப்படவுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகும் படங்களில் இந்த படம் அதிக பட்ஜெட் படமாக இருக்கும்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசுகிறது இன்னும் பெயரிடப்படாத இப்படம்.

“மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி இசைக்கலைஞராக நடிக்க, அவருடன் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. மூனாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – சந்திரா ஆர்ட்ஸ்
தயாரிப்பாளர்- இசக்கி துரை
எழுத்து மற்றும் இயக்கம் – வெங்கட கிருஷ்ண ரோகாந்த்
இனைத்தயாரிப்பு – சினி இன்னோவேஷன்ஸ்
இனைத்தயாரிப்பாளர் – ஆர்.கே. அஜெய்குமார்
இசை – நிவாஸ் கே. பிரசன்னா
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசுவாமி
கலை இயக்குநர் – ஜான் பிரிட்டோ
ஸ்டண்ட் – மிரக்கில் மைகேல்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’ சர்ச்சை போஸ்டர் குறித்து இயக்குனரின் விளக்கம்!

‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’ சர்ச்சை போஸ்டர் குறித்து இயக்குனரின் விளக்கம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and mahatதொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்தின் மகத்தான வளர்ச்சிக்குப் பின்னர், பொதுவெளிக்கு வரும் எந்த ஒரு பொருளும் மக்களிடையே மிகப்பெரிய விவாதத்துக்கு உள்ளாகிறது. தென்னிந்திய சினிமா துறையை உற்று நோக்கினால், தங்கள் விருப்பமான நடிகரின் எந்த ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர் வெளியானாலும் அதை ரசிகர்கள் ஃபிரேமுக்கு ஃபிரேம் என்ன உள்ளது என பகுப்பாய்வு செய்து படத்தை பற்றிய தகவல்களை விவாதிக்கிறார்கள். சுவாரஸ்யமாக, இது இயக்குனர்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முக்கிய காரணியாக அமைகிறது. ஒரு சில நாட்களுக்கு முன், பிக் பாஸ் புகழ் மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா” என்ற ரொமாண்டிக் காமெடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் நடிகர் மஹத் தீவிரமான STR ரசிகராக நடித்திருக்கிறார். அந்த போஸ்டரில் சிம்புவின் கட் அவுட் இருந்தது. வைரலான அந்த போஸ்டரை ரசிகர்கள் பகுப்பாய்வு செய்ததில், வேறு ஒரு தமிழ் சினிமாவின் போஸ்டர் பின்னணியில் இருந்தது தெரிய வந்தது.

ரசிகர்களிடையே ஒருவித குழப்பம் நிலவும் இந்த நிலையில், படத்தின் இயக்குனர் பிரபு ராம்.சி விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது, “இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பல பெரிய படங்களின் ரெஃபரன்ஸ் இருக்கும். இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களை கவரும் “ஸ்பூஃப்” எங்கள் படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். நாங்கள் ஒரு சாதாரண போஸ்டரை கொண்டு வந்திருந்தால், எங்கள் தயாரிப்பானது பொங்கல் பெருவிழாவில் தமிழ் சினிமாவுக்கு அளிக்கப்பட்ட இன்னுமொரு பரிசாக மட்டுமே இருந்திருக்கும். இது பார்வையாளர்களுக்கு ஒரு விஷுவல் பொறியாகும். போஸ்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்புக்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் வசன பகுதிகளுக்கான படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து விட்டது, ஒரு பாடல் காட்சிப்படுத்தப்பட வேண்டி இருக்கிறது. இன்னும் 15 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும்” என்றார்.

யஷ் நடித்து விஷால் ரிலீஸ் செய்த KGF படத்திற்கு விஜய் பாராட்டு

யஷ் நடித்து விஷால் ரிலீஸ் செய்த KGF படத்திற்கு விஜய் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay KGFபிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸான படம் ‘கே.ஜி.எஃப்’ – KGF.

யஷ் நடித்த இப்படத்தை, ஹொம்பாலே ஃபிலிம்ஸ் சார்பாக விஜய் கிரகந்தர் தயாரித்தார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளட்ட மொழிகளில் இப்படம் ரிலீஸானது.

தமிழ்ப் பதிப்பை, நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி ரிலீஸ் செய்தது.

கோலார் தங்க வயலை மையப்படுத்தி இந்த கதையை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த விஜய், “அனைவருமே நேர்த்தியாக நடித்துள்ளனர். படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார் தளபதி.

விஜய்யின் பாராட்டால் மகிழ்ச்சியில் உள்ளது ‘கே.ஜி.எஃப்.’ படக்குழு.

Breaking வசூல் வேட்டையில் ரஜினியின் பேட்ட.; 100 கோடியை தொடுகிறது!

Breaking வசூல் வேட்டையில் ரஜினியின் பேட்ட.; 100 கோடியை தொடுகிறது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Petta is crossing 100 Crore collection in TN aloneரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இப்படம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதாவது ஜனவரி 10ஆம் தேதி ரிலீசானது.

இதே நாளில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது.

எப்போதும் ரஜினி படங்கள் வெளியானால் அவரது படமே அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடிக்கும். ஆனால் பேட்ட படத்தை விஸ்வாசம் முந்திவிட்டதாக சில பணம் பெற்றுக் கொண்டு வதந்திகளை பரப்பினர்.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை சற்றுமுன் வெளியிட்டது.

அதில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து பேசியிருக்கிறார் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம்.

அதில்… “வரும் ஞாயிற்றுக் கிழமையோடு அதாவது பேட்ட படம் வெளியான 11 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலைத் தாண்டும். இது உண்மையான நிலவரம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளருக்கு அனைவருக்கும் லாபம் கொடுத்துள்ளது. எல்லோரும் மகிழ்ச்சியாக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேட்ட பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடனிருந்தார்.

Rajinis Petta is crossing 100 Crore collection in TN alone

தன் வருங்கால மனைவி அனிஷாவை அறிமுகம் செய்த விஷால்

தன் வருங்கால மனைவி அனிஷாவை அறிமுகம் செய்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishal to get engaged to Arjun Reddy actor Anisha Allaநடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் அவர்கள் நடிகர் சங்க கட்டிடத்தில் உருவாகவுள்ள மண்டபத்தில் தான் தன்னுடைய திருமணம் நடக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

இதனால் விஷாலின் மணக்கப் போகும் பெண் யார்? என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்தது.

இதனையடுத்து என் திருமணம் பற்றி நான் விரைவில் முறையாக அறிவிப்பேன் என தெரிவித்தார்.

தற்போது அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

அனிஷா அல்லா ரெட்டி என்ற பெண்ணின் புகைப்படங்களை வெளியிட்டு இவர்தான் நான் மணக்கப் போகும் பெண் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

திருமண நிச்சயதார்த்தம் வருகிற ஃபிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடிகர் சங்க கட்டிடத்தில் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்யப் போகும் பெண் அனிஷா, ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஜய் ரெட்டியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vishal to get engaged to Arjun Reddy actor Anisha Alla

More Articles
Follows