நாகார்ஜுனாவின் பிரமாண்ட நாயகன் படத்தில் ஆண்டாள் கேரக்டரில் அனுஷ்கா

நாகார்ஜுனாவின் பிரமாண்ட நாயகன் படத்தில் ஆண்டாள் கேரக்டரில் அனுஷ்கா

Nagarjuna Anushka teams up for Brahmanda Nayaganபிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யாஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம் அகிலாண்டகோடி ‘பிரமாண்ட நாயகன்.’

ராமா என்ற வேங்கடசபெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டது.

ஜனரஞ்சகமாக இன்றைய நவீன காலத்திற்கேற்ப மிகச்சிறந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ள படம் எனலாம்.

இப்படத்தை இயக்கியுள்ளவர் சுமார் 60 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளவரும் ‘பாகுபலி’ புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திர ராவ்.

பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாகவைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்கவைத்துள்ளனர்.

மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.

‘பாகுபலி’க்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார்.

பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு, திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம், வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம், ராமா என்பவர் ஹாத்திராம் பாபாவாக மாறியது எப்படி, பாலாஜி என்று பெயர் வரக்காரணம், திருமலையில் முதலில் யாரை வணங்குவது என பக்தர்கள் மனதில் எழும் பல சந்தேக வினாக்களுக்கு ஏற்ற விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக்காட்சிகளாக அமைத்து தெளிவு படுத்தியுள்ளனர்.

பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப்படம். விறுவிறுப்பான பிரமாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

வசனம் பாடல்களை D. S. பாலகன் எழுதியுள்ளார். J. K. பாரவி கதை எழுத
கோபால்ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன் , எஸ்.பி.பி. சரண் , டாக்டர் சீர்காழி ஜி. சிவசிதம்பரம் , வி.வி. பிரசன்னா , ஜானகி ஐயர் , முகேஷ் , ஹேமாம்பிகா . பிரியா , ராஜேஷ் , கவிதா கோபி எனப் பலரும் பாடல்களைப் பாடியுள்ளனர்.

பாகுபலிக்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் அடைந்து இருப்பது படத்தின் பெருமைகளில் ஒன்று.

தமிழகத் திரைகளில் இந்தப் ‘ பிரமாண்ட நாயகன் ‘ காட்சி அமைப்பின் விஸ்வரூப தரிசனம் தரும் விதத்தில் வெளியாகவுள்ளது.

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் உலகமெங்கும் திரையிட இப்படத்தை ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்கள் s.துரைமுருகனும், B.நாகராஜனும் திட்டமிட்டுள்ளனர்.

Nagarjuna Anushka teams up for Brahmanda Nayagan

Nagarjuna Anushka teams up for Brahmanda Nayagan

விஜய்சேதுபதி இடத்தில் சிவகார்த்திகேயன்; விக்னேஷ்சிவன் புதுஐடியா

விஜய்சேதுபதி இடத்தில் சிவகார்த்திகேயன்; விக்னேஷ்சிவன் புதுஐடியா

vijay sethupathi and sivakarthikeyanவிக்னேஷ் சிவன் தற்போது சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார்.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி நடிப்பில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தை தொடங்கினார் இவர்.

இதில் விஜய்சேதுபதியுடன் த்ரிஷா, நயன்தாரா இருவரும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் திடீரென அந்த படம் கைவிடப்பட்டது.

தற்போது அந்த கதையில் சிறிய மாற்றங்களைச் செய்துதான் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கவிருக்கிறாரம்.

ஞானவேல்ராஜா தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

தனுஷின் அடுத்த ஆசைகளையும் நிறைவேற்றுவாரா ரஜினி..?

தனுஷின் அடுத்த ஆசைகளையும் நிறைவேற்றுவாரா ரஜினி..?

dhanush and rajiniரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிக்கும் காலா படத்தை தயாரித்து வருகிறார் தனுஷ்.

இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் தனுஷ்.

அதில் காலா சூட்டிங் 60% நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்படம் அடுத்த 2018ஆம் ஆண்டு 2.0 படத்தின் ரிலீசுக்கு பிறகு வெளியாகும்.

மேலும், ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என தன் ஆசையை தெரிவித்துள்ளார் தனுஷ்.

மேலும் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ரஜினி படத்தை தயாரிக்க வேண்டும் என்ற கனவோடு பலர் காத்திருக்க, தனுஷ்க்கு அந்த வாய்ப்பை வழங்கினார் ரஜினி.

தன் மருமகன் தனுஷின் அடுத்தடுத்த ஆசைகளை ரஜினி நிறைவேற்றுவாரா? என்பதை பார்ப்போம்.

த்ரிஷாவுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்

த்ரிஷாவுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்

trisha and sivakarthikeyanவினோத் இயக்கத்தில் நட்டி நடித்த சதுரங்க வேட்டை படத்தை மனோபாலா தயாரித்திருந்தார்.

பெரும் வெற்றிப்பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இவரே தயாரித்துள்ளார்.

சதுரங்க வேட்டை 2 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நிர்மல் குமார் இயக்கியுள்ளார்

அரவிந்த்சாமி, த்ரிஷா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் இதன் டீசரை சிவகார்த்திகேயன் நாளை காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.

2.0 படத்தின் ஆந்திரா-தெலங்கானா உரிமை அபாரம்… ராஜூமகாலிங்கம்

2.0 படத்தின் ஆந்திரா-தெலங்கானா உரிமை அபாரம்… ராஜூமகாலிங்கம்

Raju mahalingamஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை ரூ. 400 கோடியில் தயாரித்து வருகிறது லைகா நிறுவனம்.

ரஜினியுடன் எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் நடிக்க ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை அடுத்த ஆண்டு 2018 ஜனவரி 25ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இதன் ஆந்திரா மற்றும் தெலங்கானா வெளியீட்டு உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் அறிவித்துள்ளார்.

இதை குளோபல் சினிமா நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் படங்களில் விவேகம் செய்த சாதனை

அஜித் படங்களில் விவேகம் செய்த சாதனை

Sun TV bagged satellite rights of Vivegam at huge priceவேதாளம் படத்திற்கு பிறகு விவேகம் படத்திற்காக அஜித்-சிவா-அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க ஆகஸ்ட் 24-ம் தேதி திரைக்கு வருகிறது.

இதுவரை இப்படத்தின் வியாபாரம் மட்டுமே ரூ 100 கோடியை எட்டியுள்ளதாக கூறபடுகிறது.

இதன் சாட்டிலைட் ரைட்ஸை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதுவரை அஜித் நடித்த படங்களிலேயே அதிக தொகைக்கு சாட்டிலைட் உரிமைக்கு விற்கப்பட்ட படம் விவேகம்தான் என தகவல்கள் வந்துள்ளன.

Sun TV bagged satellite rights of Vivegam at huge price

More Articles
Follows