தமிழுக்கு நாகசைதன்யா.. தெலுங்குக்கு வெங்கட் பிரபு.; இளையராஜா – யுவன் மீண்டும் கூட்டணி

தமிழுக்கு நாகசைதன்யா.. தெலுங்குக்கு வெங்கட் பிரபு.; இளையராஜா – யுவன் மீண்டும் கூட்டணி

நடிகர் நாகசைதன்யா, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் தன்னுடைய ‘NC22’ படத்தின் படப்பிடிப்பை துவக்கி இருக்கிறார்.

இந்தப் படம் நாகசைதன்யாவின் முதல் தமிழ்-தெலுங்கு பைலிங்குவலாக இருக்கும்.

அதேபோல, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் இதுதான் முதல் தெலுங்கு படம். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

ஸ்ரீனிவாசா சித்தூரி ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனர்’ரின் கீழ் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

படத்தில் இன்னொரு நல்ல செய்தி ‘மாஸ்ட்ரோ’ இளையராஜாவும், ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள். விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ படத்திற்கு பிறகு இளையராஜா யுவன் இணைவது இங்கே கவனிக்கத்தக்கது.

நடிகர் நாகசைதன்யா இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும்.

அழகான காட்சிகளை படமாக்குவதில் திறமையான ஒளிப்பதிவாளரான SR கதிர் இந்தப் படத்தில் இணைகிறார். படத்தின் வசனத்தை அபூரி ரவி எழுதுகிறார்.

படத்தின் எடிட்டிங்கை வெங்கட் ராஜன் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பிற்காக படக்குழு திறமை மிக்கவரான ராஜீவை தேர்வு செய்துள்ளது.

கலை இயக்கத்தை சத்யநாராயணா கையாள உள்ளார். முக்கிய சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக சர்வதேச ஆக்‌ஷன் இயக்குநரான யானிக் பென் இதில் இணைந்துள்ளார். அதேபோல, மகேஷ் மாத்யூவும் ‘NC22’-ல் அங்கமாக உள்ளார்.

படத்தின் தொழில்நுட்பக் குழு தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள விவரங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்னும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும். ஆக்‌ஷன்- எண்டர்டெயினராக மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படம் தயாராக இருக்கிறது. பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.

*நடிகர்கள்*:

நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி மற்றும் பலர்.

*தொழில்நுட்பக்குழு விவரம்*:

கதை, திரைக்கதை, இயக்கம் : வெங்கட்பிரபு,
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,
வழங்குபவர் : பவன் குமார்,
இசை: ‘மாஸ்ட்ரோ’ இளையராஜா, ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: SR கதிர்,
எடிட்டர் : வெங்கட் ராஜன்,
வசனம்: அபூரி ரவி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன்,
ஆக்‌ஷன்: யானிக் என், மகேஷ் மாத்யூ,
கலை இயக்கம்: DY சத்யநாராயணா

NC22

Naga Chaitanya starrer NC22 Movie shooting started

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் சாற்றி வழிபாடு செய்த நடிகர் வடிவேலு…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் சாற்றி வழிபாடு செய்த நடிகர் வடிவேலு…

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு.

மாமன்னன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலு நடிக்கிறார்.

இந்நிலையில் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார் வடிவேலு. கோயிலில் முருகனுக்கு வேல் சாற்றி வழிபாடு செய்த பின்னர் ரசிகர்களுடனும், பத்திரிகையாளர்களுடனும் கலந்துரையாடல் செய்தார் நடிகர் வடிவேலு.

இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வடிவேலு

Actor Vadivelu worshiped at Tiruchendur Murugan Temple

துருவ் விக்ரம் படத்தில் அறிமுகமாகும் நடிகை ரோஜா மகள்

துருவ் விக்ரம் படத்தில் அறிமுகமாகும் நடிகை ரோஜா மகள்

ஜெகன்மோகன் ரெட்டியின் அரசின் ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கும் நடிகை ரோஜாவுக்கு அன்சுமாலிகா என்ற மகள் உள்ளார், மாடலிங் தொழில்களில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வரும் அவர் விரைவில் சினிமாவில் நுழைய இருக்கிறார்.

சமீபத்தில் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடிய அன்ஷுமாலிகாவுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதாகவும், அதில் தொழில்முறை பயிற்சி எடுக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் த்ருவ் விக்ரம் நடிக்க இருக்கும் புதிய தெலுங்கு படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது திருமணத்துக்கு தயாராகிறாரா சமந்தா ?

இரண்டாவது திருமணத்துக்கு தயாராகிறாரா சமந்தா ?

சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு நான்கு வருட மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டனர்.
அவர்கள் பிரிந்து ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு, சமந்தா இறுதியாக மனம் மாறியது போல் தெரிகிறது,

சத்குரு ஜெகதீஷ் வாசுதேவ் சமாதானப்படுத்தியதை அடுத்து, சமந்தா இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து தெலுங்கில் ‘குஷி’ படத்தில் சமந்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘துணிவு’ படத்தில் அஜித்துடன் இணைந்த துணிச்சலான நடிகர்

‘துணிவு’ படத்தில் அஜித்துடன் இணைந்த துணிச்சலான நடிகர்

நடிகர் இயக்குனர் என பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி.

.இவர் தற்போது அஜித் நடித்துவரும் ‘துணிவு’ படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இந்த பட படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் சமுத்திரக்கனி.

இவர், தான் இயக்கும் படங்களில் துணிச்சலான சமூக கருத்துக்களை பேசி வருபவர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இவர்களுடன் மஞ்சுவாரியர் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

வினோத் இயக்கும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

‘துணிவு’ படத்தின் பர்ஸ்ட், மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

சமுத்திரக்கனி

Samuthirakani joins Thunivu movie

அஜித்தின் ‘துணிவு’ இந்தியாவின் மிகப்பெரிய நிஜக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு காவல்துறையினரின் பாராட்டைப் பெற்றதா?

அஜித்தின் ‘துணிவு’ இந்தியாவின் மிகப்பெரிய நிஜக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு காவல்துறையினரின் பாராட்டைப் பெற்றதா?

‘துணிவு’ அஜீத் குமாரின் 61வது படத்தின் டைட்டிலாக அறிவிக்கப்பட்டதிலிருந்து சமூக வலைதளங்களில் முதல் இடத்தில் உள்ளது.
1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த பிரபல வங்கிக் கொள்ளையை தழுவி கதைக்களம் அமைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வங்கிக் கொள்ளையின் சிறப்பம்சம் என்னவென்றால், இரு தரப்பிலும் யாரும் தங்கள் உயிரை இழக்கவில்லை.
திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் நன்றாக இருந்தது, காவல்துறை அதை “ஒரு Clean and Neat operation ” என்று அழைத்தது.

More Articles
Follows