தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM)).
காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை இசையமைப்பாளரும், இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு விஸ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘எல்.ஜி.எம்’ படத்தின் இரண்டு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில், ‘எல்.ஜி.எம்’ படத்தின் டீசர் இன்று (ஜூன்7) மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.
இந்த டீசரை எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து வெளியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
msdhoni will release lgm movie teaser today