தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் ‘Mr.சந்திரமௌலி’.
இதில் நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்தி இணைந்து நடித்துள்ளனர்.
மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது.
இப்படத்தின் ஒரு முக்கியமான குத்துச்சண்டை காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.
இந்த படத்தை BOFTA media works India private limited சார்பில் ‘Creative Entertainers and Distributors’ தயாரிக்கின்றனர்.
இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சந்தோஷ் பிரதாப், சதிஷ், விஜி சந்திரசேகர் மற்றும் மனோபாலா ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சாம் CS இசையில் , ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவில், TS சுரேஷ் ஒளிப்பதிவில் , ஜாக்கியின் கலை இயக்கத்தில் ‘Mr.சந்திரமௌலி’ உருவாகிவருகிறது.
இந்நிலையில் ‘Mr.சந்திரமௌலி’ வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.