நட்புக்காகவும் வரலட்சுமிக்காகவும் வந்தேன்; விஷால் ஓபன் டாக்

vishal varalakshmiகிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’.

நவரச நாயகன் கார்த்திக் அரவது மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்துள்ள படம் இது.

திரு என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகிகளாக ரெஜினா கசாண்ட்ரா, வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.

இதில் படக்குழுவினருடன் சூர்யா, விஷால், சாந்தணு, இயக்குநர்கள் சுசீந்திரன், கவுரவ் நாராயணன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் விஷால் பேசும் போது,

ஒருவரின் குழந்தை பருவ ஆசையை நிறைவேற்றி வைப்பது என்பது பெரிய விஷயம்.

அந்த வகையில் சூர்யாவின் சிஸ்டர் பிருந்தா சிவக்குமாரின் ஆசையை தற்போது நிறைவேற்றி வைத்த்திருக்கிறார் இந்த Mr சந்திரமௌலி. அவருக்கு வாழ்த்துக்கள்.

மிஸ்டர்.சந்திரமௌலி என்றாலே அது கார்த்திக் சார் தான். நடிகர் சங்கப் போராட்டத்தின் போது கார்த்திக் சார் உறுதுணையாக இருந்தார்.

அவருடன் பலரும் உறுதுணையாக இருந்தனர். அனைவருக்கும் நன்றி. இது எனக்கான பெருமை அல்ல. இந்திய சினிமாவே தமிழ் சினிமாவை திருப்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயத்தை சாதித்துள்ளோம்.

என் 3 படங்களை நண்பர் திரு இயக்கியுள்ளார். அவருடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளேன்.

அவரின் நட்புக்காகவும், வருவுக்காகவும் (வரலட்சுமி) தான் இங்கு வந்தேன்” என்று பேசினார் விஷால்.

I participated in Mr Chandramouli audio launch because of Varalakshmi says Vishal

Overall Rating : Not available

Related News

நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு…
...Read More
கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா மற்றும்…
...Read More

Latest Post