மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்க்க மோகன்லால் மறுப்பு

mohan lal and dieepகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகை ஒருவரைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் மலையாள முன்னணி நடிகரான திலீப் கைது செய்யப்பட்டார்.

இதனால் பெரும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த இவரின் இமேஜ் அடியோடு பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கேரள நடிகர் சங்கமான அம்மா அமைப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

இதனிடையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த திலீப் 80 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அம்மா கூட்டத்தில், திலீப்பை மீண்டும் உறுப்பினராக சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு ரம்யா நம்பீசன், ரீமா, கீது உள்ளிட்ட நடிகைகள் எதிர்ப்புத் தெரிவித்து அம்மா சங்கத்தில் இருந்து விலகினர்.

இதுகுறித்து பேசிய நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால், இந்த வழக்கின் தொடக்கத்திலிருந்தே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக சங்கம் இருப்பதாகவும், தற்போதைக்கு திலீப்பை சேர்க்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை அவருக்கான தடை நீடிக்கும் என்றார்.

Overall Rating : Not available

Latest Post