தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார் சுந்தர் சி.
தெலுங்கில் பவண் கல்யாண், சமந்தா, ப்ரனிதா சுபாஷ் நடித்திருந்தனர்.
தமிழில் சிம்பு நாயகனாக நடிக்க, லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
கடந்த வாரம் முதல் ஜார்ஜியா நாட்டில் இதை படமாக்கி வருகிறார்.
இதில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.
தற்போது மற்றொரு நாயகியாக கேத்தரீன் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார்.
சமந்தா கேரக்டரில் மேகா ஆகாஷும், பிரணிதாவின் கேரக்டரில் கேத்தரீன் தெரசாவும் நடிக்கின்றனர்.
சிம்புவின் மாமியராக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார் என்பதை முன்பே பார்த்தோம்.