ரவி தேஜா – அனுபம் கேர் நடிப்பில் தயாரான ‘டைகர் நாகேஸ்வரராவ்’

ரவி தேஜா – அனுபம் கேர் நடிப்பில் தயாரான ‘டைகர் நாகேஸ்வரராவ்’

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரும், மாஸ் மகாராஜாவுமான ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் முதல் பான் இந்திய திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார்.

இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இப்படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கம் இந்திய திரையுலகின் பேசு பொருளாக மாறியது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாஸ் மகாராஜா ரவிதேஜா நடிப்பில் தயாராகி வரும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் லேட்டஸ்ட்டாக சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் அனுபவம் கேர் இணைந்திருக்கிறார்.

அழுத்தமான வேடத்தில் நடிக்கவிருக்கும் அனுபம் கேர், ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தயாரித்து பிரம்மாண்டமான வசூல் வெற்றியைப் பெற்ற ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ எனும் படத்தில் நடித்திருந்தார். இவர் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் நட்சத்திர பட்டாளத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இந்திய அளவில் அதிகரித்திருக்கிறது.

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் இலட்சிய படைப்பு இது என்பதால், பட உருவாக்கத்தில் சமரசம் செய்யாமல் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ‘டைகர் நாகேஸ்வரராவை’ உருவாக்கி வருகிறார்.

‘டைகர் நாகேஸ்வரராவ்’ 1970களில் ஸ்டூவர்ட் புரம் என்ற கிராமத்தில் வாழ்ந்த திருடன் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் உருவாவதால், கதையின் நாயகனாக நடிக்கும் ரவி தேஜா, இந்த கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றத்தை மாற்றியிருக்கிறார்.

இது ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மேலும் ரவி தேஜா இதற்கு முன் ஏற்றிராத கதாபாத்திரமாகவும் இது இடம்பெற்றிருக்கிறது.

‘டைகர் நாகேஸ்வரராவ்’ தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகி வருகிறது. ஆர். மதி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்ற, ஸ்ரீகாந்த் விஸா வசனம் எழுதுகிறார். இணை தயாரிப்பாளராக மயங்க் சிங்கானியா பணியாற்றுகிறார்.

டைகர் நாகேஸ்வரராவ் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் பட்டியல்

நடிகர்கள் : ரவி தேஜா, அனுபம் கேர், நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் : வம்சி
தயாரிப்பாளர் : அபிசேக் அகர்வால்
தயாரிப்பு நிறுவனம் : அபிசேக் அகர்வால் ஆர்ட்ஸ்
வழங்குபவர் : தேஜ் நாராயணன் அகர்வால்
இணை தயாரிப்பு : மயங்க் சிங்கானியா
வசனம் : ஸ்ரீகாந்த் விஸா
இசை : ஜீ. வி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு : ஆர். மதி
தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா

Mass Maharaja Ravi Teja’s Tiger Nageswara Rao

ரிப்பீட்டு : ‘மாநாடு’ பட மாஸ் சீன் ‘வெந்து தணிந்து காடு’ படத்திலும் தொடர்கிறது

ரிப்பீட்டு : ‘மாநாடு’ பட மாஸ் சீன் ‘வெந்து தணிந்து காடு’ படத்திலும் தொடர்கிறது

இந்த நிலையில் அந்த சண்டை காட்சி போலவே தற்போது

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’.

ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ளது.

செப்டம்பர் 15ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் லீ விட்டேக்கர் 5 நிமிட சண்டை காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கி இருக்கிறார்களாம்.

இதற்கு முன் சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்திலும் ஒரே ஷாட்டில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Maanadu movie mass scene repeat in Vendhu Thanindhadhu Kaadu

சிம்புவை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர்-க்கும் டாக்டர் பட்டம் வழங்கும் பிரபலம்

சிம்புவை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர்-க்கும் டாக்டர் பட்டம் வழங்கும் பிரபலம்

கும்பகோணத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஷங்கர். (இயக்குனர் ஷங்கர்)

இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தார். அவரது கல்லூரி நாட்களில், அவர் எழுதத் தொடங்கினார் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பலவற்றை நிகழ்த்தினார்.

இவரின் திறமை இவரை தனித்து அடையாளப் படுத்தி பல கைதட்டளையும் விருதுகளையும் கொண்டுவந்து குவித்தது. இது இவருக்கு நடிப்பு ஆர்வத்தைத் தூண்டியது. பின்னர், அவர் ஒரு அமெச்சூர் நாடகக் குழுவில் சேர்ந்தார், அங்கு அவர் ஐந்து ஆண்டுகள் நன்கு பயிற்சிப் பெற்றார்.

இவரின் திறமை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் கவனத்தை ஈர்த்தது. எனவே அவர் இவரை உதவியாளராக அழைத்துக் கொண்டார்.

1986 – 87 களுக்குப் பிறகு, இவர்தம் சொந்த முயற்சியில் சிறு சிறு விளம்பரப் படங்களை எடுத்து திரை இயக்குநரானார்.

1993 இல் வெளியான ஜென்டில்மேன், என்ற திரைப்படம் இயக்குனர் ஷங்கர் என்ற ஜாம்பவானை தமிழ்த் திரையுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

தொடர்ந்து வெளி வந்த காதலன், இந்தியன், ஜீன்ஸ், அந்நியன், முதல்வன், சிவாஜி, எந்திரன், நண்பன்… என இவர் எடுத்த பல திரைப்படங்கள் வணிகரீதியாக மாபெரும் வெற்றிபெற்றன.

தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’, ராம்சரண் நடிப்பில் ஒரு படம் மற்றும் ரன்வீர் நடிப்பில் ‘அந்நியன்’ பட ஹிந்தி ரீமேக் எனத் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை இயக்கி வருகிறார்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளையதளபதி விஜய் என இன்றைய திரை உலகின் சூப்பர்ஸ்டார்களை கொண்டு வெற்றிமேல் வெற்றி சூடியவர்.

அவரது படங்கள் பிலிம்பேர் விருதுகள், மாநில விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் என அனைத்துத் தரப்புகளிலும் விருதுகளை வென்றுள்ளன.

இன்றைய இளைய தலைமுறையினருக்கும் நாளைய படைப்பாளர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கிவரும் தமிழ் சினிமாவின் பிரமாண்டப் பெருமிதம் எப்போதும் தமது இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி பறக்க நினைக்கும் கலைஞன் தயாரிப்பாளராகயும் பரிமாணங்களைப் பெற்ற இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறது.

சமீபத்தில் நடிகர் சிலம்பரசனுக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக ஐசரி கணேசன் டாக்டர் பட்டம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு

Vels university will confer honorary doctorate to director shankar

மீண்டும் எழுந்த விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’.; உதயநிதி காரணம்.?

மீண்டும் எழுந்த விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’.; உதயநிதி காரணம்.?

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு படம் அறிவிக்கப்பட்ட போதே பரபரப்பாக பேசப்பட்ட படம் என்றால் அது துருவ நட்சத்திரம் தான்.

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் சீயான் விக்ரம் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உருவானது.

இதில் நாயகிகளாக ரீத்து வர்மா & ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர்.

இவர்களுடன் முக்கிய வேடங்களில் ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்தியாவிலும்வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியது.

ஆனால் திடீரென சில பிரச்சனைகளால் இதன் சூட்டிங் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இன்னும் 2 வாரங்களே படப்பிடிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நடிகர் விக்ரம் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் இருவரும் சந்தித்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த பிரச்சனைக்கு நடிகர் உதயநிதி தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அவர் கொடுத்த உற்சாகத்தின் பேரிலும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை அவர் வாங்க முன்வந்துள்ளது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

துருவ நட்சத்திரம்

Udhayani Stalin behind Dhruva Natchathiram’s revival?

பார்த்திபன் பாணியிலேயே பாராட்ட தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின்

பார்த்திபன் பாணியிலேயே பாராட்ட தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின்

நேற்று… 01.08.2022: லீ மேஜிக் லேண்டர்ன்
நுங்கம்பாக்கம். மாலை 6 மணி அளவில் ,
மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்கள், இயக்குனர் _ நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ திரைப்படத்தை கண்டுகளித்தார்.

திரைப்படத்தைப் பார்த்ததும் ,
முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்கள்
பார்த்திபனின் இந்த அசாத்தியமான சாதனை முயற்சியை வெகுவாகப் பாராட்டி,
“இரவின் நிழல் திரைப்படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில்
அற்புதம் !” என்று பாராட்டி , பார்த்திபனையும் படக்குழுவினர் யாவரையும் வாழ்த்தினார்.

ஒத்த செருப்புக்கு பிறகு ஒத்த ஷார்ட் படம் இரவின் நிழல் என பார்த்திபன் பாணியிலேயே முதல்வர் பாராட்ட தெரிவித்தார். முதல்வரை வரவேற்க பார்த்திபன் தன் வித்தியாசமான சிந்தனையில் வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முதல்வருக்கு இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் ‘நேற்றைய அரசியல் வரலாறு”
எனும் முதல்வரின் சாதனைப் புத்தகத்தை வடிவமைத்து முதல்வரிடம்
வழங்க, அதை ரசித்து பெற்றுக் கொண்டார்.

இரவின் நிழல் திரைப்படம் வெற்றிகரமாக 4 வது வாரத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை இரவின் நிழல் 7 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் தமிழகம் முழுவதிலுமுள்ள
திரையரங்குகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன்…

இப்படிப்பட்ட அசாத்தியமான உழைப்பிற்கு ரசிகர்கள் இப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன்
இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், முதல்வரின் பாராட்டு , தனக்கு மிகுந்த தெம்பளிப்பதாக கூறி நன்றி தெரிவித்தார்.

பார்த்திபன்

MK Stalin expressed his appreciation in the Parthiban style for Iravin Nizhal

தன் தந்தை ‘விஜய்’ தொழிலதிபராகிய வாழ்க்கையை படமாக்கிய மகன் ‘ஆனந்த்’

தன் தந்தை ‘விஜய்’ தொழிலதிபராகிய வாழ்க்கையை படமாக்கிய மகன் ‘ஆனந்த்’

இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது.

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீஸரை படக்குழுவினர் இன்று {ஆகஸ்ட் 2} காலை 10.05க்கு வெளியிட்டனர்.

டாக்டர்.ஆனந்த் சங்கேஷ்வர், புகழ்பெற்ற VRL குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் விளம்பரதாரர் லாஜிஸ்டிக்ஸ், மீடியா மற்றும் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர், இப்போது “விஆர்எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்”. என்கிற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் ‘விஜயானந்த்’.

இது குறித்துப் பேசிய அவர்….

“எங்கள் தயாரிப்பு நிறுவனம் ’விஜயானந்த்’ என்ற முதல் திரைப்பட முயற்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது – இது ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படம் ஆகும்.

என் தந்தையும் மரியாதைக்குரிய பிரபல தொழில் அதிபருமான விஜய் சங்கேஷ்வர். 1976 இல் ஒரு சிங்கிள் டிரக் மூலம் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியவர்.

இன்று தேசம் முழுக்க அறியப்பட்ட பிரபல தொழிலதிபர். சிறிய அளவில் தொடங்கி வளர்ந்த அவரது கதையில், அவரது வளர்ச்சிப் பாதையில் ஒரு வாரிசாக ஆனந்த் சங்கேஷ்வராகிய நானும் இடம் பெறுகிறேன் என்பதில் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் இப்படத்தை தமிழிலும் வெளியிடுவது உள்ளபடியே பெருமிதமாக உணர்கிறேன். ஒரு தன் வரலாற்றுப்படம் மற்ற மொழிகளில் டப் ஆகி வெளிவருவது என்பது இதுவே முதல்முறை ஆகும். அந்தப் பெருமையை எங்கள் விஜயானந்த்’ தட்டிச்செல்வதில் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி”என்கிறார்.

இதற்கு முன் ’டிரங்க்’ என்ற ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய ரிஷிகா சர்மா இப்படத்தை இயக்கியுள்ளார்.

“ட்ரங்க்” படத்தின் நாயகன் நிஹால், விஜய் சங்கரேஷ்வராக நடிக்கிறார். மற்றும் அனந்த் நாக், வினயா பிரசாத், வி ரவிச்சந்திரன், பிரகாஷ் பெலவாடி, அனிஷ் குருவில்லா,சிரி பிரஹலாத் மற்றும் பரத் போபண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர் (பெங்களூர் டேஸ், உஸ்தாத் ஹோட்டல், கீதா கோவிந்தம், மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்) இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
வசனம் ரகு நிடுவள்ளி .
ஸ்டண்ட் -ரவிவர்மா.
ஒளிப்பதிவு- கீர்தன் பூஜாரி,
நடனம் -இம்ரான் சர்தாரியா
எடிட்டிங்- ஹேமந்த்.
ஒப்பனை-பிரகேஷ் கோகக்
மக்கள் தொடர்பு-யுவராஜ்.


ஆனந்த்

Son ‘Anand’ filmed the life of his father ‘Vijay’ as a businessman

More Articles
Follows