தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வுக்காக மனோ பாலாவை இயக்கிய கணேஷ் பாபு

mano bala ganesh babuநமது தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப் படங்களையும் எடுத்து வருகிறது.

அந்த வரிசையில் கட்டில் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு சில கொரோனா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது. கொரானா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்க வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு நன்றி. தொலைக்காட்சி மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்து கொண்டிருக்கும் இப்படிப்பட்ட விழிப்புணர்வு விளம்பரங்களை இயக்குவதில் பெருமைப்படுகிறேன்.

நடிகர் மனோபாலா அவர்களை வைத்து நான் இயக்கிய விளம்பரப் படம் தற்போது பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு நமது தமிழகத்தின் கொரானா விழிப்புணர்வை உலகம் முழுக்க கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது.

மேலும் திரைப்பிரபலங்களை வைத்தும் சில அரசு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறேன். விழிப்புணர்வை சீரியசாக மட்டுமல்ல நகைச்சுவையாகவும் சொல்ல முடியும் என்பதை நான் இந்த படங்களை இயக்கும்போது செழியன் குமாரசாமி அவர்கள் மூலமாக கற்றுக் கொண்டேன் என்றார் கட்டில் திரைப்பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு

Overall Rating : Not available

Latest Post