ரோஜா மாளிகை-க்காக சினிமாவிலும் இணையும் தேவதர்ஷினி-மதுரை முத்து

ரோஜா மாளிகை-க்காக சினிமாவிலும் இணையும் தேவதர்ஷினி-மதுரை முத்து

Madurai Muthu and Devadarshini teams up in Roja Maaligai movieமகாகவி திரைக்களஞ்சியம் வெர்லிங்டன் பாரதியார் பெருமையுடன் வழங்க, தளபதி ஈஸ்வரன் நல்லாசியுடன் பர்ஸ்ட் லுக் மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ரோஜா மாளிகை“.

அமரன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக புதுமுகம் ஊர்வசி வத்ராஜ் அறிமுகமாகிறார்.

மற்றும் நிழல்கள் ரவி, ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, மதுரை முத்து, பாண்டு, கராத்தே ராஜா, கொட்டாச்சி, ரேஷ்மா சுகி நாயக்கர், தேவிஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – மகிபாலன் / இசை – லியோ / எடிட்டிங் – கார்த்திக் பாலாஜி
நடனம் – கிரண் / பாடல்கள் – சுந்தர், நாகி பிரசாத்
கலை – பிரின்ஸ் / இணை தயாரிப்பு – E.பிரேம்குமார்
தயாரிப்பு – கெளதம்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கெளதம்.

இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கியதுடன் பல படங்களை விநியோகம் செய்துள்ளார். அத்துடன் கார்த்திக் – கௌசல்யா நடித்த முதலாம் சந்திப்பில் என்ற படத்தையும் தயாரித்து உள்ளார்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..

இது காமெடி கலந்த ஹாரர் படம். ஐம்பது நாட்கள் முழுக்க முழுக்க ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துள்ளது.

அமரன் – ஊர்வசி வத்ராஜ் இருவரும் ஐடி துறையில் ஒன்றாக வேலை செய்கிறார்கள். இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்கிறார்கள்.

திருமணம் நடந்த பிறகு வெளிநாட்டிற்குப் போய் செட்டிலாக ஏற்பாடு நடக்கிறது. திருமண பரிசாக ஊர்வசியின் தாத்தா ஊட்டியில் மிகப்பெரிய மாளிகையை எஸ்டேட்டுடன் பரிசளிக்கிறார்.

அங்கே போய் தங்கும் அந்த இளம் காதலர்கள் சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள் தான் படத்தின் திரைக்கதை.

ஜாலியான அதே நேரம் பரபரப்பான திரைக்கதை மூலம் ரோஜா மாளிகை எல்லோராலும் ரசிக்கும் படமாக உருவாகி உள்ளது. ஆடுகளம் நரேன் சர்ச் பாதராக வேடமேற்று அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றார் இயக்குனர் கெளதம்.

முதல் முறையாக தேவதர்ஷினி – மதுரை முத்து இணைந்து காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.

இவர்கள் டிவி ஷோக்களில் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

படம் வருகிற ஜூலை 6 ம் தேதி வெளியாகிறது.

Madurai Muthu and Devadarshini teams up in Roja Maaligai movie

Breaking ஜெயம்ரவி நடிக்கும் *அடங்க மறு* பர்ஸ்ட் லுக் வெளியானது

Breaking ஜெயம்ரவி நடிக்கும் *அடங்க மறு* பர்ஸ்ட் லுக் வெளியானது

Jayam Ravis next Adanga maru first look releasedஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் படம் நேற்று முன் ஜீன் 22ஆம் தேதி வெளியானது.

இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி மற்றொரு படமான அடங்க மறு படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று சற்றுமுன் வெளியானது.

நாயகியாக ராஷி கண்ணா நடிக்க, இப்படத்தை கார்த்திக் தங்கவேல் என்பவர் இயக்குகிறார்.

சத்யா என் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

ஆனந்த் ஜாய் மற்றும் சுஜாதா விஜயக்குமார் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Jayam Ravis next Adanga maru first look released

கமலின் *நம்மவர்* படைக்காக சினேகன் எழுதிய பிரச்சாரப் பாடல்

கமலின் *நம்மவர்* படைக்காக சினேகன் எழுதிய பிரச்சாரப் பாடல்

Lyricist Snehan wrote songs for Kamalhaasans political partyசினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் சிநேகன்.

இவர் ’உயர்திரு 420’ என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

அதன்பின்னர் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கமலுடன் நெருக்கமானார்.

அதிமுக ஆதரவாளராக வலம் வந்த சினேகன், கமலின் நட்பு கிடைக்கவே தற்போது,‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டார்.

இந்நிலையில், கமல்ஹாசனின் ’மக்கள் நீதி மய்யம்’ கட்சிக்காக ‘இது நம்மவர் படை’ என்கிற பெயரில் பிரச்சாரப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

இதற்கான வெளியீட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பாடல்களை வெளியிடுகிறார்.

சில மாதங்களுக்கு முன் கட்சி அறிவிப்பு வந்தாலும் நேற்றுதான் இந்த கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Lyricist Snehan wrote songs for Kamalhaasans political party

ஆந்திராவில் பிரபலமான கோயிலில் சூர்யா-கார்த்தி தரிசனம்

ஆந்திராவில் பிரபலமான கோயிலில் சூர்யா-கார்த்தி தரிசனம்

Suriya and Karthi visited Simhachalam temple and offered special prayersசூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்து வரும் படம் `கடைக்குட்டி சிங்கம்’.

பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தில் நாயகியாக சாயிஷா நடிக்க, சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பிரியா பவானிசங்கர், பானுபிரியா, மவுனிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படித்த இளைஞர்களும் விவசாயம் முன் வரவேண்டும் என்பதை வலியுறுத்தி இப்படம் உருவாகி வருகிறது.

தெலுங்கில் இப்படத்திற்கு சின்ன பாபு என பெயரிட்டு இதன் இசை வெளியீட்டு விழா இன்று ஆந்திராவில் நடத்தவுள்ளனர்.

இதற்காக சூர்யா, கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ், சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் அங்கு சென்றுள்ளனர்.

அப்போது ஆந்திராவில் பிரபலமான சிமாசலம் வராக லட்சுமி நரசிம்ம கோவிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளனர்.

அந்த படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Suriya and Karthi visited Simhachalam temple and offered special prayers

suriya karthi at andhra temple

கல்யாணம் எப்போ?; சொந்தமாக படம் தயாரிப்பது ஏன்.? அதர்வா பேட்டி

கல்யாணம் எப்போ?; சொந்தமாக படம் தயாரிப்பது ஏன்.? அதர்வா பேட்டி

Atharvaa speech at Semma Botha Aagatha press meet regarding his marriageநடிகர் அதர்வா தயாரித்து நடித்துள்ள புதிய படம் ‘செம போத ஆகாதே’. மிஸ்டி கதாநாயகியாக வருகிறார்.

மனோபாலா, கருணாகரன், யோகிபாபு, ஜான்விஜய், கும்கி அஸ்வின் ஆகியோரும் நடித்துள்ளனர். பானா காத்தாடியை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் ஜீன் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அதர்வா கூறியதாவது:-

“நிறைய படவிழாக்களில் தயாரிப்பாளர்கள் தங்கள் கஷ்டங்களை சொல்வதை கேட்டு இருக்கிறேன்.

அப்போதெல்லாம் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று நான் நினைத்தது உண்டு. ஆனால் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்போது அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.

படத்தை எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்த படத்தை ஏற்கனவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அது முடியவில்லை.

நீண்ட நாட்களாக சீரியஸ் படங்களில் நடித்தேன். பத்ரி வெங்கடேஷ் ஒரு ஜாலியான படமாக இதை எடுத்துள்ளார். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

இந்த படம் மதுபழக்கத்தை ஊக்குவிக்கவில்லை.

போதையில் ஒருவன் முட்டாள் தனமான வேலை செய்கிறான். அதனால் வரும் பிரச்சினைகள் என்ன என்பதே கதை.

எனக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். எனக்கு இன்னும் கல்யாண வயது வரவில்லை.”

இவ்வாறு அதர்வா பேசினார்.

Atharvaa speech at Semma Botha Aagatha press meet regarding his marriage

sba press meet

மாரி-2 சூட்டிங்கில் வில்லனுடன் மோதிய போது தனுஷுக்கு காயம்

மாரி-2 சூட்டிங்கில் வில்லனுடன் மோதிய போது தனுஷுக்கு காயம்

Dhanush got injured in Maari 2 shootingபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்து வரும் படம் ‘மாரி 2’.

இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இதில் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். இவருக்கும் தனுஷுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது.

அப்போது, எதிர்பாராத விதமாக வலது காலிலும், இடது கையிலும் தனுஷுக்கு அடிபட்டு விட்டது.

உடனே படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்தார்கள்.

இதனையடுத்து இந்த செய்தி பரவ, யாரும் கவலை கொள்ள வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன் என தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Dhanush got injured in Maari 2 shooting

More Articles
Follows