தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘குலேபகவாலி’, ‘ஜாக்பாட்’, ‘ஷூ’ ஆகிய காமெடி படங்களை இயக்கியவர் கல்யாண்.
கல்யாண் இயக்கிய காஜல் அகர்வால், யோகி பாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘கோஸ்டி’.
இப்படத்தில் காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆடுகளம் நரேன், சந்தான பாரதி, சுரேஷ் மேனன், தங்கதுரை, மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சத்யன், ஸ்ரீமன், சுப்பு பஞ்சு, மனோபாலா, அஜய் ரத்தினம் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், காஜல் அகர்வால் நடித்துள்ள ‘கோஸ்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஜல் அகர்வால் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
Kajal Aggarwal starrer ‘Ghosty’