தமிழ்ப்படம்2-வில் மீண்டும் இணைந்த மாதவன்-விஜய் சேதுபதி

தமிழ்ப்படம்2-வில் மீண்டும் இணைந்த மாதவன்-விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madhavan and vijay sethupathiமிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தமிழ்ப்படம் 2’.

இவர்களுடன் திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்துள்ளார்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் இசையமைத்துள்ளார். வருகிற வியாழக்கிழமை(ஜூலை 12) இந்தப் படம் ரிலீஸாகவுள்ளது.

தமிழ் சினிமாவையும் டாப் ஹீரோக்களையும் கலாய்த்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், மாதவன், விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, சித்தார்த், பிரேம்ஜி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்களாம்.

விக்ரம் வேதா படத்திற்கு பிறகு இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டி. ராஜேந்தருடன் நமீதா இணையும் *இன்றையக் காதல் டா*

டி. ராஜேந்தருடன் நமீதா இணையும் *இன்றையக் காதல் டா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TRடி.ராஜேந்தர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘வீராசாமி’.

அவரே பாடல் எழுதி ஒளிப்பதிவு செய்து இசையமைத்து தயாரித்து இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

அதன்பிறகு படம் எதையும் இயக்காத டி.ஆர்., கடந்த ஆண்டு வெளியான விஜய்சேதுபதியின் ‘கவண்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ஒரு படத்தை இயக்கி, நடிக்க இருக்கிறார் டி.ராஜேந்தர்.

லேடி டானாக நமிதா இந்தப் படத்தில் நடிக்கிறார்.

ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாப் என ஏகப்பட்ட பேர் நடிக்கும் இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் டி.ஆரும் நடிக்கிறார்.

வழக்கம்போல கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தையும் டி.ராஜேந்தரே செய்கிறார்.

சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.

நவீன்-ஆனந்தி இணையும் *அலாவுதீனின் அற்புத கேமரா*

நவீன்-ஆனந்தி இணையும் *அலாவுதீனின் அற்புத கேமரா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Moodar Koodam Naveens next is Alaudhinin Arputha Camera‘மூடர் கூடம்’ படத்தை இயக்கி நடித்தவர் நவீன்.

மியூஸிக்கல் பிளாக் காமெடிப் படமாக வெளியான இது, பெரும்பாலானவர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

‘மூடர் கூடம்’ படத்துக்குப் பிறகு ‘கொளஞ்சி’ என்ற படத்தைத் தயாரித்தார். தனராம் சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சமுத்திரக்கனி – சங்கவி இருவரும் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தயாராகி பல நாட்கள் ஆனாலும், இன்னும் வெளியாகவில்லை.

இவர் அடுத்து ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார். ‘கயல்’ ஆனந்தி நாயகியாக நடித்து வருகிறார்.

முழுவதும் வெளிநாட்டில் படமான இந்தப் படத்தில், பிக் பாக்கெட் அடிப்பவராக நடித்துள்ளார் ஆனந்தி.

கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.

படத்தலைப்பு வைக்காமல் இதுவரை சூட்டிங் நடைபெற்ற நிலையில் தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதன் டைட்டில் லுக்கை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை விரைவில் வெளியிட இருக்கிறார்களாம்.

இந்தப் படத்துக்குப் பிறகு, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார்.

Moodar Koodam Naveens next is Alaudhinin Arputha Camera

Moodar Koodam Naveens next is Alaudhinin Arputha Camera

ரஜினி-கமல்-விஜய்-சூர்யா பற்றி நடிகர் கார்த்தியின் சூப்பர் பதில்கள்

ரஜினி-கமல்-விஜய்-சூர்யா பற்றி நடிகர் கார்த்தியின் சூப்பர் பதில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kadaikutty Singam Karthi talks about Rajini Kamal Vijay and Suriyaநடிகர் சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம்.

பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜீலை 13ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனை முன்னிட்டு தனது ரசிகர்களுடன் பேஸ்புக் பக்கத்தில் கலந்துரையாடினார் கார்த்தி.

ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் இதோ…

மீண்டும் போலீஸ் படத்தில் நடிப்பீர்களா?
நல்ல கதை அமைந்தால் மீண்டும் போலீசாக நடிப்பேன்.

சிறந்த நடிகர்?

அண்ணா சூர்யாவும், அண்ணி ஜோதிகாவும் தான் எனக்கு சிறந்த நடிகர்கள்.

நேரடி தெலுங்கு படம் எப்போது?
கதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் விரைவில் நடிப்பேன்.

சூர்யாவுடன் எப்போது நடிப்பீர்கள்?

நானும் அண்ணாவும் சேர்ந்து நடித்தால் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பார்கள்.
பாண்டிராஜ் கூட கதை உருவாக்குகிறேன் என சொல்லியிருக்கிறார். நல்ல கதை அமைந்தால் நிச்சயம் நடிப்போம்.

விஜய் பற்றி?
தலைக்கனம் இல்லாத நல்ல மனிதர் அவர். பருத்தி வீரன் படத்தை பார்த்து விஜய் என்னை பாராட்டியது மறக்க முடியாது.

பிடித்த நடிகர்?
நிறைய பேர் இருக்கிறார்கள். ரஜினி, கமல் சாரை பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம். அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

Kadaikutty Singam Karthi talks about Rajini Kamal Vijay and Suriya

*சண்டக்கோழி2* ரிலீசுக்கு ஆயுத பூஜையை குறி வைத்த விஷால்

*சண்டக்கோழி2* ரிலீசுக்கு ஆயுத பூஜையை குறி வைத்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal confirmed his Sandakozhi2 release dateலிங்குசாமி, விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சண்டக்கோழி 2’.

விஷால் தயாரித்து நடித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கில் வெளியிடவுள்ளனர்.

இதன் சூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18ஆம் தேதி வெளியிட இருப்பதாக விஷால் அறிவித்துள்ளார்.

இப்படத்தின் சிங்கிள் டிராக்கை விரைவில் வெளியிடவுள்ளனர்.

Vishal confirmed his Sandakozhi2 release date

sandakozhi 2

கமலை ஃபாலோ செய்து *அண்ணனுக்கு ஜே* போட வரும் தினேஷ்

கமலை ஃபாலோ செய்து *அண்ணனுக்கு ஜே* போட வரும் தினேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dinesh Mahima Nambiyar starring Annanukku Jai release dateராஜ்குமார் இயக்கத்தில் அரசியல்வாதியாக தினேஷ் நடித்துள்ள படம் `அண்ணனுக்கு ஜே’.

தினேஷ் ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்க, ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்துது வரும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர்.

கமல் தயாரித்து நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம்2 படம் இதற்கு முந்தைய வாரம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

Dinesh Mahima Nambiyar starring Annanukku Jai release date

More Articles
Follows