‘ஜெயிலர்’ படத்தில் கடத்தப்படும் விக்ரஹம் போலதான் ரஜினி.. – சூப்பர் சுபு

‘ஜெயிலர்’ படத்தில் கடத்தப்படும் விக்ரஹம் போலதான் ரஜினி.. – சூப்பர் சுபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் உலக அளவில் பெரும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. ரஜினிகாந்த் தற்போது இமயமலையில் ஆன்மீகம் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயிலர் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் நடிகர் ஹர்ஷத் பேசும்போது…

“இயக்குனர் நெல்சனுடன் 12 வருடமாக பழகி வருகிறேன். இவ்வளவு குறுகிய காலத்திலேயே அவர் இந்த பெரிய இடத்திற்கு வந்து விட்டாரே என பலரும் நினைக்கிறார்கள் ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு அவர் பட்ட கஷ்டங்களை நான் உடனிருந்து பார்த்திருக்கிறேன்.

ஜெயிலர் படத்தின் கடைசி ஐந்து நாள் படப்பிடிப்பின்போது கடுமையான காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தினார் நெல்சன்.

சினிமாவிற்கு வரும்போது நானும் ரஜினியாக வேண்டும் என்கிற எண்ணத்துடன் தான் வந்தேன். அவரை நேரில் பார்ப்போமா என்று நினைத்த எனக்கு இந்த படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் கிடைத்தது.

என்னுடைய நடிப்பை பாராட்டி அவர் கை கொடுத்தபோது உறைந்து போய் அந்த உணர்வில் இருந்து வெளிவருவதற்கே எனக்கு ஒரு மாதம் ஆனது” என்று கூறினார்.

பாடலாசிரியர் சூப்பர் சுபு பேசும்போது…

“இந்த பாடல் எழுதிய சமயத்தில் இயக்குனர் நெல்சனுக்கு நான் யார் என்றே தெரியாது. இசையமைப்பாளர் அனிருத் மூலமாக தான் இந்த வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் கடத்தப்படும் விக்ரஹம் போல தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும். அவரை எந்த இடத்தில் வைத்து கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் விரும்புவார்களோ அதற்கு ஏற்ற மாதிரி இந்த பாடலை எழுத வேண்டும் என விரும்பினேன். இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்

நடிகர் ஜாபர் சாதிக் கூறும்போது, “இயக்குனர் நெல்சனுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் இணைந்து பணியாற்ற முயற்சித்தபோது சில காரணங்களால் அது தள்ளிப்போய் தற்போது ஜெயிலர் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்து விட்டது. இதுவரை சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் இந்த ஜெயிலர் படத்தில் படம் முழுவதும் வரும் விதமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த இயக்குனர் நெல்சனுக்கு நன்றி” என்று கூறினார்.

Lyricist Super Subu sema speech at Jailer success meet

ரஜினியுடன் ஃபர்ஸ்ட்.. மோகன்லாலுடன் செகண்ட்.; கேரளாவே அதிருது – மிர்னா

ரஜினியுடன் ஃபர்ஸ்ட்.. மோகன்லாலுடன் செகண்ட்.; கேரளாவே அதிருது – மிர்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் உலக அளவில் பெரும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. ரஜினிகாந்த் தற்போது இமயமலையில் ஆன்மீகம் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயிலர் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் நடிகர் சுனில் பேசும்போது..

“வாழ்நாளில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பாக இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக தலைவருக்கும் இயக்குனர் நெல்சனுக்கும் சன் பிக்சர்ஸுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் என்னை ரொம்பவே அழகாக காட்டியதற்கு அவருக்கும் நன்றி” என்று கூறினார்.

நடிகை மிர்னா பேசும்போது…

“என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை அளித்த இயக்குனர் நெல்சனுக்கு நன்றி. இந்த படம் வெளியானதில் இருந்து மக்களிடம் எனக்கு மிகப்பெரிய அன்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பு படத்தொகுப்பாளர் நிர்மலிடம் பேசும்போது கூட, இந்த படம் வெளியான பிறகு உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்றார். அதுதான் இப்போது நடக்கிறது.

ஒரு ஆர்டிஸ்ட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பது அனைவருக்கும் கனவாக இருக்கும். எனக்கு அது கொஞ்சம் சீக்கிரமே நிறைவேறி விட்டது. அவருடன் 35 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் லாலேட்டனுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது.

நேற்று இந்த படத்தை கேரளாவில் பார்த்துவிட்டு தான் வருகிறேன். சுனில் சாருக்கு அங்கே அவ்வளவு வரவேற்பு இருக்கிறது. அவர் அங்கே சென்றால் தூக்கி கொண்டாடி விடுவார்கள். இந்த படத்தை கேரளாவில் பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள். என் வாழ்க்கையில் ஜெயிலர் மிக முக்கியமான படம்” என்று கூறினார்.

Jailer got huge response at Kerala says Mirna

ரஜினி ரசிகர்களுக்காகவே ‘ஜெய்லர்’ ஃபைட் சீன்களை டிசைன் செய்தோம்.. – ஸ்டன்ட் சிவா

ரஜினி ரசிகர்களுக்காகவே ‘ஜெய்லர்’ ஃபைட் சீன்களை டிசைன் செய்தோம்.. – ஸ்டன்ட் சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் உலக அளவில் பெரும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. ரஜினிகாந்த் தற்போது இமயமலையில் ஆன்மீகம் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயிலர் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சிவா பேசும்போது…

“சிறுவயதில் கர்ஜனை படத்தில் முதன்முதலாக ரஜினி சாரை பார்த்தேன். அதன் பிறகு அவருடன் எஜமான், மன்னன், பாண்டியன், முத்து ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதுவரை 300 படங்களுக்கு மேல்
நான் பணியாற்றி உள்ளேன்.

இந்த ஜெயிலர் படத்தின் மூலம் தான் முதன்முறையாக ரஜினி சாரின் படத்தில் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி உள்ளேன்.

ஒவ்வொரு சண்டைக்காட்சியும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும்படியாக மாஸாக இருக்கும் விதமாக நெல்சனும் நானும் இணைந்து இதை உருவாக்கி உள்ளோம். இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் நல்ல பெயர் பெற்றுள்ளது என்றால் அதற்கு காரணம் இயக்குனர் நெல்சன் தான். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் என்னை விட தீவிர ரஜினி ரசிகர். அதனால் சூப்பர் ஸ்டாரின் காட்சிகளை பார்த்து பார்த்து செதுக்கினார்” என்று கூறினார்.

We choreographed fights for Rajini fans says Stunt Siva

ரஜினியுடன் நடிப்பது கனவு.. ஜெயிலர் மைல்கல்.. கடைசியில் எமோஷன்.. – வசந்த் ரவி

ரஜினியுடன் நடிப்பது கனவு.. ஜெயிலர் மைல்கல்.. கடைசியில் எமோஷன்.. – வசந்த் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது.

இந்த படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் ஒரு படமாக இருப்பதாக படம் பார்த்த அனைவருக்கும் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த படத்தின் வெற்றிநடை தொடர்கிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்ததற்காக பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஜெயிலர் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் நடிகர் வசந்த் ரவி பேசும்போது…

‘இயக்குனர் நெல்சன் என்னை இந்த படத்திற்காக அழைத்தபோது, இது படத்தின் மிக முக்கியமான மைய கதாபாத்திரம். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

இது உங்களுக்கு நிச்சயமாக நல்ல பெயர் கொடுக்கும். அதைத் தாண்டி உங்களை அடுத்த படிக்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.

அதேபோலத்தான் இன்று அவர் சொன்ன வார்த்தை நிறைவேறி உள்ளது. அனிருத் இசையில் ஒரு பாடலிலாவது இடம்பெற்று விட வேண்டும் என எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும்.

ஆனால் அவரது இசையில் ரஜினி சாருடனேயே இணைந்து ரத்தமாரே பாடலில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னுடைய முந்தைய படங்களுக்கு உங்களிடம் இருந்து ஆதரவு கிடைத்தது. அதையும் தாண்டி ஜெயிலர் என்னுடைய திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்துவிட்டது.

ரஜினி சாருடன் இணைந்து ஒரு காட்சியிலாவது நடித்து விட மாட்டோமா என ஒவ்வொரு நடிகருக்கும் கனவு இருக்கும். அது எனக்கு நிறைவேறி உள்ளது.

நான் சினிமாவில் நடிக்க விரும்பியபோது முதன் முறையாக சென்று சந்தித்தது ரஜினி சாரைத்தான். அப்போது எங்கள் இருவருக்குமே தெரியாது இருவரும் இணைந்து நடிக்கிறோம் என்று.. அதன்பிறகு தரமணி, ராக்கி என எனது படங்களை தொடர்ந்து பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்.

ஜெயிலர் படம் முடியும் கடைசி நாளன்று எனக்கு ரொம்பவே எமோஷனலாக இருந்தது. ரஜினி சாரிடம் சென்று இன்று தான் இந்த படத்தில் எனக்கு கடைசி நாள்.. உங்களை நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்.. மீண்டும் உங்களுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். அவரும் அதையேதான் என்னிடம் கூறினார்.

இந்த படம் இவ்வளவு மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு நெல்சன் சார் மிக முக்கிய காரணம். அவர் படத்தின் துவக்கத்திலிருந்து இந்த படத்திற்காக கொடுத்த உழைப்பை நான் பார்த்திருக்கிறேன். இன்று அதற்கான ரிசல்ட் நினைத்ததை விட தாண்டி கிடைத்துள்ளது. எப்போதும் என் வாழ்க்கையில், என் இதயத்தில் அஸ்வின் முத்துவேல் பாண்டியன் என்கிற இந்த கதாபாத்திரம் நிரந்தரமாக இருக்கும்” என்று கூறினார்.

Vasanthravi emotional speech about Rajini and Jailer

ரஜினியை போல சிவகார்த்திகேயனுக்கும் காக்கி டிரெஸ் போடும் முருகதாஸ்

ரஜினியை போல சிவகார்த்திகேயனுக்கும் காக்கி டிரெஸ் போடும் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘தர்பார்’. இந்தப் படத்திற்குப் பிறகு அதன் நாயகன் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ & ‘ஜெயிலர்’ ஆகிய 2 படங்களை கொடுத்து விட்டார்.

ஆனால் முருகதாஸ் இயக்கத்தில் எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை.

இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள ஒரு புதிய படத்தை இயக்க தயாராகி விட்டார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நாயகியாக ‘சீதாராமம்’ புகழ் மிருணாள் தாக்கூர் நடிப்பார் என நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு போலீஸ் வேடம் என தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கனவே ‘காக்கி சட்டை’ படத்தில் சிவகார்த்திகேயன் போலீசராக நடித்திருந்தார். அதுபோல முருகதாஸ் கடைசியாக இயக்கிய ‘தர்பார்’ படத்தில் ரஜினி போலீசாக நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Sivakarthikeyan and Murugadoss movie

சேரன் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ விழாவில் சரத் – அமீர் – மாரி அசத்தல் பேச்சு

சேரன் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ விழாவில் சரத் – அமீர் – மாரி அசத்தல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.

முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, ‘மிக மிக அவசரம்’ புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொண்டுள்ளார். ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக‌ பிரபலங்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

படத்தின் இயக்குந‌ர் இசக்கி கார்வண்ணன் பேசியதாவது…

சாதி சார்ந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இப்படத்தில் காட்டுகிறோம். நான் சந்தித்த அனுபவங்களை படமாக எடுத்திருக்கிறேன். பிறக்கும் போது அனைத்து குழந்தைகளும் சமமே. வளர்ந்த பிறகு தான் சாதி என்ற ஏற்றத்தாழ்வு வருகிறது. சாதியம், குலத்தொழில் குறித்து இப்படத்தில் கூறியுள்ளோம்.

பாடலாசிரியர் விவேகா பேசியதாவது…

அனைவரது வாழ்க்கையிலும் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை இசை கூடவே வரும். இப்படத்தில் ஒப்பாரி பாடல் ஒன்றை நான் எழுதியுள்ளேன். சாம் சி.எஸ். உணர்ச்சிப்பூர்வமாக இசையமைத்துள்ளார். இசக்கி கார்வண்ண‌ன் திறம்பட இயக்கியுள்ளார். இவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழ்க்குடிமகன்

நடிகை தீபிக்ஷா பேசியதாவது…

இப்படம் சாதி சமந்தப்பட்ட கதை, இந்தக் கதை சமத்துவத்தையும் பேசும், மதத்தையும் பேசும். சேரன் சார் மற்றும் சாம் சாரின் மிகப்பெரிய ரசிகை நான். இவர்களுடன் பணியாற்றிய‌து சந்தோஷம்.

நடிகர் துருவா பேசியதாவது…
மூத்த கலைஞர்களுடன் நடிப்பதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அன்புக்கும் ஆதரவுக்கும் அனைவருக்கும் நன்றி.

எழுத்தாளர் ராமசுவாமி பேசியதாவது…

இயக்குநர் இசக்கி கார்வண்ணன் முதல் முறையாக‌ கதை சொல்லும்பொழுது நான் வேறு விதமாக புரிந்து கொண்டேன். ஆனால், இந்த இயக்குந‌ர் சிறந்த எழுத்தாளர் என்பதை இவரின் படைப்பை பார்க்கும்போது அறிந்துகொண்டேன். எனக்கு இப்படத்தில் வசனங்களும் குறைவு. இப்படத்தில் நிறைய காட்சிகளில் பிண‌மாகத்தான் நடித்துள்ளேன்.

நடிகரும் இயக்குநருமான ரவிமரியா பேசியதாவது…

அனைத்து படங்களையும் கலைப் படமாகவும் சமூகப் படமாகவும் உருவாக்கமுடியும். ‘தமிழ்க்குடிமகன்’ நல்ல படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இது தமிழ் மண்ணின் பெருமை பற்றி பேசும் படம்.

நடிகர் அருள்தாஸ் பேசியதாவது…

இசக்கி கார்வண்ண‌ன் இப்படத்தை வெற்றிப்படமாக உருவாக்கியுள்ளதுடன், பார்வையாளர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்துவார் என்று வாழ்த்துகளை சொல்லி விடைபெறுகிறேன்.

நடிகர் பொன்வண்ணன் பேசியதாவது…

எனக்கு இசக்கி கார்வண்ண‌னை பல வருடங்களாக தெரியும். சினிமாவைப் பற்றி பேசுவோம். ஒரு நாள் தொலைபேசி மூலம் என்னை தொடர்புகொண்டு ‘ஒரு கதை இருக்கு வாங்க சொல்லணும்’ என்று கூறி இக்கதையை கூறினார்.

அதன் பிறகு இந்த திரைப்படத்தில் நடிக்க சேரன், லால் என சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்தார். இயக்குந‌ருக்கு மிக முக்கியமானது கதைக்கான நடிகர்களை தேர்ந்தெடுப்பது தான். அதற்கடுத்து இசையமைப்பாளர் முக்கியம்.

இந்த படத்தில் பாடல்கள் மிகக் குறைவு, ஆனால் பின்னணி இசை மிக முக்கியம் என்று சொல்லலாம். கதையில முதல் ஃபிரேமில் இருந்து கடைசி ஃபிரேம் வரை நம்மை எங்கேஜிங்காக‌ வைப்ப‌து மிகவும் அவசியம். அது இந்த படத்தில் முழுமையாக வொர்க் ஆகியுள்ளது என்று நான் நினைக்கிறேன். ஒரு பார்வையாளனாக, ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை நான் ரசித்து பார்த்தேன்.

தமிழ்க்குடிமகன்

நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி பேசியதாவது…

படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் ‘தமிழ்க் குடிமகன்’ என்ற தலைப்பே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தமிழக அரசியல் சூழலில் சாதி பற்றி இப்படம் பேசுகிறது. வெற்றிகரமான படமாக இது அமையும் என வாழ்த்துகிறேன்.

நடிகர் சரத்குமார் பேசியதாவது…

என் அன்பு சகோதரர் சேரன் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம். உண்மை நிலையை எடுத்து கூறும் படமாக ‘தமிழ்க்குடிமகன்’ இருக்கும். குலத்தொழில் பற்றி இதில் பேசி இருக்கிறார்கள். அந்த முறையை உடைக்கின்ற படமாக ‘தமிழ்க்குடிமகன்’ இருக்கப்போகிறது.

இப்படம் வெற்றி திரைப்படமாக அமையும் என வாழ்த்துகிறேன்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசியதாவது…

நிறைய திரைப்படங்களுக்கு நான் இசையமைத்திருக்கிறேன். ஆனால் இந்த படத்திற்கு இசையமைத்தது குறித்து மிகவும் பெருமை அடைகிறேன். நல்ல கதை என்பது வெளி உலகத்திற்கு தெரிய வேண்டும், கண்டிப்பாக இத்திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும். இயக்குந‌ர் இசக்கி கார்வண்ண‌ன் அவர்களுக்கு நன்றி.

இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் பேசியதாவது…

‘தமிழ்க்குடிமகன்’ ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும், இதில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய‌ வாழ்த்துகள். கண்டிப்பாக இப்படம் பெரிதாக பேசப்படும்.

இயக்குந‌ர் அமீர் பேசியதாவது..

இப்படம் உங்களுடைய சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கும் என்றால் அது கண்டிப்பாக சாதியை ஒழிக்க பங்காற்றும். என்றும் மனிதனாக வாழ்கிறேன் என்று கூறி விடைபெறுகிறேன்.

இயக்குந‌ர் மற்றும் இத்திரைப்படத்தின் நாயகன் சேரன் பேசியதாவது…

அனைவரும் திரையரங்குகளில் வந்து திரைப்படத்தை பார்க்க வேண்டும். புத்திசாலித்தனமான திரைப்படம் இது. சாதிகளை ஒழிக்க வேண்டும் போன்ற‌ நிறைய நல்ல விஷயங்களை இத்திரைப்படத்தில் சொல்லி இருக்கிறோம்.

தமிழ்க்குடிமகன்

Music and trailer launch of ‘Tamilkudimagan starring Cheran

More Articles
Follows