கம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்!

கம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்!

lyricist asminகம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ வழங்கப்பட்டது.

2012-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘நான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் இலங்கையை சேர்ந்த பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின். ‘நான்’ படத்தில் ஒரு பாடலாசிரியரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு விஜய் ஆண்டனி அறிவித்த சர்வதேச ரீதியான பாடலை இயற்றும் போட்டியில் கலந்துகொண்ட 20,000 போட்டியாளர்களில் முதலிடம் பெற்றவர் தான் இந்த அஸ்மின்.. அதுமட்டுமல்ல ஜிப்ரான் இசையில் வெளியான அமரகாவியம் படத்தில் இவர் எழுதிய ‘தாகம் தீர’ என்கிற பாடல் தயாரிப்பாளர் ஆர்யாவையோ இசையமைப்பாளர் ஜிப்ரானையோ நேரில் சந்திக்காமல் எழுதிய பாடலாகும். அந்த பாடலுக்காக சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான எடிசன் விருதையும் இவர் பெற்றுள்ளார்..

கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு கவியரங்கில் இவர் பாடிய மரபுக்கவிதையை பாராட்டிய கவிஞர் வைரமுத்து இவரது மரபு அறிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் பத்திரிகை துறையில் பணியாற்றிய இவர் அதன்பிறகு இலங்கையிலுள்ள வசந்தம் தொலைக்காட்சியில் இணைந்து சுமார் 10 ஆண்டுகாலம் பணியாற்றி வருகின்றார். அங்கே இவர் இயக்கிய தூவானம் என்கிற கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி மூன்று முறை இலங்கை அரசின் தேசிய விருதை பெற்றுள்ளது.

மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதா இறந்தபோது ‘வானே இடிந்ததம்மா’ என்கிற இரங்கல் பாடலையும் இவர் எழுதியுள்ளார்.

சமீபத்தில் கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் அங்கோர் தமிழ் சங்கம், பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம் இணைந்து தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மினுக்கு “சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருதினை” வழங்கியுள்ளது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடல் எழுதி வரும் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்திலுள்ள அத்தனை வட்டார வழக்கிலும் தன்னால் பாடல் எழுத முடியும் என்கிறார் நம்பிக்கையுடன்.

“இலங்கையில் இருக்கின்ற படைப்பாளிகளுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழகத்தில் இருக்கின்றவர்கள்தான் அதனால் தான் இலங்கையில் இருந்து கொண்டு இந்திய தமிழர்களின் ரசனையை உள்வாங்கி என்னால் பாடல் எழுத முடிகிறது” என்கிறார் அஸ்மின்.

திருமூர்த்தியின் குரலில் பதிவான சீறு பாடல்

திருமூர்த்தியின் குரலில் பதிவான சீறு பாடல்

seeru movie songஇசையமைப்பாளர் டி.இமான் புதிய திறமைகளை கண்டுபிடித்து இசையுலகுக்கு அறிமுகப்படுத்தி, வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் ஆர்வம் மிக்கவர். அவரது ஆச்சரியப்படத்தக்க சமீபத்திய கண்டுபிடிப்புதான் திருமூர்த்தி. ஜீவா நடிக்கும் ‘சீறு’ படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமாகும் திருமூர்த்தி, இனிய குரல் வளமும் திறமையும் ஒருங்கே அமையப் பெற்றவர். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அருமையான இசை வடிவல் உருவாகியிருக்கும் இந்தப் பாடலை பார்வதி எழுதியிருக்கிறார். இது குறித்து பார்வதி தெரிவித்ததாவது…
“பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ற பாடல்களை இதுவரை நான் எழுதியிருக்கிறேன். ஆனால் ‘சீறு’ படத்துக்காக எழுதிய பாடலை விசேடமான அனுபவம் என்றுதான் கூற வேண்டும். திறமை மிக்க அறிமுக பாடகர் திருமூர்த்தி பாடிய இந்தப் பாடலை நான் எழுதியிருப்பதை எனக்குக் கிடைத்த கெளரவமாகவே நினைக்கிறேன். ‘ஜில்லா’ படத்துக்காக இமான் இசையில் நான் எழுதிய “வெரசா போகயிலே…” பாடலுக்குப் பிறகு இப்போது மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறேன்.
பாடலுக்கான சூழலை இயக்குநர் ரத்தின சிவா என்னிடம் விவரித்துவிட்டு, சில விஷுவல் காட்சிகளையும் திரையிட்டுக் காட்டினார். அவற்றைப் பார்த்த பிறகு நிறைய பாடல் வரிகள் எனக்குத் தோன்றியது. உண்மையில் பாடலின் ட்யூனுக்குள் வார்த்தைகளை அடக்குவது என்பது கடினமான பணி என்றாலும், இமானின் அழகான ட்யூனுக்கு, ஆழமான பாடல் வரிகள் கன கச்சிதமாகப் பொருந்தி சிறப்பாக அமைந்துவிட்டது.
பாடல் வரிகளைக் கேட்டதுமே இசையமப்பாளர் இமானும், இயக்குநர் ரத்தின சிவாவும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். இவை அனைத்துக்கும் மேலாக பாடகர் திருமூர்த்தி அனுபவித்து, ரசித்து பாராட்டுக்குரிய விதத்தில் இந்தப் பாடலைப் பாடியிருப்பதுதான் பாடலின் சிறப்பம்சமே. பாடல் பதிவு முடிந்ததும், திருமூர்த்தி தனக்குப் பிடித்த வரிகள் என்று சிலவற்றைச் சொல்லி பாடிக் காட்டியபோது நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்து இமையமைப்பாளர் இமானுடன் இசைப் பயணத்தைத் தொடர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலுக்காக டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, ரத்தின சிவா இயக்கும் சீறு படத்தில் ஜீவா, ரியா சுமன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். நவ்தீப் எதிர்மறை வேடத்தில் நடிக்க, காயத்ரி கிருஷ்ணா மற்றும் சதீஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எதிர்வரும் டிசம்பர் 20ஆம் தேதி உலகெங்கும் திரைக்கும் வரும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்க, பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரபுதேவாவின் ‘தபாங்-3’ பட டான்ஸ்க்கும் எதிர்ப்பு கிளம்பிடுச்சி..

பிரபுதேவாவின் ‘தபாங்-3’ பட டான்ஸ்க்கும் எதிர்ப்பு கிளம்பிடுச்சி..

dabangg 3பொதுவாக சினிமாவில் கதைக்கும் பட காட்சிகளுக்கும் எதிர்ப்பு கிளம்பும். இந்த முறை பட நடனத்திற்கு கூட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழில் நடிகராக பிசியாக இருந்தாலும் ஹிந்தியில் சில படங்களை அவ்வப்போது இயக்கி வருகிறார் பிரபுதேவா.

தற்போது சல்மான்கானை வைத்து தபாங்-3 படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் வருகிற டிசம்பர் 20-ந்தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் இதன் டிரைலர் அண்மையில் வெளியானது.

இதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பாடலில் சாமியார்கள் வெஸ்டர்ன் நடனம் ஆடுவது போல காட்சிகள் உள்ளது.

இதற்கு மராட்டியத்தை சேர்ந்த இந்து ஜன்ஜக்ருதி சமிதி என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து தணிக்கை குழுவுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாம்.

சாதுக்கள் வெஸ்டர்ன் டான்ஸ் ஆடுவது இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாகவும் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பரில் 30 தமிழ் படங்கள் ரிலீஸ்; தாங்குமா கோலிவுட்..?

டிசம்பரில் 30 தமிழ் படங்கள் ரிலீஸ்; தாங்குமா கோலிவுட்..?

hero thambi postersடிசம்பர் மாதம் பருவ மழை தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் பரவலாக இடை விடாது மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் தமிழகம் தாங்குமா..? என ஒரு பக்கம் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் மட்டும் 30 தமிழ் படங்கள் ரிலீசாகவுள்ளது. இந்த வாரம் டிசம்பர் 6ல் 4 படங்கள் வெளியாகிறது.

அந்த படங்களின் பெயர் பட்டியல் இதோ…

டிசம்பர் 6….

பா.ரஞ்சித் தயாரித்து அட்டகத்தி தினேஷ்-.ஆனந்தி நடித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள தனுசு ராசி நேயர்களே

துரை இயக்கத்தில் சுந்தர்.சி நடித்துள்ள இருட்டு

பிகில் பட புகழ் கதிர் நடித்த ஜடா

டிசம்பர் 13…

பரத் நடித்துள்ள காளிதாஸ்

மாதவன்-அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம்.

சுசீந்திரன் இயக்கியுள்ள சாம்பியன்

ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ஆயிரம் ஜென்மங்கள்,

ஜீவாவின் சீறு,

விமலின் கன்னிராசி ஆகியவை வெளியாகவுள்ளது.

டிசம்பர் 20 தேதியில்…

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ

ஜோதிகா அண்ட் கார்த்தி நடித்துள்ள தம்பி

த்ரிஷா நடித்துள்ள கர்ஜனை

இவையில்லாமல் இன்னும் சில படங்களும் டிசம்பரில் வெளியாக தயாராகவுள்ளன.

அமலாபாலின் அதோ அந்த பறவை போல

சசிகுமாரின் நாடோடிகள்-2,

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி ஜெய் நடித்துள்ள கேப்மாரி,

பாரதிராஜா, வசந்த் ரவி நடித்துள்ள ராக்கி,

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள சைக்கோ

சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா,

அல்டி, வேழம், கருத்துக்களை பதிவு செய், பஞ்சாட்சரம், தேடு, இருளன், மதம், இ.பி.கோ 306, உன் காதல் இருந்தால், நான் அவளை சந்தித்த போது, அவனே ஸ்ரீமன் நாராயணா (கன்னட டப்) ஆகிய படங்களும் ரிலீசாகவுள்ளன.

ஜெயலலிதா இறந்தநாளில் ‘குயின்’ டிரைலரை வெளியிடும் கௌதம்மேனன்

ஜெயலலிதா இறந்தநாளில் ‘குயின்’ டிரைலரை வெளியிடும் கௌதம்மேனன்

Queen web seriesஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 3 இயக்குனர்கள் திரைப்படமாக்கி வருகின்றனர்.

ஆனால் இயக்குனர் கவுதம் மேனன், பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து ‘குயின்’ என்ற பெயரில் ஒரு வெப்சீரிஸ் ஆக இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் ‘குயின்’ டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த டீசரில் ஜெயலலிதாவாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணனின் முகம் காட்டப்படவில்லை.

வருகிற டிசம்பர் 5ஆம் தேதி டிரைலரை இணையத்தில் வெளியிட உள்ளனர். இதில் இன்னும் பல சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கும் என நம்பலாம்.

டிசம்பர் 5ஆம் தேதி தான் ஜெயலலிதா இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவாக மாற மாத்திரைகளை சாப்பிடும் கங்கனா ரனாவத்

ஜெயலலிதாவாக மாற மாத்திரைகளை சாப்பிடும் கங்கனா ரனாவத்

Thalaivi first look posterமுன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‛தலைவி’ என்ற பெயரில் விஜய் இயக்கி வருகிறார்.

இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் புகழ் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

இந்த கேரக்டருக்காக பரதநாட்டியம் கற்றுக் கொண்ட கங்கனா தற்போது ஜெயலலிதா போல் கொஞ்சம் குண்டாக சில ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறாராம்.

ஜெயலலிதா ஒரு விபத்தில் சிக்கியதால் அதிக அளவில் ஸ்டெராய்டுகள் எடுத்திருந்தாராம். எனவே அதற்காக தானும் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் கங்கனா.

தற்போது வரை 9 கிலோ கூடியிருக்கிறாராம் கங்கனா.

More Articles
Follows