தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குநர் லிங்குசாமி ஏற்கெனவே’ லிங்கூ’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார்.
இவரின் இரண்டாவது படைப்பாக ‘லிங்கூ-2’ ‘ வாக ‘செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்’ என்கிற ஹைக்கூ கவிதைகள் நூலை எழுதியுள்ளார்.
இதன் வெளியீட்டு விழா, கௌதம் மேனனின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கவிதை நூலை கவிக்கோ அப்துல்ரகுமான் வெளியிட கௌதம் மேனன் மற்றும் பார்த்திபன் பெற்றுக் கொண்டனர்.
பாடகி அனுராதா ஸ்ரீராம் ‘அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே’ என்ற பாடலைப் பாடினார்.
விழாவில் லிங்குசாமி பேசும்போது…
நான் எப்போதும் கவிதையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். பிறகுதான் கதை எல்லாம்.
கையில் காசு பணம் வேண்டாம். கவிதை போதும் பிழைத்துக் கொள்ளலாம் என்றிருப்பேன்.
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் கவிதைகளுக்கு முன்னால அதெல்லாம் எனக்கு தெரியாது.
இப்போது கூட வருகிற அழைப்புகளில் 3 அழைப்புகள் பணம் திருப்பித்தரக் கேட்கும் அழைப்புகளாக இருக்கும். நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன்.
எனக்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறது. இந்த மனநிலையோடு அடுத்த படத்தை தொடங்குகிறேன். எல்லாக் கஷ்டங்களும் கடந்து போகும்” என்றார்.
சசி பேசும்போது…
”நல்ல கவிதை என்பது அதைப் படித்தவனை எழுத வைக்கும். லிங்குவின் கவிதைகளைப் படித்ததும் மொட்டமாடி மழையில் நனைந்தேன்” என்றார்.
பார்த்திபன் பேசும்போது…
”சினிமா கஷ்டத்தையோ நஷ்டத்தையோ கொடுக்கலாம். ஆனால் கவிதை இஷ்டத்தைத்தான் கொடுக்கும்” என்றார்.
விழாவில், தயாரிப்பாளர் யூடிவி தனஞ்ஜெயன், ஊடகர் ‘நீயா நானா’ புகழ் கோபிநாத், பத்திரிகையாளர் ரா.கண்ணன், இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், மிஷ்கின், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, மாரிமுத்து, நந்தாபெரியசாமி, ராஜுமுருகன், நலன் குமாரசாமி, மணிபாரதி, விஜய் மில்டன், கவிஞர்கள் அறிவுமதி,விவேகா,நெல்லை ஜெயந்தா, ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் உள்ளிட்ட படைப்பாளிகள் கலந்து கொண்டனர்.