தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா.
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக வரும் புதிய திரைப்படத்தின் வாயிலாக மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
இப்படத்திற்கு ‘மார்கழி திங்கள்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்து வருகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியை சுற்றியை பகுதிகளில் நடந்து வருகிறது.
கணக்கன்பட்டி என்ற கிராமத்தில் நேற்று (மே 30) படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, மக்காச் சோளக் காட்டின் நடுவே லைட்மேன்களுக்கான கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நேற்று படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த போது சூறை காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் துவங்கியது.
இந்நிலையில், அந்த படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்ட லைட் செட் மீது இடி இடித்தது. இதன் காரணமாக லைட் செட்கள் கீழே விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக ஐந்து லைட் மேன்கள் உயிர் தப்பினர்.
மேலும், இது போன்ற சம்பவம் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
lightening attack in margazhi thingal shooting spot