JUST IN ரசிகர்களை சமாதானப்படுத்த மிலாடி நபி-யில் விருந்தளிக்கும் விஜய்

JUST IN ரசிகர்களை சமாதானப்படுத்த மிலாடி நபி-யில் விருந்தளிக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாஸ்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.

லலித் குமார் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

மேலும் படத்தின் பாடல்கள் போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் திடீரென நேற்று செப்டம்பர் 26 ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர். இந்த நிலையில் இன்று செப்டம்பர் 27ஆம் தேதி மாலை லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

படாஸ் மா.. லியோதாஸ் மா.. . என்று தொடங்கும் இந்தப் பாடலை விஷ்ணு என்பவர் எழுதியுள்ளார். நாளை செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையின் போது இந்த பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் புது புத்துணர்ச்சியை கொடுக்கும் என நம்பலாம்.

லியோ

Leo 2nd Single Badas ma Leodas ma release update

லெஸ்பியன் கதையை படமாக்க வேணுமான்னு தோனுச்சி.. ஆனா…. – நடிகை நீலிமா

லெஸ்பியன் கதையை படமாக்க வேணுமான்னு தோனுச்சி.. ஆனா…. – நடிகை நீலிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.

ஜெயராஜ் பழனி என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகை நீலிமா இசை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற தயாரிப்பாளரும், நடிகையுமான நீலிமா இசை பேசுகையில்….

” இந்தத் திரைப்படம் மைக்ரோ பட்ஜெட்டில் உருவானது. ‘அரண்மனைக்கிளி’ எனும் தொலைக்காட்சி தொடரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் மூலமாக ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பரணிதரன் மற்றும் செந்தில்குமார் அறிமுகமானார்கள்.

ஷார்ட் ஃபிலிக்ஸ் எனும் ஆப்ஸை ஏன் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், இந்த செயலியில் புது முகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். புது இயக்குநர்கள், புதிய நடிகர்கள், புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானவருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள்.

இந்த மேடையில் அமைந்திருக்கும் பெரும்பாலானவர்கள் புது முகங்களே. இந்த செயலியை நாம் எப்போது வேண்டுமானாலும்… எங்கு வேண்டுமானாலும்.. பதிவிறக்கம் செய்து நாம் விரும்பக்கூடிய கால அளவுகளில் படைப்புகளை காணலாம். நாம் எந்த மனநிலையில் இருக்கிறோமோ…! அதற்கு ஏற்ற வகையிலான உள்ளடக்கங்கள் இந்த செயலியில் இருக்கிறது.

ஷார்ட் ஃபிளிக்ஸில் வெளியான லேட்டஸ்ட் ஹிட் என்றால் அது ‘பாணி பூரி’ தான். அனைத்து ஜானரிலும் படங்களை உருவாக்க வேண்டும் என அவர்கள் விரும்பிய போது, ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ தொடங்கியது.

இந்த கதையை படமாக உருவாக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த போது, என்னுடைய கணவர் இசை, ‘அவசியம் உருவாக்க வேண்டும். ஏனெனில் தற்போது இந்த சமூகம் மற்றும் சமுதாயம் செல்லும் பாதையில் இது போன்ற உள்ளடக்கங்கள் அவசியம் ‘ என்றார்.

அதன் பிறகு இந்தப் படத்திற்கு ஏராளமான திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்தனர். எங்களுடைய தயாரிப்பு நிறுவனம், குறைந்த முதலீட்டில் தரமான படைப்புகளை உருவாக்க முடியும் என்ற இலக்கை கொண்டது. அந்த வகையில் இந்தப் படத்திற்காக உழைத்த இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என் அனைவரும் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர்.‌ இது போன்ற நல்ல படைப்பிற்கு ரசிகர்களும் பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Neelima became co producer in Vaazhvu Thodangumidam neethanae movie

மாடலில் துறையில் Lesbian Gay Bisexual and Transgender.. – ஸ்ருதி

மாடலில் துறையில் Lesbian Gay Bisexual and Transgender.. – ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.

ஜெயராஜ் பழனி என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகை நீலிமா இசை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற இயக்குநர் ஜெயராஜ் பழனி பேசுகையில்…

” இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். முதலில் ‘சூல்’ எனும் பெயரில் திருநங்கைகளை முதன்மைப்படுத்திய படைப்பை உருவாக்கினேன்.

இந்தப் படைப்பை ஷார்ட் ஃபிளிக்ஸ் வாங்கி என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லி போதுமான பொருட்செலவில் உருவாக்கி, பரிசாக அளித்திருக்கிறார்கள்.

நான் பாண்டிச்சேரியில் நாடக துறையில் பணியாற்றிருக்கிறேன். என்னுடைய உதவியாளர் ஒருவர் தன் பாலின சேர்க்கையாளர். அவரின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. ஆண், பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை போல் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கும் அவர்களின் உணர்வுகளை மதித்து, சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது தான் இந்த படைப்பு.” என்றார்.

நடிகர் அர்ஷத் பேசுகையில்…

” வாழ்வு தொடங்கும் இடம் நீதானே எனும் இந்த திரைப்படத்தில் இர்ஃபான் எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படைப்பு காகிதத்திலிருந்து டிஜிட்டல் படைப்பாக உருவாகி இருக்கிறது என்றால், அதற்கு ஷார்ட் ஃபிளிக்ஸ் கொடுத்த ஆதரவு தான் முக்கிய காரணம். கலைஞர்களாகிய நாங்கள் இந்த கதை மீது கொண்டிருந்த நம்பிக்கையை விட… ஷார்ட் ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் இந்த கதை மீது அதீத நம்பிக்கையை வைத்து தயாரித்திருக்கிறார்கள்.

இதற்காக அவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தை ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரித்த இசை பிக்சர்ஸ் நீலிமா இசை மற்றும் இசை அவர்களிடமிருந்து ஏராளமான விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னை போன்ற வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இது போன்ற வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.

இது என்னுடைய கனவு நனவான தருணம். இயக்குநர் ஜெயராஜ் பழனியின் இயக்கத்தில் உருவான ‘சூல்’ என்ற குறும்படத்திலும் எனக்கு வாய்ப்பளித்திருந்தார். தற்போது இந்தப் படத்திலும் வாய்ப்பளித்திருக்கிறார். வாய்ப்பிற்கும் நேரத்திற்கும் நன்றி.” என்றார்.

நடிகை ஸ்ருதி பெரியசாமி பேசுகையில்…

” வாழ்வு தொடங்குமிடம் நீதானே படத்தின் கதையை இயக்குநர் எனக்கு விவரித்த போதே எனக்கு பிடித்திருந்தது. ஏனெனில் நான் பணியாற்றும் மாடலிங் துறையில் ஏராளமானவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே தருணத்தில் இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் பலர் எல் ஜி பி டி எனும் பிரத்தியேக சமூக குழுவில் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

இந்தப் படத்தை தயாரித்த ஷார்ட் ஃபிளிக்ஸ் மற்றும் இசை பிக்சர்ஸிற்கு நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் போது அயராது பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ படத்தை பார்த்து விட்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்” என்றார்.

Lesbian Gay Bisexual and Transgender were at Modelling says Shruthi

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்தில் இஸ்லாமிய லெஸ்பியனாக நிரஞ்சனா

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்தில் இஸ்லாமிய லெஸ்பியனாக நிரஞ்சனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.

இதைத் தொடர்ந்து படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதன் போது ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் பரணிதரன் மற்றும் செந்தில்குமார், நடிகர் அர்ஷத், நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி, பாடலாசிரியர்கள் ஜி கே பி மற்றும் சிவா சங்கர், இசையமைப்பாளர் தர்ஷன் குமார், தயாரிப்பாளர் நீலிமா இசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஷார்ட் ஃபிளிக்ஸ் பரணிதரன் பேசுகையில்…

” வாழ்வு தொடங்கும் இடம் நீதானே இந்த திரைப்படம் எங்களுடைய டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. எங்களுடைய டிஜிட்டல் தளத்தில் ஏராளமான புதிய இணைய தொடர்கள், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள்..என புதிய படைப்புகள் விரைவில் வெளியாக இருக்கின்றன. ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தை தொடங்குவதற்கு காரணம்..

பல புதிய இளம் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக தான். இப்படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி இதற்கு முன் ‘சூல்’ என்றதொரு குறும்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளை வென்றது. இது தொடர்பாக அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்தின் கதையை விவரித்தார். இந்த கதையை கேட்டவுடன் தயாரிக்க ஒப்புக்கொண்டோம். ஏனெனில் இந்த கதையை இயல்பாக சிந்திக்காமல் வித்தியாசமாக சிந்தித்து உருவாக்கியிருந்தார்.

அதன் பிறகு இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக நடிகை நீலிமா இசையை தொடர்பு கொண்டோம். அவர்கள் இந்தப் படத்தை மிக நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். தன் பாலின சேர்க்கையாளர்களை பற்றிய இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

நடிகை நிரஞ்சனா நெய்தியார் பேசுகையில்…

” இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஷகிரா மற்றும் வினோதா கதாபாத்திரங்களை இயக்குநர் ஜெயராஜ் பழனி நேர்த்தியாக கையாண்டிருந்தார். ‌இதில் ஷகிரா கதாபாத்திரத்தில் நான் பொருத்தமாக இருப்பேன் என்று தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று மேலும் இது போன்ற திரைப்படங்கள் வருவதற்கு உந்துதலாக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான சமுதாய நடைமுறையில் இருந்து வித்தியாசமாக இயங்கும் இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். ” என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் தர்ஷன் குமார் பேசுகையில்..

” தற்போதுள்ள சூழலில் ஒரு திரைப்படம் வெளியாவது என்பதே கடினம். இந்நிலையில் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ திரைப்படம் வெளியாகிறது. இதற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் நீலிமா இசைக்கு நன்றி. இந்தத் திரைப்படத்திற்கு பாடல் அமைப்பதும், பின்னணி இசை அமைப்பதும் கடும் சவாலானதாக இருந்தது.

இப்படத்தின் பின்னணி இசைக்காக பல சர்வதேச கலை இசை கலைஞர்களை பயன்படுத்தி இருக்கிறோம். படத்தின் பாடல்களும், பின்னணியிசையும் அனைவரையும் கவரும் என உறுதியாக நம்புகிறோம் ”என்றார்.

Niranjana speech at Vaazhvu Thodangumidam neethanae press meet

‘லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்து ஏன்..? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

‘லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்து ஏன்..? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று செப்டம்பர் 26.. இரவு 10 மணியளவில் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜய் பேசும் குட்டிக்கதை அவரின் அரசியல் நகர்வு அனைத்தையும் கேட்க ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

திரையுலகினர் மத்தியிலும் இதற்கு கண்டனங்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் மௌனம் கலைத்து வருகின்றனர்.

டிவி நடிகர் ராஜ்கமல் பேசுகையில்… சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் அதிகப்படியான டிக்கெட்டுகள் விற்கப்பட்டதால் குளறுபடியானது. எனவே இது போன்ற சர்ச்சையை தடுக்க விஜய் எடுத்துள்ள முடிவு சரியானது என பேசியிருந்தார்.

மேலும் உங்களின் குட்டி கதையை கேட்க நாங்கள் ஆவலோடு இருக்கிறோம்.. எனவே நீங்கள் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து பேசி வீடியோ வெளியிட்டால் அது எங்களுக்கு புத்துணர்ச்சியை தரும் என பேசி இருந்தார்.

‘லியோ’ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு ஆளுங்கட்சியின் அழுத்தம்.. விஜய்யின் அரசியல் நகர்வு.. போலியான டிக்கெட் விற்பனை.. ரெட் ஜெயன்டின் வெளியீட்டு உரிமை என பல்வேறு காரணங்கள் பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் விஜய்யின் ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் இடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது.. “அதற்கு தயாரிப்பாளரை கேட்க வேண்டும். அவர் என்ன சொன்னாரோ அதான் காரணம்” என ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டு சென்றார்.

Bussy Anand reply for Leo Audio Launch cancelled

மகா கலைஞன் நாகேஷ் பிறந்தநாள் பதிவு.; சுவாரஸ்ய தகவல்கள்..

மகா கலைஞன் நாகேஷ் பிறந்தநாள் பதிவு.; சுவாரஸ்ய தகவல்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

#நாகேஷ் எனும் மகா கலைஞன்!
இன்று இவருடைய #பிறந்த நாள்

நாகேஷ் பிறந்த நாள் பதிவாக..

சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை. கனவுகள் கனவுகளாகவே கலைவதும் நிஜங்களாக நிறைவேறுவதும் கனவு காண்பவரின் திறமையைப் பொறுத்தது. அப்படி திறமையிருந்தால் சினிமாவில் யார் வேண்டுமானாலும் நடிகனாகி விடலாம்.

ஆனால் கலைஞனாவது அத்தனை சுலபமல்ல. ஒரு நடிகனுக்கும் கலைஞனுக்குமான வித்தியாசம் எந்தவொரு அளவுகோலும் வைத்து அளந்துவிட முடியாது. எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் என்று ஒட்டுமொத்த கலைஞர்களையும் தமிழ் சினிமா தன்னுள் வைத்திருந்த காலத்தில் மெலிந்த தேகம், அம்மைத் தழும்பு முகம் என்று சினிமா மொழிக்கு சற்றும் பொருந்தாத ஒரு இளைஞன் தன்னை கலைஞனாக நிலைநிறுத்திக்கொண்டார் என்றால் அது சினிமா உலகின் ஆச்சர்யம். அந்த ஐந்தடி ஆச்சர்யத்தின் பெயர்தான் நாகேஷ்.

ஒரு நாடக ஒத்திகையில் எவனோ முகம் தெரியாத நடிகர் கம்ப ராமாயண பாடலை தவறாகப் பாடியதைக் கேட்டு அந்த தவறைச் சுட்டிக் காட்டியுள்ளார் நாகேஷ். அதற்காக அங்கு கிடைத்த அவமரியாதையில் தாமும் நடிகனாக வேண்டுமென்று ரயில்வே கல்ச்சுரல் விங்-கின் நாடகக்குழுவில் சேர்ந்தார்.

பெரிய நடிகனாக வேண்டுமென்று வந்தவருக்கு காலம் கொடுத்தது சிறிய வயிற்றுவலிக்காரன் வேடம். “”அம்மா…அம்மா…அம்மம்மா” என்று அவர் காட்டிய பிரம்மாண்டத்தில் அரண்டது அரங்கம் மட்டுமல்ல, அன்றைய நாடகத்திற்கு சிறப்பு விருந்திருனராக வந்திருந்த எம்.ஜி.ஆரும்தான்.

அதுதான் நாகேஷுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம். அந்த மாடுலேஷனைதான் “திருவிளையாடல்’ தருமியாக “”எனக்கில்லை எனக்கில்லை இல்லவே இல்லை” என்று மீள்பதிவு செய்திருப்பார்.

அதையேதான் “கார்மேகம்’ படத்தில் வடிவேலுவும் கூட டீக்கடை காட்சியில் கீழே விழும்போது பயன்படுத்தியிருப்பார். கமல்ஹாசன் “தெனாலி’ படத்தில் “”ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம் என்டு சொன்னீங்களே எப்போ ஆரம்பிக்கலாம்” என்று ஜெயராம் விரலை அசைக்க அசைக்க அதே இழுவையில் இழுத்து இழுத்துச் சொல்லும்போது நாகேஷைத்தான் வெளிப்படுத்திருப்பார். நாகேஷின்றி நகைச்சுவையில் நடிப்பில்லை என்பதற்கு இது சான்று.

ஊறுகாய் கம்பெனி, மில் வேலை, மேடை நாடகம் என்று தட்டுத்தடுமாறி தவழ்ந்து தவழ்ந்து நடிக்க வந்த நாகேஷுக்கு முதல் படம் தாமரைக்குளம். படப்பிடிப்பில் அவர் சரியாக நடிக்கவில்லை என்று யூனிட்டை சார்ந்தவர்கள் கடிந்து கொள்ள மனதளவில் தளர்ந்து போயிருந்த நாகேஷிடம் “”மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன், கவலப்படாம நடி” என்று எம்.ஆர். ராதா ஆறுதல் சொல்லி தேற்றியுள்ளார்.

கலைஞர் என்று பெயர் கொடுத்த எம்.ஆர். ராதாதான் நாகேஷையும் முதல் படத்திலேயே கலைஞனாக அங்கீகரித்துள்ளார். அந்த தீர்க்கதரிசனம் பொய்த்துப் போகவில்லை.

தமிழ் சினிமாவில் எந்த சம்பள பாக்கியும் இல்லாமல் வசூல் செய்வதில் கெட்டிக்காரர் நாகேஷ். முன்னணி கதாநாயகர்களின் பாடல்கள் அவர்களது பெயர்களோடு ஒலித்து வருவது போல நாகேஷின் பாடல்களும் இன்றும் காற்றில் கலந்திருப்பது அவரது பெருமை. நாகேஷ் ஸ்டைல் டான்ஸ் என்று அவர் உருவாக்கிக்கொடுத்தது தனித்திறமை.

“ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, “தாமரைக் கன்னங்கள்’, “அவளுக்கென்ன அழகிய முகம்’, “ஒருநாள் யாரோ’, “நானொரு குமாஸ்தா’ போன்ற பாடல்கள் எல்லாம் அழியாத செல்லுலாய்டு ஒலிகள். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரண்டு ஜாம்பவான்கள் திரைத்துறையில் மின்னிய காலகட்டத்தில் நகைச்சுவையோ குணச்சித்திரமோ தனக்கென ஒரு இயல்பு என்று தமிழ் சினிமாவை தனது நடிப்புக்குள் கட்டிப்போட்டிருந்தவர் நாகேஷ்.

“நானும் ஒரு பெண்’, “மேஜர் சந்திரகாந்த்’ போன்ற திரைப்படங்களில் ஒரு அண்ணனாக அவர் காட்டிய உணர்வுகள் இன்றும் அழியா திருக்கின்றன.

“திருவிளையாடல்’ தருமி ஆகட்டும் “தில்லானா மோகனாம்பாள்’ வைத்தி ஆகட்டும் அனைத்துமே நாகேஷுக்காக படைக்கப்பட்ட கதாபாத்திரங்கள். குடும்பச் சிக்கல் காரணமாக ஒரு வழக்கில் சிக்கியிருந்த நாகேஷ் எந்த நேரத்திலும் சிறைக்குச் செல்ல நேரிடலாம்.

அதனால் நாகேஷ் வேண்டாம் என்று தில்லானா மோகனாம்பாள் படக்குழுவினர் சொல்ல, என்ன ஆனாலும் நாகேஷுக்காக காத்திருந்து படப்பிடிப்பு நடத்தப்படும் என்று உறுதியாக இருந்தாராம் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்.

காரணம் அன்றைய தினத்தில் வைத்தியை நாகேஷை தவிர வேறு யாராலும் திரையில் கொடுத்துவிட முடியாது என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. “தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் இறுதிக்காட்சியில் நாகேஷ் கைது செய்யப்பட்டதும் பாலையா “”வெக்கங் கெட்டவனே” என்று சொன்னதும் “எனக்கென்ன வெக்கம். வெக்கப்பட்டா போலீஸ் விட்ருவாளா” என்று அந்த கதாபாத்திரத்தின் நியாயத்தை அதே இயல்பு மீறாத வசனத்தில் வெளிப்படுத்தியிருப்பார் நாகேஷ். வைத்தியைப் போல, ஓஹோ ப்ரொடக்சன்ஸ் செல்லப்பாவின் கதை சொல்லும் காட்சி இன்றும்கூட தமிழ் சினிமாவின் ரெஃபெரென்ஸ் காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது.

நாகேஷின் திரைப்பயண பாதையில் அவரை தனியொரு நாயகனாக வடிவமைத்துக் கொடுத்த பெருமை பாலச்சந்தரையே சாரும். பாலச்சந்தருக்கும், நாகேஷுக்குமான நட்பு அத்தனை இறுக்கமானது. பாலச்சந்தர் ஒருமுறை அவர்களது நட்பை குறிப்பிட்டுப் பேசும்போது “என்னுள் இயங்காத நடிகன் நாகேஷ். நாகேஷின் உள் இயங்காத எழுத்தாளன் நான்” என்று பேசியிருக்கிறார்.

எஸ்.வி.சுப்பையா, சிவாஜி கணேசன் என்று வெகுசில பெரியவர்களால் அணியப்பட்ட பாரதியார் வேடத்தை நாகேஷுக்கு கொடுத்து அழகு பார்த்தார் பாலச்சந்தர்.

“”கண்ணன் பாட்டை காமுகன் பாடி ஊரைக் கெடுத்தானே, என் பேரைக் கெடுத்தானே” என்று நாகேஷ் காட்டும் கோபமுகத்தில் ஒரு புதிய பாரதி கண்முன் வருவார். “எதிர்நீச்சல்’ படத்தில் “”நான் மாது வந்திருக்கேன்” என்று நாகேஷ் சொல்வதை இன்று டி.வியில் பார்த்தாலும் கலங்காத கண்கள் நிச்சயம் இருக்க முடியாது. முகம் காட்டாத இருமல் தாத்தாவிடம் பேசும்போதும் சரி, நாயரிடம் அழகும்போதும் சரி, படவா ராஸ்கல் என்று மேஜரை அழைக்க வைக்க சபதம் செய்வதிலும் சரி நாகேஷ் நடிகரல்ல கலைஞன் என்று நிரூபித்திருப்பார். “நீர்க்குமிழி’, “சர்வர் சுந்தரம்’, “எதிர்நீச்சல்’, “புன்னகை’, “நவகிரகம்’ என அனைத்துமே ஒரு கலைஞனுக்காக நடிப்பிலக்கணம்.

ஒவ்வொரு நடிகனுக்கும் சாச்சுரேஷன் பீரியட் என்று ஒன்று வந்ததும் தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும். அப்படி நாகேஷை புறக்கணித்த காலங்களில் தந்தைக்கு சேவகம் செய்யும் மகனைப் போல நாகேஷை தத்தெடுத்து நடிப்புத்தீனி கொடுத்தார் கமல்.

குரு பாலச்சந்தர் காட்டிய நாகேஷின் சில முகங்களை மீண்டும் திரையில் காண்பித்தார் சிஷ்யன் கமல்ஹாசன், அந்த பாக்கியத்தில்தான் நாகேஷ் இன்றளவில் வாழ்ந்து வருகிறார்.

“நம்மவர்’ திரைப்படத்தில் அவரது மகள் தற்கொலை செய்து கொண்டு பிணமாகக் கிடப்பார். மகளின் இறந்த உடலுக்கு தலையணை வைத்து அருகிலமரும் காட்சியில் நாகேஷின் நடிப்பானது, அப்படியொரு காட்சியில் இப்படியும் நடிக்கலாம் என்ற ஒரு அர்த்தத்தைக் கொடுத்திருக்கும். அந்த முழு காட்சியிலும் நாகேஷின் நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

“”எதுக்கு டாக்டர் அதான் எல்லாம் முடிஞ்சுதே… ஒஹ் எனக்கா” என்ற வசனத்தில்கூட அந்த காட்சியின் இறுக்கத்தை இலகுவாய் கடத்திச் சென்றிருப்பார். இந்த படத்திற்கு அவருக்கு கிடைத்த தேசிய விருதுகூட அவரது நடிப்புக்கு போதுமான ஒன்றல்ல.

“அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கமலை தூக்கி வந்ததும் ஸ்க்ரிப்டில் இல்லாத வசனமாக “”என்னயா பாதிதான் இருக்கு” என்று கேட்டது நாகேஷின் ஸ்பான்டேனியஸ் டச்.

“மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் பிணமாக நடிக்க வைத்திருந்தபோது தனக்கு வசனம் வேண்டும் என்று குழந்தைத்தனமாக அடம்பிடித்ததைப் பற்றி ஒரு முறை கிரேஸி மோகன் சிலாகித்து பகிர்ந்து கொண்டார்.

ஒரு நடிகனுக்கு நடிப்பில் ஈடுபாடுதான் முக்கியமே தவிர வேறெதுவுமில்லை என்று அறிந்திருந்ததால்தான் அந்த கதாபாத்திரம் நாகேஷால் சாத்தியமானது. இன்றளவிலும் திரையில் நிலைத்து நிற்கிறது.

“மைக்கேல் மதனகாமராஜன்’, “மகளிர் மட்டும்’, “நம்பவர்’, “அவ்வை ஷண்முகி’, “பஞ்சதந்திரம்’, “தசாவதாரம்’- என அவரது ரிட்டயர்மெண்ட் அத்தியாயங்களின் சிரிப்பு பக்கங்கள் கமலால் எழுதப்பட்டிருந்தன. மரணப்படுக்கையில் இருந்த தனக்கு “உங்களுக்கு சரி ஆகிடும் சார், நூறு வருஷம் இருப்பீங்க” என்று தைரியம் சொன்ன கமலிடம், “டேய் கமலா, பொய் சொல்லாதடா, ரொம்ப நாள் இருக்கமாட்டேன், முட்டாள்களோடு வேல பாத்தவனுக்கெல்லாம் ஆயுசு குறைவுடா” என்று சொல்லி “உன்கூடயும் வேல பாத்திருக்கேன்ல” என்று அந்த நிலையிலும் குறும்புத்தனத்தோடு சோகமாய் குழுமியிருந்தவர்களை சிரிக்க வைத்திருக்கிறார் நாகேஷ்.

‘படிக்காதவன்’, ‘தில்லு முல்லு’ உள்ளிட்ட பல படங்களில் ரஜினியுடன் நடித்திருக்கிறார்.

அது போல் விஜய்யுடன் ‘பூவே உனக்காக’ & அஜித்துடன் ‘பூவெல்லாம் உன் வாசம்’ உள்ளிட்ட பல படங்களில் நாகேஷ் நடித்திருக்கிறார்.

நாகேஷ் நடிகனல்ல, ஒரு நற்கலைஞன், நடிப்பின் இரு துருவங்களான நகைச்சுவைக்கும் சோக உணர்வுகளுக்கும் அவர் எழுதி வைத்துச் சென்றிருக்கும் விளக்கங்கள் இன்றைய இளம் நடிகர்களுக்கு ஒரு என்சைக்ளோபீடியா என்று சொன்னால் மிகையாகாது.

நன்றி..!!!!

Remembering Nagesh on his birthday anniversary

More Articles
Follows