அவள் அப்படித்தான்..; சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்கும் மணிகண்டன்

அவள் அப்படித்தான்..; சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்கும் மணிகண்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

silk smithaஎண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா
அவருக்கு முன்னாலே பல கவர்ச்சி நடிகைகளை சினிமா உலகம் பார்த்து இருக்கிறது என்றாலும் தன்னுடைய மயக்கும் விழிகளாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்ட ஒரு கவர்ச்சி நடிகை அவர்.
ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம்
கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை “அவள் அப்படித்தான்” என்ற பெயரிலே காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சும மணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர்
பல விளம்பரப் படங்களை இயக்கியவரும் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற வெற்றிப் படத்தை இயக்கியவருமான மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார்
“சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய ஒரு அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் இப்படத்தின் இயக்குனரான மணிகண்டன்
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது.

KS Mani Kandan to direct Silk Smitha’s biopic

விஜய்சேதுபதி திரைக்கதை வசனத்தில் விமல் நடிக்கும் ‘குலசாமி’

விஜய்சேதுபதி திரைக்கதை வசனத்தில் விமல் நடிக்கும் ‘குலசாமி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vimalவிமல் நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ‘எங்க பாட்டன் சொத்து’, இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, தர்மபிரபு இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கன்னிராசி’ ஆகிய படங்கள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த “படவா, புரோக்கர், மஞ்சள் குடை, லக்கி மற்றும் இயக்குனர் வேலு இயக்கத்தில் பெயரிடப்படாத படம்” படங்களை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு, இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் ‘குலசாமி’ என்ற அதிரடி ஆக்ஷன் படத்திலும், இயக்குனர் சுராஜ் உதவியாளர் R. துரை இயக்கத்தில் ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்ற படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விமல்.

‘குலசாமி’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நடிகர் விஜய்சேதுபதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘குலசாமி’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்குகிறது.

Actor Vimal’s Kulasamy shoot starts from october 16th

புதுச்சேரியில் சிவில் சர்வீஸ் தேர்வுகள்..; காரைக்காலில் இருந்து PRTC பேருந்து சேவை

புதுச்சேரியில் சிவில் சர்வீஸ் தேர்வுகள்..; காரைக்காலில் இருந்து PRTC பேருந்து சேவை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

civil service exam pondicherryபுதுச்சேரியில் (04-10-2020) நாளை 8 மையங்களில சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடைபெற உள்ளதால் PRTC நிர்வாகம் தேர்வர்களின் வசதிக்காக கீழ்க்கண்டவாறு பேருந்து வசதி செய்துள்ளது

இத்தேர்வினை 2913 பேர் எழுத உள்ளனர். தேர்வர்களின் வசதிக்காக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி பேருந்துநிலையத்தில் இருந்து கீழ் கண்ட இடங்களுக்கு காலை07.00 மணி முதல் காலை 08.30மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது.

விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி லாஸ்பேட்டை,
மகளிர் பாலிடெக்னிக் லாஸ்பேட்டை, இதயா கலைக்கல்லூரி லாஸ்பேட்டை, வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி லாஸ்பேட்டை, பெட்டிட் செமினர் மேல்நிலைப்பள்ளி புதுச்சேரி,இமாகுலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி உப்பளம்

மற்றும் விழுப்புரம் TO புதுச்சேரி காலை 07.00 மணி
கடலூர் TO புதுச்சேரி காலை 07.00 மணி

காரைக்கால் TO புதுச்சேரி காலை 04.30am மணி.

புதுச்சேரி TO காரைக்கால் மாலை 06.10pm

தேர்வு எழுதி முடித்தவர்கள் மீண்டும் மேற்கண்ட இடங்களுக்குச் செல்ல மாலை 04.30 மணி முதல் அந்தந்த தேர்வு மையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தேர்வர்களுக்கு வாழ்த்துகள்

Government bus service for Civil service exam held in pondicherry

காந்தி-காமராஜர் கனவை நனவாக்கும் ரஜினி..; தமிழருவி மணியன் அறிக்கை

காந்தி-காமராஜர் கனவை நனவாக்கும் ரஜினி..; தமிழருவி மணியன் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamilaruvi manian Rajiniநடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்கவுள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அவர் களம் காணவுள்ளார்.

இந்தாண்டு ஏப்ரல் மாதம் அவர் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு காரணமாக கட்சி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே நவம்பர் மாதம் ரஜினி கட்சி தொடங்குவார் என தெரிகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் ஆலோசர்களில் ஒருவரான தமிழருவி மணியன் தன் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில்…

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாற்று அரசியலை முன்னிறுத்தி ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை விடுவிக்க நாம் ரஜினிகாந்த் அவர்களால் மட்டுமே அந்த சரித்திர சாதனையை நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற எதார்த்த நிலையை பூரணமாக உணர்ந்து அவர் முதல்வராக வேண்டும் என்ற ஒரே முடிவுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.

காந்தி பிறந்தநாளில் காமராஜர் மறைந்த நாளில் இந்த இருவருடைய கனவை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினி அவர்களின் முயற்சிக்கு நாம் உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு தமிழருவி மணியன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Only Rajini will give good service to the public says Tamilaruvi Manian

தல பட தயாரிப்பாளர் இயக்குனரானார்..; சூரி-அருள்நிதி ஆதரவு

தல பட தயாரிப்பாளர் இயக்குனரானார்..; சூரி-அருள்நிதி ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dayanidhi alagiriவெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் அண்ட் அர்ஜீன் இணைந்து நடித்த படம் ’மங்காத்தா’.

இந்த படத்தை தயாரித்தவர் தயாநிதி அழகிரி ஆவார்.

இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பேரன். அதாவது முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன்.

இந்த நிலையில் தயாநிதி அழகிரி தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் இயக்கிய குறும்படத்திற்கு ’மாஸ்க்’ என தலைப்பு வைத்துள்ளார்.

தயாநிதியின் சகோதரரும் நடிகருமான அருள்நிதி அந்த பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

அதுபோல் நடிகர் சூரியும் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு… மாஸ்க்குக்கு உள்ள மாஸான விசயம் மறைஞ்சு இருக்குன்னு மட்டும் தெரியுது. இயக்குனர் அவதாரம் எடுத்துருக்கும் பாசத்துக்குரிய தயாநிதி அழகிரி ப்ரதருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் தயாநிதிக்கு அனிருத், ஹரிஷ் கல்யாண், சாந்தனு, நிதின் சத்யா உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

mask short film

Ajith film producer turns a director

அஜித் படத்திற்கு எக்ஸ்ட்ரா ‘வலிமை’ சேர்க்கும் ஹாலிவுட் பிரபலம்

அஜித் படத்திற்கு எக்ஸ்ட்ரா ‘வலிமை’ சேர்க்கும் ஹாலிவுட் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai ajithதல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’வலிமை’.

அஜீத்துக்கு ஜோடியாக ஹூமோ குரேஷி நடிக்க படத்தின் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் இசையமைக்க நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

கொரோனா பிரச்சினைக்கு பிறகு சில நாட்களுக்கு முன் இப்பட சூட்டிங் தொடங்கியது. கார்த்திகேயா நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் வினோத்.

அஜித் விரைவில் சூட்டிங்கில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் ஸ்டண்ட் இயக்குனராக இணைந்திருக்கிறாராம்.

ஏற்கெனவே படத்தல் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Hollywood stunt director joins in Valimai shooting

More Articles
Follows