கனவுக்கன்னி சில்க் ஸ்மிதாவின் 25வது ஆண்டு நினைவு நாளில் ‘சில்க்’ ஆரம்பம்

கனவுக்கன்னி சில்க் ஸ்மிதாவின் 25வது ஆண்டு நினைவு நாளில் ‘சில்க்’ ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் P பிள்ளை அவர்களின் தயாரிப்பில் தமிழில் பிரபுதேவா நடிக்கும் மை டியர் பூதம், ஜல்சா, பிளாஷ்பேக், அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ரவுடி பேபி, மலையாளத்தில் மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கும் ராம், கன்னட சூப்பர் ஸ்டார் தர்ஷன் நடிக்கும் ஒரு பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தை தொடர்ந்து 80களின் கனவுக்கன்னி சில்க் ஸ்மிதாவின் 25வது நினைவு நாளான இன்று “சில்க்” என பெயரிடப்பட்டு ஒரு திரைப்படம் தொடங்கப்பட்டிருக்கிறது.

முன்னணி கதாநாயகனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்க படத்தில் நாயகனுக்கு நான்கு ஜோடிகள் 4 நாயகிகளின் தேர்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

வழக்கு எண் 18/9 தனி ஒருவன் திரைப்படங்களின் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இது ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

Silk Kickstarted today in the rememberance of 80’s dream girl SILK’s 25th death anniversary

ரீ-எண்ட்ரீ கொடுக்கும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ பட நடிகை

ரீ-எண்ட்ரீ கொடுக்கும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் சாந்திப்பிரியா.

அவரது முதல் படமே பம்பர் ஹிட்டானதுடன் தமிழக மக்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் மாறினார்.

பிரபல நடிகை பானுப்பிரியாவின் தங்கை தான் இவர். அக்கா போலவே இவரும் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து, தமிழ் தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக மாறினார்.

நீண்ட காலமாக நடிப்பு துறையில் இருந்து விலகி இருந்து இப்போது OTT மூலம் மீண்டும் நடிக்க களமிறங்கியுள்ளார்.

செப்டம்பர் 22 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு சமூக வலைத்தள பக்கத்தில் பலர் வாழ்த்தி வருகிறார்கள்.

திரைத்துறையிலிருந்து விலகிய பிறகு தூர்தர்ஷன் சேனலில் ஆன்மீக தொடர்களில் நடித்து வந்தார்.

2012 க்கு பிறகு முழுக்கவே நடிப்பிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் zee studios original நிறுவனம் Mx player க்காக முன்னணி நாயர்கள் நடிக்க பிரமாண்டமாக தயாராகும் இணைய தொடரில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

Enga Ooru Paattukkaran heroine’s re entry in OTT platform

‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தில் இடம்பெற்ற ‘லல்லாரியோ..’ பாடலின் வீடியோ

‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தில் இடம்பெற்ற ‘லல்லாரியோ..’ பாடலின் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’. இந்தப்படத்திற்காக இசையமைப்பாளர் கிரிஷ் இசையில் பாடலாசிரியர் வே. மதன்குமார் எழுதிய ‘லல்லாரியோ லல்லாரியோ…’ எனத் தொடங்கும் பாடலை பின்னணி பாடகர் வேல்முருகன் பாடியிருக்கிறார்.

இந்த பாடலின் வீடியோவை அமேசான் பிரைம் வீடியோ இன்று வெளியிட்டிருக்கிறது. இந்த பாடலில் படத்தில் இடம்பெற்ற இரண்டு முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையேயான சகோதரத்துவ உறவு அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இதற்கான காணொளிகளில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்திருக்கும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் செப்டம்பர் 24ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்தப் பாடல், டிஜிட்டல் தள பார்வையாளர்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது.

Lallariyo Official Lyric Video Song from Raame Aandalum Raavane Aandalum is out

சர்வதேச திரைப்பட விருது விழாவில் ‘சூரரைப் போற்று’ படைத்த சூப்பர் சாதனை

சர்வதேச திரைப்பட விருது விழாவில் ‘சூரரைப் போற்று’ படைத்த சூப்பர் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாக்களில் கலந்துகொண்டு தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒன்பதாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (SIIMA) வழங்கும் விழாவில் ‘சூரரைப்போற்று’ ஏழு விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டில் அமேசான் ப்ரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியான திரைப்படம் ‘சூரரை போற்று’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த ‘சூரரை போற்று’ 78 ஆவது கோல்டன் குளோப் விருதிற்கான போட்டிப்பிரிவில் இந்தியா சார்பில் திரையிட தேர்வானது.

அதையடுத்து மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற 12-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த படமாக ‘சூரரைப்போற்று’ தேர்வு செய்யப்பட்டது.

அத்துடன் சிறந்த நடிகராக நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒன்பதாவது சைமா (SIIMA) விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படங்களுக்கான பல்வேறு பிரிவுகளில் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இடம்பெற்றது. இதில் சிறந்த நடிகர், சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை (விமர்சகர்), சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி பாடகர் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று, ஏழு விருதுகளை வென்றிருக்கிறது.

இதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில்‌ 2டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார், நடிகை அபர்ணா பாலமுரளி, ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, பாடகர் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதனிடையே சிறந்த படங்களுக்கான ஐஎம்டிபி எனப்படும் சர்வதேச திரைப்படங்களை வரிசைப்படுத்தும் இணையதள பட்டியலில் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட மூன்றாவது படமாக ‘சூரரை போற்று’ (9.1) பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Soorarai Pottru wins big at SIIMA 2021

மக்களின் சந்தேகங்களை தவிடு பொடியாக்கியது ‘கோடியில் ஒருவன்’ – தனஞ்செயன்

மக்களின் சந்தேகங்களை தவிடு பொடியாக்கியது ‘கோடியில் ஒருவன்’ – தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய் ஆண்டனி பேசியது:

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. விழாவின் நாயகன் உண்மையாகவே ஆனந்தகிருஷ்ணன் தான். எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு காரணம் இயக்குனர்தான். இந்தப் படம் மட்டுமல்ல நான் நடித்த அனைத்து படத்திற்குமே இது பொருந்தும்.

ஆனந்த் என்னிடம் கதை சொல்லும் போதே கண் கலங்கி விட்டார். உண்மையான விஜயராகவன் அவர்தான். இயக்குனர்கள் அட்லி ,லோகேஷ் கனகராஜ் போல ஆனந்த கிருஷ்ணனும் விஜய் ,அஜித் போன்றவர்களை வைத்து படம் இயக்க வேண்டும்.

அதற்கு தேவையான அனைத்து தகுதியும் இவருக்கு இருக்கிறது. என் மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா சாருக்கு நன்றி. இந்த கோடியில் ஒருவன் படத்தின் வெற்றி அதில் பணிபுரிந்த அனைவருக்கும் கிடைத்த வெற்றி. மக்களிடம் இந்த படத்தை கொண்டு சேர்த்ததற்கு ஊடக நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

தயாரிப்பாளர் டி .டி ராஜா பேசியவை,

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் போதே ஊரடங்கு வந்தது.6 மாதத்தில் முடிக்க வேண்டிய படம் 20 மாதங்கள் கடந்தது. OTT இல் இப்படத்தை கொடுப்பதற்கு எங்களுக்கு அதிக விலையில் வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் இப்படத்தின் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது .

தியேட்டரில் தான் ரிலீஸ் ஆக வேண்டும் என்று நினைத்து இப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பை மக்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஊடகத்துறையும் ,பத்திரிகை துறையும் தான்.

தனஞ்ஜெயன் பேசியவை,

இரண்டாவது கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மக்களை தியேட்டருக்கு கொண்டுவந்த முதல்படம் கோடியில் ஒருவன் தான். இரண்டாவது கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா இல்லையா என்ற கேள்விகளை தவிடுபொடியாக்கி கோடியில் ஒருவன் ஜெயித்து இருக்கிறது.

இந்த படத்தை எந்தவித பிரச்சனையுமின்றி தயாரித்துக் கொடுத்த தயாரிப்பாளர் ராஜா சாருக்கும் இயக்குனருக்கும் நன்றி. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய இடத்தை அடைவார்.

படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு வருடங்களாக படத்தின் செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்த்த ஊடக நண்பர்களுக்கு நன்றி.

நடிகர் கதிர் பேசியவை,

தமிழ் சினிமாவில் திமிருபிடித்தவன் படத்தின் மூலம் எனக்கு அறிமுகம் கொடுத்தவர் விஜய் ஆண்டனி சார் தான். தற்போது கோடியில் ஒருவன் படம் மூலம் ஒரு அங்கீகாரம் கொடுத்தவரும் விஜய் ஆண்டனி சார் தான் . பிச்சைக்காரன் 2 படத்திலும் நான் நடிக்கிறேன்.

இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் பேசியவை:

என் அம்மாவிடம் நான் சொல்லியிருந்தேன் பத்திரிகையாளர்களை நம்பிதான் நான் படம் எடுக்கிறேன் என்று .எனது கருத்துக்களை மக்களிடம் அவர்கள் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்று நம்பினேன் .நான் நினைத்ததை விட சிறப்பாகவே தற்போது நடந்திருக்கிறது.

மெட்ரோ படத்திற்கு எனக்கு பல பாராட்டுகள் கிடைத்தன .ரசிகர்களுக்கு பிடித்த கமர்சியல் படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது.

இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது என தயாரிப்பாளர் சொல்லும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .இந்த படத்திற்காக எனக்கு அதிக சப்போர்ட் அளித்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. விஜய் ஆண்டனி தான் உண்மையான கோடியில் ஒருவன். கோடியில் ஒருவன் ஜெயிப்பான் என முதலில் நம்பியது விஜய் ஆண்டனி சார் தான்.

இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ,ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .கண்டிப்பாக கோடியில் ஒருவன் 2 படம் இருக்கிறது.

கமல் போக்ரா பேசியவை,

இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மிகப்பெரிய வெற்றியடைய செய்த ஊடக நண்பர்களுக்கு கோடான கோடி நன்றி.கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்காக பல நல்ல படங்களை கொடுப்போம்

Producer Dhananjayan speech at Kodiyil Oruvan success meet

விதார்த் – ரம்யா இணையும் ‘என்றாவது ஒரு நாள்’ படம் நேரடியாக டிவி ரிலீஸ்.?

விதார்த் – ரம்யா இணையும் ‘என்றாவது ஒரு நாள்’ படம் நேரடியாக டிவி ரிலீஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விதார்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி இயக்கத்தில் உருவான படம் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற படம் உருவாகியுள்ளது.

இதில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார்.

‘தி தியேட்டர் பீப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் சென்னை திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை வென்றது.

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.

தண்ணீர் பஞ்சம், குழந்தைத் தொழிலாளர்கள், கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் உள்ளிட்ட கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

தற்போது இந்தப் படம் நேரடியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்தப் படம் நேரடியாக ஒளிபரப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

#EndraavathuOruNaal Direct Television Premiere on 3rd October at 02:30 PM

More Articles
Follows