ஒரு குழந்தைக்கு மட்டும் ரம்ஜான் புத்தாடை வழங்கிய பினராயி விஜயன்; ஏன்?

ஒரு குழந்தைக்கு மட்டும் ரம்ஜான் புத்தாடை வழங்கிய பினராயி விஜயன்; ஏன்?

kerala cmதமிழகத்தில் பிறை இன்று தெரியவில்லை என்பதால் நாளை மே 25ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாப்பட உள்ளதாக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

ஆனால் துபாய், சவுதி உள்ளிட்ட பல நாடுகளிலும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இன்று ரம்லான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தன் மாநிலத்தை சேர்ந்த ஒரு குழந்தைக்கு ரமலான் புத்தாடை எடுத்து கொடுத்துள்ளார்.

அது ஏன் என்ற விவரம் வருமாறு…

கேரளாவில் கொரோனா சிவப்பு மண்டல பகுதியில் வசிக்கும் மக்கள், மளிகைப் பொருட்களை பெற கேரள அரசு தொலைபேசி எண் அறிவித்துள்ளது.

இதில் வயநாடு பகுதியில் வசிக்கும் ஒரு பெற்றோர், தங்களின் 2 வயது குழந்தைக்கு இது முதல் ரமலான் பண்டிகை என்பதால் புத்தாடை வேண்டும் என கேரள அரசை கேட்டு கொண்டுள்ளனர்.

அந்த கோரிக்கையை ஏற்ற கேரள அரசு, அந்த குழந்தைக்காக புத்தாடை வாங்கி டோர் டெலிவரி செய்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரம்ஜான் முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க ஆளுநர் அனுமதி.?

ரம்ஜான் முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க ஆளுநர் அனுமதி.?

liquor shops in pondicherryகொரோனா பொது முடக்கத்தால் கடந்த மார்ச் 24ஆம் தேதியன்று புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்டன.

50 நாட்களை கடந்த வேளையில் கடந்த மே 19 ஆம் தேதியே புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுக்கடைகளை திறக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு ஒப்புதல் கேட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் மதுபானங்கள் மீது கொரோனா (COVID 19) வரி விதிக்க கோரிய கிரண்பேடி, அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.

மேலும் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு இணையாக விலையை உயர்த்தவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் மதுக்கடைகளை திறப்பதில் சிக்கல் நீடிக்கவே மதுப்பிரியர்களை வருத்தமடைய செய்தது.

இந்த நிலையில் கோவிட் வரி விதிப்பதற்கு புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல் அளித்ததால், மதுபான கடைகளை திறப்பது தொடர்பான முடிவுக்கு கிரண்பேடி அனுமதி அளித்தார்.

இதனையடுத்து நாளை மே 25வது நாள் ரம்ஜான் தினத்தன்று புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.

செப்டம்பர் 30-க்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஐகோர்ட் கெடு

செப்டம்பர் 30-க்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஐகோர்ட் கெடு

vishalநடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது.

அதாவது 1 வருடத்தை கடந்துவிட்டது. ஆனால் சங்க தேர்தல் நடைபெறவில்லை.

இதனையடுத்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள என்.சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.

எனவே சிறப்பு அதிகாரி நியமனத்தை ரத்து செய்து, விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என விஷால் சார்பிலும் சங்க உறுப்பினரான ராதாகிருஷ்ணன் என்பவரின் தரப்பிலிருந்தும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறப்பு அதிகாரியின் நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும் இந்தாண்டு 2020 ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதை கருத்தில் கொண்டு, ஜூன் 30 என்ற காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடித்து, அது குறித்த அறிக்கையை அக்டோபர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கு இனி புதிய குரல்..; டப்பிங் கலைஞர் மாற்றம்

நடிகர் சூர்யாவுக்கு இனி புதிய குரல்..; டப்பிங் கலைஞர் மாற்றம்

sathyadev actorசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா இணைந்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று.

ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா பொது முடக்கத்தால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழைப் போல சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல மார்கெட் உள்ளது.

எனவே தெலுங்கிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.

தெலுங்கில் ஆகாசம் நீ ஹதுரா என்ற பெயரில் ரிலீசாகிறது.

சூர்யாவின் தெலுங்கு பதிப்பு படங்களுக்கு ஸ்ரீனிவாஸ மூர்த்தி என்ற டப்பிங் கலைஞர் தான் குரல் கொடுத்து வந்தாராம்.

தற்போது பிரபல நடிகர் சத்திய தேவ் என்பவர் சூர்யாவுக்கு டப்பிங் பேசியிருக்கிறாராம்.

ஏன் இந்த டப்பிங் கலைஞர் மாற்றம் என்ற விவரம் தெரியவில்லை.

ஆஸ்பத்திரியில் அஜித்.. வைரலாகும் வீடியோ.. காரணம் என்ன..?

ஆஸ்பத்திரியில் அஜித்.. வைரலாகும் வீடியோ.. காரணம் என்ன..?

ajith shaliniஎந்தவொரு பொது நிகழ்ச்சி மற்றும் சினிமா நிகழ்ச்சிகளிலும் தலை காட்டாதவர் தல அஜித்.

இவரை பார்க்க வேண்டுமென்றால் திரையில் தான் பார்த்தாக வேண்டும்.

தப்பி தவறி இவர் பொது இடத்தில் எங்கேயாவது தென்பட்டால் இவரை பார்க்க கூட்டம் அலை மோதும்.

அப்படிதான் அஜித்தின் நேற்றைய வீடியோ வைரலானது.

நடிகர் அஜித் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்த படி இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

‘எதற்காக அவர் மருத்துவமனை சென்றார் ?’ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தன் மனைவி ஷாலினியின் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் அஜித்தின் அப்பா உடல் நலமில்லாமல் இருப்பதால் அவரை பார்க்க அவர்கள் சென்றிருக்கலாம் எனவும் ஒரு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

ரூ. 2 கோடிக்கு 200 பேர் முதலீடு; சத்யராஜ் பார்த்திபன் விஜய்சேதுபதி கூட்டணி

ரூ. 2 கோடிக்கு 200 பேர் முதலீடு; சத்யராஜ் பார்த்திபன் விஜய்சேதுபதி கூட்டணி

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.

பல கோடிகள் புரளும் சினிமாவை இந்த ஊரடங்கு கடுமையாக பாதித்துள்ளது. அதிலிருந்து மீள பல புதிய யுக்திகளை திரைத்துறையினர் கையாள உள்ளனர்.

இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, பிரமிட் நட்ராஜன் ஆகியோர் கூட்டணியில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது.

கதையின் நாயகனாக சத்யராஜ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர் பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி. இப்படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் பணிபுரியும் நடிகர்கள் யாருக்கும் சம்பளம் கிடையாது. சொன்ன பட்ஜெட்டில் 2 மாதங்களில் படத்தை முடித்து விட்டு ரிலீஸுக்கு பின் பிசினஸ் செய்து வரும் பணத்தில் அவரவரின் மார்க்கெட் மதிப்புக்கு ஏற்ப தொகை பிரித்து அளிக்கப்படும்.

மேலும் படத்தின் பட்ஜெட்டான 2 கோடியை 200 பங்குகளாகப் பிரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் மூலம் ஒருவர் அதிகபட்சமாக 10 பங்குகளை வாங்கி கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் தானாக முன்வந்து முதலீடு செய்யலாம் என்றும், முழுக்கதையும் தயாராகி, படப்பிடிப்பிற்கு முந்தைய நாளின் போதே முதலீடு ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் முதலில் நேரடியாக திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும், அதன் பிறகு 100 நாட்கள் அல்லது 10 வாரங்கள் இடைவேளைக்கு பிறகே ஒடிடி பிளாட்ஃபார்மில் வெளியாகும் எனவும் தெரிய வந்துள்ளது.

More Articles
Follows