நடிகர்களிலேயே அதிக தொகையை கேரளாவுக்கு நிதியாக அளித்த விக்ரம்

நடிகர்களிலேயே அதிக தொகையை கேரளாவுக்கு நிதியாக அளித்த விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram donates Rs 35 lakhs ot Kerala flood Reliefவரலாறு காணாத கடும் மழை வெள்ளத்தால் கேரளா மாநிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தன் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

மேலும் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜய் நிவாரணத் தொகையாக ரூ. 2000 கோடி கேட்டுள்ள நிலையில் மத்திய அரசு இதுவரை 600 கோடி நிவாரணத் தொகை அளித்துள்ளது.

மேலும் மற்ற மாநிலங்களும் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

இவையில்லாமல் ஒவ்வொருவரும் தங்களால் முயன்ற உதவிகளை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் அவர்கள் ரூ. 35 லட்சத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார்.

நிறைய நடிகர்கள் நிவாரண நிதிகளை அளித்து வந்தாலும் இவரின் நிவாரணத் தொகையை அதிகபட்ச தொகையாகும்.

Vikram donates Rs 35 lakhs to Kerala flood Relief

உங்க ஹீரோஸ் கேரளாவுக்கு எவ்வளவு நிவாரண நிதியளித்தனர்.?

உங்க ஹீரோஸ் கேரளாவுக்கு எவ்வளவு நிவாரண நிதியளித்தனர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Your favorite Actors donation list of Kerala Flood Reliefகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத ஒரு மழை வெள்ளத்தை கேரளா மாநிலம் சந்தித்துள்ளது.

கேரளா மாநிலமே வெள்ளக் காடாக காட்சியளித்து வருகிறது.

எனவே பலரும் தங்களால் இயன்ற தொகையை கேரள மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

தங்கள் அபிமான நடிகர்கள் அளித்துள்ள நிவாரணத் தொகை விவரம் இதோ…

விக்ரம் – 35 லட்சம்
நாகார்ஜூனா குடும்பம் – 28 லட்சம்
மகேஷ்பாபு – 25 லட்சம்
பிரபாஸ் – 25 லட்சம்
மம்முட்டி & துல்கர் சல்மான் – 25 லட்சம்
கமல்ஹாசன் – 25 லட்சம்
விஜய் சேதுபதி – 25 லட்சம்
சூர்யா & கார்த்தி – 25 லட்சம்
ரஜினிகாந்த் -15 லட்சம்
தனுஷ் -15 லட்சம்
விஷால் -10 லட்சம்
சித்தார்த் -10 லட்சம்
நயன்தாரா -10 லட்சம்
உதயநிதி ஸ்டாலின் -10 லட்சம்
சிவகார்த்திகேயன் -10 லட்சம்
அருள்நிதி – 5 லட்சம்
‘அர்ஜூன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா – 5 லட்சம்
நடிகை ரோகினி 2 லட்சம்
கருணாகரன் -1 லட்சம்
அபி சரவணன் 1 லட்சம் நிவாரண பொருட்களுடன் கேரளாவில் களப்பணி

Your favorite Actors donation list of Kerala Flood Relief

விஜய்-ஜெயம் ரவி நடிக்க மறுத்த கதையில் ரோஷனை இயக்கிய சுசீந்திரன்

விஜய்-ஜெயம் ரவி நடிக்க மறுத்த கதையில் ரோஷனை இயக்கிய சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and Jayam Ravi refuse to act in Suseenthirans Geniusஇயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ரோஷன் என்ற புதுமுக நாயகன் தயாரித்து நடித்துள்ள படம் ஜீனியஸ்.

அடுத்த செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது இயக்குனர் சுசீந்தரன் பேசியது :-

நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. நான் இந்த கதையையும் , கதாபாத்திரத்தை பற்றியும் பலரிடம் ஒன் லைனாக கூறியுள்ளேன்.

அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதை எப்படி கதையாக மாற்றுவது என்று பல வருடங்களாக யோசித்து வந்தேன். அது கதையாக மாறிய பின்பு ஜீனியஸ் கதையை விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்த கதையை கூறியுள்ளேன்.

அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது ஆனால் அவர்களால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை.

கடைசியாக இந்த கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது. இப்படம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும்.

எனக்கு ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பி.கே திரைப்படம் மிகவும் பிடிக்கும். அந்த படத்தின் பாதிப்பில் தான் நான் இப்படத்தை இயக்கியுள்ளேன்.

இப்படம் பி.கே போல மெசேஜ் சொல்லும் என்டர்டேயினாராக இருக்கும். இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்குவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் , ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றார் இயக்குனர் சுசீந்திரன்.


நாயகன் ரோஷன் பேசியது

சில வருடங்களுக்கு முன்னால் நான் முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தேன். ஒரு படத்தில் நானும் என்னுடைய நண்பனும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.

அதன் பின்னர் சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து சொந்த தொழிலை பார்க்க சென்றுவிட்டேன். காரணம் வீட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று கூறிவந்தார்கள்.

அதன் பின்னர் சினிமா ஆசை இல்லாமல் தான் இருந்தேன். கல்யாணத்துக்கு பின்னர் என்னுடைய மனைவி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் “ நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கும் ஆசையை கைவிட்டுவிட்டீர்கள் ? “ என்று கேட்டார்.

அப்போது தொடங்கிய விஷயம் தான் இன்று சுசீந்தரன் சார் இயக்கத்தில் ஜீனியஸ் திரைப்படத்தில் நடித்துள்ளேன்.
படம் நன்றாக வந்துள்ளது. நான் தயாரிப்பாளர் மற்றும் நடிகரானதும் என்னுடைய நண்பன் என்னுடைய பிஸ்னஸ்சையும் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டார். அவர் தான் எனக்கு மிகப்பெரிய பலம்.

அதன் பின்னர் எனக்காக சினிமாவை கற்றுக்கொண்ட என்னுடைய நண்பன் என்று நண்பர்கள் பலரின் உதவியால் தான் நான் இன்று இங்கு உள்ளேன். முதலில் ஒரு படத்தை தயாரித்தேன் ஆனால் அது இன்னும் வெளியாகவில்லை.

அதற்கு சில காரணங்கள் உள்ளது. ஜீனியஸ் போன்ற நல்ல படைப்பின் மூலமாக என்னை சினிமாவுக்கும், மக்களுக்கும் அறிமுகம் செய்த இயக்குநர் சுசீந்த்ரனுக்கு நன்றி என்றார் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ரோஷன்.

இதன் பத்ரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன், கேமரா மேன் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குனர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குனர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Vijay and Jayam Ravi refuse to act in Suseenthirans Genius

genius press meet

*சலங்கை ஒலி* பட வரிசையில் நடன விருந்து தரும் *லக்‌ஷ்மி*

*சலங்கை ஒலி* பட வரிசையில் நடன விருந்து தரும் *லக்‌ஷ்மி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhudevas Lakshmi movie will be treat for Dance loversப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் நடனத் திரைப்படம் ‘லக்‌ஷ்மி’. நடனப்புயல் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி ‘தித்யா’ ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய அனுபவங்களை பகிந்து கொண்டனர்.

அப்போது பேசும்போது…

“லக்‌ஷ்மி என் கனவு திரைப்படம். ஒரு டான்சராக இருந்து விட்டு இந்த திரைப்படத்தில் நடித்திருப்பது சிறப்பான அனுபவம். ஐஸ்வர்யா தான் என்னை அழைத்து நீ இந்த படம் பண்ணனும் என்று சொன்னார்.

என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த இயக்குனர் விஜய் சாருக்கு நன்றி. இந்த படத்தில் நடித்த குழந்தைகள் மிகப்பெரிய ஆளாக வருவார்கள்” என்றார் நடிகை ஷோஃபியா.

வனமகன் படத்தை தொடர்ந்து எனக்கு இரண்டாவது முறையாக நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய்க்கு நன்றி. பிரபுதேவா சார் உடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம். குழந்தைகளோடு நடித்தது மிகவும் சவாலாக இருந்தது என்றார் நடிகர் சாம் பால்.

இதுவரை நிறைய ஹாரர், திரில்லர் மாஸ் திரைப்படங்களுக்கு தான் இசையமைத்திருக்கிறேன். முதன் முறையாக ஒரு டான்ஸ் படத்துக்கு இசையமைத்தது, அதுவும் நடனப்புயல் பிரபுதேவா அவர்கள் நடிக்கும், நடனமாடும் படத்துக்கு இசையமைத்தது மகிழ்ச்சியான விஷயம்.

சின்ன வயதில் பிரபுதேவா சார் படங்களை ரசித்து பார்த்து விட்டு, அவர் படத்துக்கு இசையமைப்பது ஒரு சிறந்த உணர்வு. கரு படம் முடிந்தவுடன், மீண்டும் இந்த படத்துக்கு என்னை இசையமைக்க சொன்னார்.

இந்த படத்துக்குள் நடனம் தாண்டி பலவிதமான எமோஷன் இருக்கிறது. எமோஷனல் மியூசிக்கல் டான்ஸ் படமாக வந்திருக்கிறது. இந்த குழந்தைகள் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையில் படம் இருக்கும் என்றார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.

நாசர் சார் மகன் பாஷா என்னிடம் விஜய் சார் ஒரு படம் பண்ண போறார், ஒரு 10 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க் வேண்டும், நடிக்கிறாயா என்று கேட்டார்.

விஜய் சார் கதை சொன்னபோது உடனடியாக ஓகே சொல்லி விட்டேன். திருமணத்திற்கு முன்பே காக்கா முட்டை, ஆறாது சினம், லக்ஷ்மி படங்களில் குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து விட்டேன்.

அவர்கள் ரொம்பவே ஸ்பெஷல். ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் இருந்து நான் வந்திருந்தாலும், இந்த படத்தில் எனக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிரபுதேவா சாருடன் இந்த படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் என்றார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

படத்தை பார்த்த ரவீந்திரன் சார் வாங்கி விட்டார், அதுவே படம் நல்லா இருக்கு என்பதை சொல்கிறது.

இந்திய அளவில் இருக்கும் நல்ல திறமையான குழந்தைகளை தேர்ந்தெடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் விஜய். தேவி, லக்‌ஷ்மி படங்களில் விஜய் இயக்கத்தில் நடித்திருக்கிறேன். அடுத்து தேவி 2 படத்தை எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். ஆர்ட் அசிஸ்டண்ட் மாதிரி ஓடி ஓடி உழைத்திருக்கிறார் கலை இயக்குனர் ராஜேஷ்.

ஐஸ்வர்யா டான்ஸராக இருந்தாலும் இதில் அவருக்கு டான்ஸ் இல்லை, நடிக்க மட்டும் வைத்திருக்கிறோம்.

குழந்தைகள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நான் 4,5 டேக் வாங்கினாலும் குழந்தைகள் குறிப்பாக தித்யா முழு டான்ஸையும் ஆடி முடித்து தான் நிறுத்துவார்.

சலங்கை ஒலி என்ற டான்ஸ் படம் இதற்கு முன்பு வெளிவந்திருக்கிறது. அது வேற லெவல். அதனோடு இதை ஒப்பிட வேண்டாம் என்றார் பிரபுதேவா.

தேவி படம் இயக்கிக் கொண்டிருந்த போது, ப்ரதீக் மற்றும் ஸ்ருதியை சந்தித்தேன். இந்த கதையின் ஐடியாவை சொன்னேன். உடனடியாக இந்த படத்தை தயாரிக்க முன்வந்தனர்.

என்ன தான் கஷ்டப்பட்டு படத்தை எடுத்தாலும் அதை கொண்டு சேர்ப்பது முக்கியம். அந்த நேரத்தில் தான் ரவீந்திரன் சார் படத்தை பார்த்து இந்த படத்துக்குள் வந்தார். பிரபுதேவாவை வைத்து டான்ஸ் படம் பண்ணா எப்படி இருக்கும் என்ற ஐடியாவை எனக்கு கொடுத்தது நிரவ்ஷா தான். பிரபுதேவா சார் டான்ஸ் படம் பண்ணா வேற லெவல்ல இருக்கணும் என்றார்.

இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் அதிக அக்கறை எடுத்து உழைத்து கொடுத்தார். அவர் எங்கள் டீமுக்கு மிகப்பெரிய பில்லர். படத்துக்கு எது தேவை என்றாலும் பிரபுதேவா சாரிடம் தான் போய் நிற்பேன். ஐஸ்வர்யா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஷோஃபியை ஒரு முக்கிய கதாபாத்திரத்துக்கு பரிந்துரைத்ததே ஐஸ்வர்யா தான். ஆண்டனி தான் என் சினிமாவின் முதல் ஆடியன்ஸ். இந்திய முழுக்க நிறைய பேரை ஆடிஷன் செய்து இந்த படத்தில் நடிக்க நடிக்க வைத்திருக்கிறோம்.

பேபி தித்யா இந்த படத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடிப்பார். சாம் சிஎஸ் படத்தின் மிகப்பெரிய பில்லர். அவர் இசை படத்துக்கு மிகப்பெரிய ஆதரவாக அமைந்திருக்கிறது.

ஒரு நல்ல, தரமான படத்தை கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் இயக்குனர் விஜய்.

இந்த சந்திப்பில் கலை இயக்குனர் ராஜேஷ், படத்தொகுப்பாளர் ஆண்டனி, பேபி தித்யா, தயாரிப்பாளர் பிரதீக் சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Prabhudevas Lakshmi movie will be treat for Dance lovers

lakshmi movie press meet at chennai

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்-மாகாபா. ஆனந்த்

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்-மாகாபா. ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Harish Kalyan teams up with MaKaPa Aanad in Ranjith Jeyakodi directionஇளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறியிருக்கிறார் ஹரீஷ் கல்யாண்.

ஹரிஷ் கல்யாண் தனது சமீபத்திய வெற்றிப்படமான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் தனது அழகிய தோற்றம் மற்றும் நடிப்புக்காக மூலை முடுக்கெல்லாம் பாராட்டையும், அன்பையும் பெற்றிருக்கின்றார்.

வேறு எந்த நடிகரும் இந்த நிலையை அடைந்திருந்தால் அதே வழியில் பயணிக்க விரும்புவர். ஆனால் ஹரிஷ் கல்யாண் ஒரு வித்தியாசமான அவதாரம் எடுக்க முயற்சிக்கிறார்.

ஆம், புரியாத புதிர் புகழ் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தை பற்றிய விஷயம் தான் இது. நிச்சயம் அது ஒரு தூய காதல் கதையாக, அதே நேரத்தில் மிகவும் அழுத்தமான படமாக இருக்க போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது…

“ஆம், இது தனித்துவமான முறையில் சொல்லப்படும் பயண பின்னணியிலான ஒரு பிடிவாதமான காதல் கதை. ஹரீஷ் கல்யாண் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்.

மேலும் அவரது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் இந்த படம் அவரை அடுத்த நிலைக்கு நிச்சயமாக உயர்த்தும்.

ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தின் நாயகியாக நடிக்கிறார். அவருடைய கதாப்பாத்திரமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.

மா கா பா ஆனந்த், பாலசரவணன், பொன்வண்ணன் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

ரஞ்சித் ஜெயக்கொடியின் முந்தைய படமான புரியாத புதிர் படத்தில் இசை விருந்து வைத்த சாம் சி.எஸ் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பயண பின்னணியில் உருவாகும் இந்த படம் சென்னையிலும், மிகவும் அழகான லே மற்றும் லடாக் பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது.

இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் படக்குழு, படத்தின் தலைப்பு மற்றும் சிங்கிள் பாடல் ஒன்றையும் அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறது.

மாதவ் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் பாலாஜி கப்பா இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

Harish Kalyan teams up with MaKaPa Aanad in Ranjith Jeyakodi direction

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலையாளிகளுக்கு ரஜினி நிதியுதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலையாளிகளுக்கு ரஜினி நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவில் கடந்த பல நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது.

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர்.

இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பலரும் கேரளாவுக்கு உதவி வரும் நிலையில், சினிமா பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் 25 லட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 லட்ச ரூபாய், விஷால் 10 லட்ச ரூபாய், ஸ்ரீபிரியா 10 லட்ச ரூபாய், தென்னிந்திய நடிகர் சங்கம் 5 லட்ச ரூபாய், ரோகிணி 2 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர்.

மேலும், விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய், தனுஷ் 15 லட்ச ரூபாய், சித்தார்த் 10 லட்ச ரூபாய், நயன்தாரா 10 லட்ச ரூபாய், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்ச ரூபாய், இயக்குநர் ஷங்கர் 10 லட்ச ரூபாய் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 15 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயும், வீடு இழந்தவர்களுக்கு 8 லட்ச ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த நிவாரணத்துக்காக நிதி உதவி செய்யுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Rajinikanth donates Rs 15lakhs to Kerala flood relief

More Articles
Follows