தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மார்க்கெட் இருக்கும்போதே நடிகைகள் மற்ற துறைகளிலும் கவனம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதற்கு காரணம், சினிமா மார்கெட்டை இழந்துவிட்டால் மற்ற துறையாவது கைகொடுக்குமே என்பதுதான்.
பல நடிகைகள், ரியல் எஸ்டேட், நட்சத்திர ஹோட்டல் போன்றவற்றில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதுப்போல் சிலர் பேஷன் டிசைன் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தொடரி படத்தின் பாடல்கள் வெளியீட்டின் போது கீர்த்தி சுரேஷ் அழகான வெள்ளை நிறை ஆடை உடுத்தி தேவதை போல காட்சியளித்தார்.
இதுகுறித்து ட்விட்டரில் கீர்த்தி கூறியுள்ளதாவது…
“நானே இந்த ஆடையை டிசைன் மற்றும் ஸ்டைலிங் செய்துள்ளேன். எனக்கு மிகவும் சந்தோஷமாகவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அட… கீர்த்திக்கு பேஷன் டிசைனிங்கும் கைகொடுக்கும் போலவே…