*கருப்பு காக்கா* படத்தில் கதாநாயகனாக மொட்ட ராஜேந்திரன்

Karuppu Kaaka First Look Poster released by SD Vijaymiltonநான் கடவுள் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்தார் ராஜேந்திரன்.

ஆனால் அதன்பின்னர் காமெடி கேரக்டர்களில் நடிக்கத் துவங்கி தற்போது முன்னணி காமெடியனாக மாறிவிட்டார்.

இவரது கால்ஷீட் இல்லாமல் பேய் படங்களே இல்லை என்னுமளவுக்கு நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது ‘கருப்பு காக்கா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாவும் அவதாரமெடுத்திருக்கிறார்.

தருண் பிரபு இயக்கும் இந்த படத்தில் மொட்டை ராஜேந்தரன் கதையின் நாயகனாக நடிக்க டேனியல் ஆனிபாப் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இவர்களுடன் ‘ராட்டிணம்’ படப் புகழ் ஸ்வாதி, ஜார்ஜ் , ஆதித்யா டிவி டாப்பா, அஞ்சலி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இது பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுதிறேன்னு போன ஒரு நபரோட வாழ்க்கையில நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காமெடி மற்றும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமா படமாக்கப்பட்டது.

இந்த படத்தின் ஒளிப்பதிவை விஜய் வல்சன் கவனிக்க, வெங்கட் ஜோதி இசை அமைக்கிறார். பி.எஸ்.பிரகாஷ், என்.வசந்த் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் ஃபரஸ்ட் லுக் போஸ்டரை விஜய் மில்டன் வெளியிட்டார்.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Karuppu Kaaka First Look Poster released by SD Vijaymilton

Overall Rating : Not available

Related News

Latest Post